உச்சம் பெற்று சஞ்சரிக்கும் சுக்கிரன்! யாருக்கு பே ர ழிவு? யார் யாருக்கெல்லாம் கோடி நன்மை தெரியுமா !!

ஆன்மீகம்

இன்றைய ராசிபலனில் …….

கும்ப ராசியில் இருந்து இடப்பெயர்ச்சியாகும் சுக்கிரன் சில வாரங்கள் மீன ராசியில் சூரியனுடன் இணைந்திருப்பார். சுக்ரன் அடிக்கடி ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயர்வார். மீனம் அவரது உச்சவீடாகும்.உச்சம் பெற்ற சுக்கிரன் ஐந்து மடங்கு பலத்துடன் இருப்பார் பலன்களை வாரி வழங்குவார். தனது 7வது பார்வையால் கன்னி ராசியை பார்க்கிறார். இந்த சுக்கிரப் பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு சுகபோகங்களை அள்ளித்தரும். சில ராசிக்காரர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். யாருக்கு யோகங்கள் கிடைக்கப் போகிறது என்று பார்க்கலாம்.

மேஷம்
சுக்கிரபகவான் உங்கள் ராசியின் 2வது 7வது அதிபதியானவர். சுக்கிரன் உங்கள் ராசிக்கு 12வது இடத்தில் உச்சம் பெற்று அமரப்போகிறார் சுக்கிரன் 12வது வீட்டிற்கு செல்வதால் சிலருக்கு வெளிநாட்டு வாய்ப்பை எற்படுத்தி கொடுக்கும். படிப்புக்காக சிலர் வெளிநாடு செல்வார்கள். பணவரவு அதிகரித்தாலும் விரைய ஸ்தானத்தில் சுக்கிரன் அமர்வதால் வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவார்கள். வாழ்க்கை துணையுடன் அந்நியோன்னியம் அதிகரிக்கும். உங்கள் செலவுகளை சுப செலவுகளை மாற்றுங்கள். வெள்ளிக்கிழமைகளில் பெருமாள் கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி வணங்கலாம்.

ரிஷபம்
உங்கள் ராசிநாதன் சுக்கிரன் ராசிக்கு 11வது இடமான லாப ஸ்தானத்தில் உச்சம் பெற்று சஞ்சரிப்பதால் நல்ல தன வரவு உண்டாகும். மூத்த சகோதரர்களின் உதவி கிடைக்கும். மனைவி வகையில் பண வரவு கிடைக்கும். பல வழிகளில் இருந்தும் பணம் வரும். சமூகத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். சுப காரிய நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்பீர்கள். வெள்ளிக்கிழமைகளில் துர்க்கை தேவியை வணங்குங்கள். வெள்ளிக்கிழமைகளில் பாயாசம் செய்து பூஜை அறையில் வைத்து வணங்கி அக்கம் பக்கத்தினருக்கு கொடுக்கலாம்.

மிதுனம்
சுக்கிரன் உங்கள் ராசிக்கு 10வது இடத்தில் சஞ்சரிக்கிறார். தொழில் ஸ்தானத்தில் சுக்கிரன் சஞ்சரிப்பதால் நல்ல வேலை கிடைக்கும். உங்கள் வேலையில், தொழிலில் இருந்த சுணக்கநிலை மாறும். பணியிடங்களில் அமைதியாகவும் அன்பாகவும் பேசவும். வேலை பார்க்கும் இடத்தில் வார்த்தைகளில் கவனம் தேவை. எதிர்பாலினத்தவர்களிடம் அதிக இடைவெளி விட்டு பழகுவது பாதுகாப்பானது. வெள்ளிக்கிழமைகளில் லட்சுமி தேவியை வெண்தாமரை மலர்களால் அர்ச்சனை செய்து வணங்குங்கள். இனிப்பு தானமாகக் கொடுங்கள்.

கடகம்
கடகம் ராசிக்கு 9ஆம் இடமான மீனத்தில் சுக்கிரன் சஞ்சரிக்கிறார். குடும்பத்திலும் தொழிலில் நண்பர்களுடனும் உறவு உற்சாகமாக இருக்கும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். காதலிப்பவர்களுக்கு இந்த மாதம் குதூகலமாக அமையும். நீண்ட பயணத்திற்கு வாய்ப்பு உண்டு. குடும்பத்தோடு ஆன்மீக சுற்றுலா சென்று வரவும். காதலியுடன் உற்சாகமாக இருக்கலாம். தொழில் வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். சிவபெருமான் ஆலயத்திற்கு பச்சரிசி தானமாக வாங்கிக் கொடுக்கலாம்.

சிம்மம்
உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் அமர்கிறார் சுக்கிரன். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். உணவு விசயத்தில் கவனம் தேவை. உடல் நலம் சற்றே பாதிப்படையும். குடும்பத்தில் மனைவியின் உடல் நலத்தில் கவனம் வைக்கவும். இருவருமே கவனமாக இருந்தால் பா தி ப் பை தவிர்க்கலாம். பணப்புழக்கம் தாராளமாக இருந்தாலும் பத்திரமாக பாதுகாப்பது அவசியம். விலை உயர்ந்த நகைகளை கவனமாக வைத்திருக்கவும். சூரிய நமஸ்காரம் தவறாது செய்யவும்.

கன்னி
காதல் நாயகன் சுக்கிரன் உங்கள் ராசிக்கு 7ஆம் இடத்தில் சஞ்சரிக்கிறார். உச்சமடைந்த சுக்கிரனின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைக்கிறது. வாழ்க்கை துணை உடனான காதல் உணர்வுகள் அதிகரிக்கும். . சிலருக்கு காதல் கணிந்து திருமணத்திலும் முடிய வாய்ப்பு உள்ளது. சிங்கிள்ஸ் ஆக இருந்தவர்களுக்கு புதிதாக காதல் தோன்றும். வாழ்க்கைத்துணைகளை தேர்வு செய்வதில் கவனம் தேவை. அலுவலகத்தில் எதிர்பாலினத்தவர்கள் விசயத்தில் சற்று கவனமாக இருக்கவும். விநாயகரை அருகம் புற்களால் அர்ச்சனை செய்து வணங்கவும்.

துலாம்
உங்கள் ராசி நாயகன் சுக்கிரன் உங்கள் ராசிக்கு 6வது இடத்தில் உச்சமடைகிறார். இது சிறப்பான காலகட்டம். எதிரிகள் தொல்லை நீங்கும். பணியிடங்களில் கடும் உழைப்பை கொடுக்க வேண்டிய காலமிது. வீட்டில் வாழ்க்கைத்துணையினால் சின்னச்சின்ன சச்சரவுகள், ஊடல்கள் ஏற்பட்டு அதனால் சிலருக்கு மன அழுத்தம் ஏற்படும். பணத்தை சொத்துக்களில் முதலீடு செய்யுங்கள். உங்கள் உடல் நலனையும் பாக்கெட்டில் உள்ள பணத்தையும் கவனமாக பார்த்துக்கொள்ளவும். வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியை வெள்ளை நிற மலர்களால் அர்ச்சனை செய்து வணங்குங்கள்.

விருச்சிகம்
காதல் நாயகன் சுக்கிரன் உங்கள் ராசிக்கு 5ஆம் இடத்தில் பயணம் செய்கிறார். வாழ்க்கைத் துணை மீது காதல் மழை பொழியும் நேரமிது. சிலருக்கு காதல் மலரும் காலமிது. காதலிக்கும் பெண்ணிடம் தைரியமாக காதலை சொல்லலாம். வீட்டில் மனைவி, குழந்தைகள் மீது அன்பும் பாசமும் அதிகரிக்கும். கற்பனை வளமும் அழகுணர்ச்சியும் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையை அழைத்துக்கொண்டு உல்லாச பயணம் செல்லலாம். சர்க்கரையை தானமாக கொடுக்கலாம் நன்மைகள் அதிகரிக்கும்.

தனுசு
உங்கள் ராசிக்கு 4வது இடத்தில் சுக்கிரன் உச்சம் பெற்று சஞ்சரிப்பதால் வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். சிலர் வீடுகளை பராமரிப்பு செய்வீர்கள். வீட்டுக்குத் தேவையான அலங்கார பொருட்களை வாங்கி வீட்டை அழகு படுத்துவீர்கள். தாயாரின் உடல் நலத்தில் சற்றே கவனம் செலுத்த வேண்டும். மனைவி குழந்தைகளினால் மகிழ்ச்சி ஏற்படும். சிவபெருமான் பார்வதியை பச்சரிசி கொண்டு வணங்கலாம். வெண் சந்தனம் வாங்கி அபிஷேகத்திற்குக் கொடுக்கலாம்.

மகரம்
உங்கள் ராசிக்கு 3வது வீட்டில் சுக்கிரன் உச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். முயற்சி ஸ்தானத்தில் குடியேறும் சுக்கிரனால் பணியிடத்தில் உயர்பதவிகள் தேடி வரும். உங்கள் நட்பு வட்டம் அதிகரிக்கும். உங்களின் பேச்சுத்திறமையும், அழகியல் உணர்வும் அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும் வாகன பயணத்தில் கவனம் தேவை. வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவிலுக்கு சென்று வணங்குங்கள். பாயசம் நிவேதனம் செய்து தானமாகக் கொடுக்கலாம். டயமண்ட் கல்கண்டு தானமாகக் கொடுங்கள்.

கும்பம்
உங்கள் ராசிக்கு இரண்டாம் இடத்தில் சுக்கிரன் உச்சம் பெற்று சஞ்சரிப்பதால் கணவன் மனைவி உறவில் உற்சாகம் பிறக்கும். வீட்டில் சந்தோச அலைகள் வீசும். பண வரவு அதிகரிக்கும் வீட்டிற்கு தேவையாக பொருட்களை வாங்கி சேர்ப்பீர்கள். தொழில் நண்பர்களுடன் உறவு மேம்படும். வீட்டில், சமூகத்தில் மதிப்பு மரியாதை கூடும். பேசும் வார்த்தைகளில் இனிமை அதிகரிக்கும். சிலருக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். திருமணம், விருந்து விஷேசங்களுக்கு சென்று வருவீர்கள். வெள்ளிக்கிழமைகளில் வெண் சந்தனத்தை சிலருக்கு தானமாக கொடுக்கவும்.

மீனம்
சுக்கிரன் உங்கள் ராசியில் உச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். பெண்களுக்கு பொன் நகைகள் சேர்க்கை ஏற்படும். சிலருக்கு காதல் உணர்வுகள் அதிகரிக்கும். உஷ்ணமான சூரியனுடன் குடியேறும் சுக்கிரனால் சில சிக்கல்கள் வரலாம். ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டும். பண வருமானம் அதிகரிக்கும். பேச்சில் இனிமை அதிகரிக்கும். முகப்பொலிவும் கூடும். வெள்ளிக்கிழமைகளில் வெண் தாமரை மலர்களால் தாயாரை அர்ச்சனை செய்து வணங்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *