சந்திராஷ்டமம் இருப்பதால் எந்தெந்த ராசிகளுக்கு கவனமும் நிதானமும் தேவை !!

ஆன்மீகம்

இந்த ராசிகளுக்கு சந்திராஷ்டமம் …..

சார்வரி வருடம் மாசி 24ஆம் தேதி மார்ச் 8, 2021 திங்கட்க்கிழமை. தசமி திதி மாலை 03.45 மணிவரை அதன் பின் ஏகாதசி திதி. பூராடம் நட்சத்திரம் இரவு 08.40 மணிவரை அதன் பின் உத்திராடம் நட்சத்திரம். சந்திராஷ்டமம் என்பது ஒரு ராசியில் இருந்து எட்டாவது ராசியில் சந்திரன் சஞ்சரிக்கக்கூடிய காலமாகும். இதை மிகச் சரியாகக் குறிப்பிட்டுச் சொல்வதென்றால் ஒரு நட்சத்திரத்துக்குப் பதினேழாவது நட்சத்திரத்தின் பாதத்தில் சந்திரன் சஞ்சரிக்கும்போது அந்த நட்சத்திரத்துக்கு சந்திராஷ்டமம்.

ஜோதிடத்தில் ராசிபலன் பார்க்கும்போது பலரும் கவனிக்கும் அம்சங்களில் ஒன்று சந்திராஷ்டமம் ஆகும். சந்திராஷ்டமம் என்றால், அன்றைக்கு எதிலும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். புதிய முயற்சிகளிலும் ஈடுபடக்கூடாது என்று கூறுவார்கள். அதற்குக் காரணம், ஒருவருடைய மனதுக்கு அதிபதி சந்திரன். சந்திராஷ்டமம் என்றாலே, இன்றைக்கு எல்லோர் மனதிலும் ஒருவித அச்ச உணர்வு ஏற்படுகிறது. ஆனால், அப்படிப் பயப்படத் தேவையில்லை. சந்திராஷ்டமம் எல்லா நட்சத்திரக்காரர்களுக்கும் தொல்லை தராது.

மேலும் ரிஷபம் மற்றும் கடக ராசியில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் நல்லது மட்டுமே செய்யும்” என்று கூறினார்.
உண்மையில் சந்திராஷ்டமம் என்பது எல்லோருக்கும் கெடுதல் செய்யுமா என்றால் அதுதான் இல்லை என்கிறார் ஜோதிட நிபுணர் பெருங்குளம் ராமகிருஷ்ணன். நம்மிடம் சந்திராஷ்டமம் பற்றிப் பேசும்போது உதாரணமாக விருச்சிகராசியில் சந்திரன் சஞ்சரிக்கும்போது, அந்த ராசி மேஷ ராசிக்கு எட்டாவது ராசியாக அமைகிறது. எனவே விருச்சிக ராசியில் சந்திரன் இருக்கக்கூடிய இரண்டே கால் நாள்கள் மேஷ ராசிக்கு சந்திராஷ்டம நாள்களாகும்.

ஆனால், மேஷராசியில் பிறந்தவர்கள் அனைவருக்கும் இரண்டே கால் நாள்கள் சந்திராஷ்டமம் என்று சொல்லிவிட முடியாது. அவர் ஒரு ராசிக்கு எட்டாவது வீட்டில் மறைவு பெற்றிருக்கும்போது, மனதில் தேவையற்ற சஞ்சலங்கள் ஏற்படக்கூடும். மனம் அமைதியின்றி தவிக்கவும் நேரிடும். தெளிவான முடிவுகளை எடுக்க முடியாமல் போகும். எனவேதான் பெரும்பாலானோர் சந்திராஷ்டம தினங்களில் எந்த ஒரு புது முயற்சியிலும் ஈடுபடாமல், வழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவேண்டும் என்று முடிவு செய்வர்.

சந்திரன் இன்றைய தினம் தனுசு ராசியில் பயணம் செய்கிறார். ரிஷப ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் பயணங்களில் தடை வரும் கவனமும் நிதானமும் தேவை. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் பரிகாரங்களை பார்க்கலாம்.

விடியோவை பார்வையிட கீழேயுள்ள லிங்க் ஐ பார்க்கவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *