தமிழ் புத்தாண்டு ராசிபலன்… பிலவ ஆண்டில் அ டி த்து தூள்பறக்கப்போகும் ராசி யார் யார்னு தெரியுமா !!

ஆன்மீகம்

பிலவ ஆண்டில் …

மங்களகரமான பிலவ வருடம் பிறக்கப் போகிறது. சார்வரி வருடம் பலருக்கும் கொரோனா அச்சத்துடன் கடந்து விட்டது. இந்த பிலவ ஆண்டிலாவது மன அழுத்தம் நீங்கி மகிழ்ச்சி கிடைக்குமா என்று பலரும் நினைக்கலாம். நவ கிரகங்களின் சஞ்சாரம், கிரகங்களின் கூட்டணி, பார்வையால் பிலவ ஆண்டில் எந்த ராசிக்காரர்களுக்கு சங்கடங்கள் நீங்கி சந்தோஷம் அதிகரிக்கும். தொழில் வேலையில் முன்னேற்றம் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

பிலவ ஆண்டு சித்திரை 1ஆம் தேதி புதன்கிழமை சுக்கிலபட்சம் துவிதியைத் திதி பரணி நட்சத்திரம், சித்தயோகம் கூடிய சுபயோக சுப தினத்தில் பிறக்கிறது. பிலவ ஆண்டு பிறக்கும் போது மேஷ ராசியில் ராஜ கிரகமான சூரியன் உச்சம் பெற்றிருக்க கூடவே புதன், சுக்கிரன், சந்திரன் இணைந்துள்ளனர். ரிஷபத்தில் செவ்வாய் ராகு, விருச்சிகத்தில் கேது, மகரத்தில் சனி, கும்ப ராசியில் குரு என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. இந்த கிரகங்களின் கூட்டணியால் மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம் ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.

மேஷம்
பிலவ வருடம் பொருளாதார முன்னேற்றம் அதிகரிக்கும் ராசி நாதன் செவ்வாய்க்கு இந்த ஆண்டில் துவக்கத்திலேயே குருவின் பார்வையில் கிடைப்பது யோகம். சுக்கிரன் உங்கள் ராசியில் சஞ்சரிப்பதால் தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். செய் தொழிலில் லாபம் கிடைக்கும்.வேலை உத்தியோகஸ்தர்களுக்கு புரமோசனும் சம்பள உயர்வும் கிடைக்கும். முயற்சிகளுக்கு வெற்றி உண்டாகும். திருமண யோகம் கை கூடி வரும். உடல் ஆரோக்கியம் அற்புதமாக அமையும். நம்பிக்கை அதிகரிக்கும்.இந்த ராசியில் பிறந்துள்ள அரசியல்வாதிகளுக்கு வெற்றிகரமான ஆண்டாக அமைந்துள்ளது.

அரசு வேலையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடத்திற்கு புரமோசன் கிடைக்கும். ராணுவம், காவல்துறையைச் சேர்ந்தவர்களுக்கு இந்த ஆண்டு சிறப்பான ஆண்டாக அமைந்துள்ளது. புகழும் விருதுகளும் தேடி வரும்.வியாபாரிகளுக்கு நல்ல தன லாபம் கிடைக்கும். பங்குச்சந்தை மார்க்கெட்டில் செய்யும் முதலீடுகளில் நல்ல லாபம் கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் அதிகம் நடைபெறும். உறவினர்கள் வீட்டு விஷேசங்களில் பங்கு பெறுவீர்கள். கணவன் மனைவி உறவு சந்தோஷமாக இருக்கும். வருமானம் அதிகரிக்கும்.நோய் நொடிகள் நீங்கி உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். இந்த ஆண்டு ஆன்மீக பயணங்கள் அதிகம் செல்வீர்கள். செவ்வாய்கிழமைகளில் கந்த சஷ்டி கவசம் சொல்லி முருகப்பெருமானை வணங்குங்கள். நன்மைகள் அதிகம் நடைபெறும். சிவப்பு நிற ஆடைகளை தானமாக கொடுங்கள்.

ரிஷபம்
சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட ரிஷப ராசிக்காரர்களுக்கு செல்வாக்கு சொல்வாக்கு அதிகரிக்கும். பொருளாதார முன்னேற்றம் அதிகரிக்கும். தொழில் வியாபாரம் நன்றாக இருக்கும். வேலையில் புரமோசனும் சம்பள உயர்வும் கிடைக்கும். வீடுகளை விட்டு பிரிந்திருந்தவர்கள் இந்த ஆண்டு குடும்பத்தினருடன் இணைவார்கள். வீட்டுக்கடன் கிடைக்கும். சொத்துக்கள் வாங்குவீர்கள்.பிலவ ஆண்டு பெண்களுக்கு மிகச்சிறந்த ஆண்டாக அமைந்துள்ளது. ராஜயோக அமைப்பாக அமைந்துள்ளது.

எதிர்பார்ப்புகள் நிறைவேறும். ரிஷப ராசியில் பிறந்த அரசியல்வாதிகளுக்கு இது ராஜயோகங்களைத் தரக்கூடிய ஆண்டாக அமைந்துள்ளது. பாராட்டுக்களும் அரச பதவிகளும் தேடி வரும். விவசாயிகளுக்கு மகசூல் அதிகரிக்கும். நிறைய தனலாபம் உண்டாகும். கலைத்துறையினருக்கு உலக அளவில் புகழம் பாராட்டுக்களும் கிடைக்கும். பிள்ளைகளால் நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். சுப காரியங்கள் நடைபெறும். பெண்களுக்கு பொன் பொருள் சேர்க்கை ஏற்படும். வீடு நிலம் வாங்குவதற்காக யோகம் கை கூடி வந்துள்ளது. பௌர்ணமி நாட்களில் கிரிவலம் வந்து சிவ ஆலயம் சென்று வணங்கலாம் நன்மைகள் நடைபெறும்.

மிதுனம்
புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்டவர்களுக்கு பிலவ ஆண்டு அற்புதங்களை நிகழ்த்தப் போகிறது. நல்ல வேலை கிடைக்கும். அஷ்டமத்து சனி மன அழுத்தத்தை கொடுத்துக் கொண்டிருக்கும். குடும்பத்தில் சந்தோஷமில்லாத நிலை இல்லாமல் இருந்தது.குருவின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் எதையும் தைரியமாக எதிர்கொள்வீர்கள் குறைகள் நீங்கி சந்தோஷம் அதிகரிக்கும். திருமண சுப காரியம் ஏற்படும். குழந்தைகள் சொல் பேச்சு கேட்பவர்களாக மாறுவார்கள். புத்திசாலித்தனமாக எதையும் எதிர்கொள்வீர்கள்.

இந்த ஆண்டு பொருளாதார நெருக்கடிகள் நீங்கும் மன நிம்மதி அதிகரிக்கும். அஷ்டமத்து சனியால் அரசியல்வாதிகளுக்கு தடைகளைத் தாண்டி முன்னேற்றம் உண்டாகும். வெற்றிகள் கிடைத்தாலும் பதவி எதுவும் கிடைக்க வாய்ப்பு இல்லை. முதலீடுகளை பெரிய அளவில் செய்வதை தவிர்த்து விடவும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். கணவன் மனைவி உறவில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். ஆன்மீக பயணங்கள் செல்லுங்கள். மேல்மருவத்தூர் ஆதிபராசக்தியை வணங்குங்கள் பா தி ப் புகள் நீங்கி நன்மைகள் அதிகரிக்கும்.

கடகம்
சந்திரனை ராசி அதிபதியாகக் கொண்ட கடக ராசிக்காரர்களே, இந்த ஆண்டு ஆரம்பமே அமர்களமாக இருக்கிறது. கிரகங்களின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் மேன்மை அதிகரிக்கும். பத்தாம் வீட்டில் உச்சசூரியன் உடன் ராசி நாதன் இணைந்திருப்பது சிறப்பு. வீடுகளை விட்டு வெளியூர்களில் தங்கியிருப்பவர்களுக்கு குடும்பத்துடன் சேருவதற்கான நல்ல நேரம் கூடி வந்துள்ளது. படித்து முடித்து விட்டு வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்பு கிடைக்கும். பங்குச்சந்தையில் திடீர் லாபம் கிடைக்கும். குரு பார்வை இந்த ஆண்டு உங்களுக்கு திடீர் யோகத்தை தரப்போகிறது.

பட்ட கஷ்டங்களுக்கு பலன் கிடைக்கப் போகிறது. திருமணம் ஆகாதவர்களுக்கு இந்த ஆண்டு நிச்சயம் திருமணம் நடைபெறும். இந்த ராசியில் பிறந்த அரசியல்வாதிகளுக்கு இது வெற்றிகரமான ஆண்டாக அமைந்துள்ளது. விவசாயிகளுக்கு நல்ல மகசூலும் அதிக லாபமும் கிடைக்கும். நல்ல பண வரவு வரும். வங்கி சேமிப்பும் உயரும். வங்கிக் கடன் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். கண்டச்சனி காலம் என்றாலும் கவலை வேண்டாம் மன நிம்மதி அதிகரிக்கும். வியாழக்கிழமை, சனிக்கிழமைகளில் அனுமன் கோவிலுக்கு சென்று வழிபட்டு வாருங்கள் நன்மைகள் அதிகம் நடைபெறும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *