பணக்கார குருவின் மாற்றம் யாருக்கெல்லாம் அதிஷ்டம் !… இந்த நாலு ராசிக்கும் செம்ம யோகம் கிடைக்க போகுதாம் !!

ஆன்மீகம்

ராசி, நட்சத்திரம் பார்த்து பேரு வச்சி….

வீடு கட்டி, குடிபோகி, வேலை தொடங்கி இப்படி இந்தியர்கள் ஜோதிடத்து மேல மிக்க நம்பிக்கை கொண்டிருக்குறது அறிவியல் பூர்வமாவும் நன்மை செய்யும்னு நிறைய பேரு நம்புறாங்க. ராசிக்கு ஏற்ற மாதிரி கோயில்கள் பரிகாரங்கள் செய்து, தனக்கு வர இருந்த கண்டங்கள காணாம போகச் செய்து, வெற்றியின் உச்சிக்கு சென்றவர்கள் பலர்,. யோகமும், ராசியில் நல்ல நிலையும் இருந்தால் எப்பேர் பட்டவர்களும் தங்கள் கல்வி, செல்வம் இரண்டிலும் பணக்காரராகிவிடுவார்கள்.

அறியாமையை போக்கும் கல்வியையும், ஏழ்மையை போக்கும் செல்வத்தையும் ஒருசேர தர வல்ல ராசி நாயகன்தான் குரு. அவர் விருச்சிக ராசிக்கு இடம்பெயர இருக்கிறார். அதனால் கீழ்காணும் நான்கு ராசிக்காரர்களுக்கு செல்வ வளத்துக்கு குறைவில்லாமலும், கல்வியும் பெறுவார்கள். மற்றவர்களும் கவலைப் படத் தேவையில்லை.

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான தண்டாயுதபாணி கோயில், பழநி மலையின் உச்சியில் கம்பீரமாக அமைந்துள்ளது. 600 படிக்கட்டுகளில் ஏறி பழநி ஆண்டவரை பலர் தரிசிக்கின்றனர். இந்த கோயிலில் சென்று வழிபட்டால் மேஷ ராசிக்காரர்களுக்கு சிறப்பான எதிர்காலம் அமையுமாம். வீரமும் கோபமும் தைரியமும் ஒருங்கே அமையப்பெற்ற மேஷ ராசிக்காரர்கள்,

முதலிடத்தை தக்க வைத்துக் கொள்ள மிகுந்த போராட்டம் இருக்குமாம். குரு பகவானால் பெரியதாக லாபம் இல்லை. எனினும் இந்த கோயிலுக்கு சென்று வந்தால் சில மாற்றங்கள் நிகழலாம். புளியரை தட்ணாமூர்த்தி கோயில் திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது இந்த கோயில். பசுமை கொஞ்சும் பக்த தலமாக திகழ்ந்து வரும் இந்த புளியரை தட்ணாமூர்த்தி கோயிலுக்கு மேஷ ராசிக்காரர்கள் சென்று வர குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

வருமானம் உயர்ந்து குடும்பத்தில் திருமண பேச்சு நடக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை மேம்படும். இந்த கோயிலில் சதாசிவ மூர்த்தி, சிவகாமி அம்மையார் கோயிலில் தனி சன்னதியில் குருபகவான் தட்சனாமூர்த்தி அமர்ந்து அருள்பாலிக்கிறார். புளியமரத்தின் பொந்திலிருந்து வெளிப்பெயர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பதால் இந்த கோயிலுக்கு இப்படி பெயர் வந்தது.

ரிஷப ராசிக்காரர்கள் கோயம்புத்தூரில் இருந்து சத்தியமங்கலம் செல்லும் சாலையில் உள்ள கோவில்பாளையத்தில் அருள்பாலிக்கும் கால காலேஸ்வரரை தரிசித்து வழிபடவேண்டும். நந்தி பகவானின் அருள்பெற்ற ராசியாக ரிஷபம் உள்ளதால், இவர்களின் வழிபாட்டுக்கு இந்தக் கோவிலே ஏற்றது. ரிஷப ராசியுடையோர் மூலவருக்கு தும்பைப் பூ மாலை அணிவித்து வழிபட செல்வம் கொட்டும்.

சந்திரன் ஆயக்கலைகள் அறுபத்து நான்குக்கும், தாய்க்கும் உரிய கிரகமாகவும் விளங்குகிறார். ஆகவே, விழுப்புரம் அருகே உள்ள திருவக்கரையில் மூன்றாம் பிறையுடன் அருள்பாலிக்கும் சந்திரமெளலீஸ்வரரை கடக ராசி உடையோர் வழிபட பொருட்செல்வம் மட்டுமின்றி மக்கள் செல்வம், உறவினர்கள் மரியாதை, தொழில் லாபம் உள்ளிட்டவையும் தேடி வரும். வராக நதிக்கரையோரம், பல்லவர்களின் கலைவண்ணத்தில் உருவான இந்தக் கோவில் மிகவும் பழைமையானது. இங்குள்ள சித்தர் சந்நிதியில் அமர்ந்து தியானிப்பது வேறெங்கும் காணக்கிடைக்காத வரமாகும்.

திண்டுக்கல் மாவட்டம் வேடச் சந்தூரில் அமர்ந்திருக்கும் நரசிம்மரை வழிபட்டு வருவது தனுசு ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பானதாக அமையும். இந்த தலத்தில் நரசிம்மர் , தன் இரு தேவிமார்களுடன் அமைந்திருக்கிறார். இந்த கோயிலில் இருக்கும் ஆஞ்சநேயருக்கு மிகவும் பிடித்த ராசி தனுசுதானாம். ஆயுள் கெட்டிப்படும், திருமணத் தடை விலகி குடும்பத்தில் நல்லது நடக்கும்.

நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே அமைந்துள்ள கல்யாண பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலுக்கு சென்று வழிபட்டு வந்தாலும் தனுசு ராசிக்காரர்களுக்கு வரும் வருடங்கள் செல்வம் நிறைந்தவையாக மாறும். பண வரவுக்கு பஞ்சமில்லை அதே போல சுப விரைய செலவுகளும் அதிகம் ஏற்படும். வாழ்க்கைத்துணையுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட வேண்டாம். காதல் விவகாரங்கள் கை கூடுவதில்லை கொஞ்சம் ஒத்திப்போடவும். அவ்வப்போது உடல் களைப்பு ஏற்படும் என்பதால் சத்தான உணவுகளை சாப்பிடவும்.

திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் திருவேங்கடநாத புரம் பெருமாள் கோயிலுக்கு சென்று வந்தால் சகல யோகங்களும் இல்லம் வந்து சேரும். புதன், வெள்ளி, சனிக்கிழமைகளில் ஆலயத்துக்கு சென்று வழிபடவேண்டும். மேலும் கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி, குடும்பத்தில் சந்தோஷங்களைப் பார்க்கலாம்.

குடும்ப தேவைக்காக புதிய பொருட்களை வாங்கலாம். எந்த காரியத்தையும் ஒரு முறைக்கு பல முறை யோசித்து செய்யுங்கள். பத்தில் உள்ள குரு பதவியை ஒன்றும் நாசம் செய்ய மாட்டார் கவலை பட வேண்டாம். நன்மையே நடக்கும். அல்லது அருகிலுள்ள அம்மன் கோயில் ஒன்றிற்கு சென்று வாராவாரம் பூசை செய்து வழிபடுதல் சிறந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *