உலகின் மிக துல்லியமான ஆப்ரிக்க ஜோதிடம் உங்களது எதிர்காலம் பற்றி என்ன சொல்கிறது?

ஆன்மீகம்

ஆப்பிரிக்க ஜோதிட முறையானது ஆப்பிரிக்க நாகரத்தின் துவக்கம் ஆகும். பழங்கால பழங்குடியினராக இருந்த ஆப்பிரிக்கர்கள் முதலில் ஜோதிடம் மற்றும் நட்சத்திரங்களின் மீது நம்பிக்கை கொண்டிருந்தனர். இந்த ஜோதிட முறையானது ஜியோமன்ஸி என்று அழைக்கப்பட்டது. எழும்புகளை தோராயமாக அவர்கள் தூக்கி எரியும் போது அவை அம்புகள், கோடுகள் போன்ற வடிவங்களை தோற்றுவித்தது. இதனை வைத்து ஜோதிடம் கணித்து கூறுவதே இந்த ஜியோமன்ஸி என்ற ஆப்பிரிக்க ஜோதிட முறையாகும். இதில் நமக்கு மேஷம் முதல் மீனம் வரையில் 12 இராசிகள் உள்ளதை போல, அவர்களும் 12 வகைகளை உருவாக்கினர். இது நீங்கள் பிறந்த தேதி மற்றும் மாதத்தை சார்ந்தது..! இந்த பகுதியில் மிக துல்லியமான ஆப்பிரிக்க ஜோதிட முறை உங்களுக்கு என்ன பலனை சொல்கிறது என்பது பற்றி காணலாம்.

ஜனவரி 4 – பிப்ரவரி 3 வரை

இவர்கள் நேர்மையும், தாராளமனப்பான்மையுடனும், நல்ல சிந்தனையுடனும் இருப்பார்கள். இவர்களது மூளைதிறன் கூர்மையாக இருக்கும். இவர்கள் சில சமயங்களில் தங்களை பற்றி தாங்களே கவலைப்பட்டு கொள்வார்கள். இவர்கள் அதிகாரத்தையும், தன்னம்பிக்கையையும் முன்னிறுத்துவார்கள். மற்றவர்களின் எதிர்மறை சிந்தனையானது இவர்களை எந்த விதத்திலும் பாதிக்காது.

பிப்ரவரி 4 – மார்ச் 5 வரை

இந்த காலகட்டத்தில் பிறந்தவர்கள் அறிவார்ந்தவர்கள், மற்றும் புத்திசாலிகளாக இருப்பார்கள். சில நேரங்களில் இவர்களது கோபமானது பலரை தாக்குவதாக அமையும். இருப்பினும் இவர்களால் எத்தகைய தடைகளையும் தாண்டி வர முடியும். இவர்கள் வலிமையானவர்களாக திகழ்வார்கள்.

மார்ச் 6 முதல் ஏப்ரல் 4 வரை

இந்த தேதிக்குள் பிறந்தவர்கள், மிதமான மனநிலையுடனும் பிறருடன் நெருக்கமாக பழகும் பண்பையும் கொண்டிருப்பார்கள். இவர்கள் தங்களது நெருக்கமான நபர்களுடன் மட்டுமே மனம் திறந்து பேசுவார்கள். இவர்கள் தங்களது சொந்த வாழ்க்கையிலும், வேலையிலும் சிறப்பாக பணியாற்றுவார்கள். இவர்களால் எல்லா விசியத்திலும் சிறப்பாக செயல்பட முடியும் என்று சொல்லிவிட முடியாது. ஆனால் ஏதோ ஒரு விஷயத்தில் இவர்கள் அனைவரையும் விட சிறப்பாக செயலாற்றுவார்கள்.

5 ஏப்ரல் – 4 மே வரை

இவர்கள் சமூகத்தில் அனைவருடனும் எளிதாக பழக கூடியவர்கள். இவர்களுக்கு நிறைய நண்பர்கள் இருப்பார்கள். இவர்கள் பாசமாக நடந்து கொள்பவர்கள். ஆனால் சில காரியங்களில் எஸ்கேப் ஆகிவிடுவார்கள். இவர்கள் பிரச்சனைகளை நேருக்கு நேராக நின்று போராடமாட்டார்கள். பிரச்சனைகளை கண்டு ஓடி விடுவார்கள். இது இவர்களை அதிகப்படியான சிக்கலில் தான் கொண்டு சென்று விடும். நீங்கள் உங்களிடம் யார் மிகவும் உண்மையானவர்கள் போல இருக்கிறார்களோ அவர்களை நம்பாதீர்கள். அவர்கள் உங்களது முதுகிற்கு பின்னால் உங்களுக்கு எதிரானவர்களாக இருக்கலாம்.

5 மே – 4 ஜூன் வரை

இவர்கள் சாமாதானத்தையும், நல்லிணக்கத்தையும் எதிர்பார்ப்பவர்களாக இருப்பார்கள். இவர்களது வாழ்க்கையில் கடினத்தன்மையையும், மிருகத்தனத்தையும் சேர்ந்த இருக்கும். இவர்கள் உள் புறத்தில் மென்மையானவர்களாகவும், வெளிப்புறத்தில் கடினமானவர்களாகவும் இருக்கிறார்கள். ஆனால் வாழ்க்கையில் இவர்களுக்கு தேவையானது எல்லாம் சமாதானமும், நல்லிணக்கமும் தான்.

5 ஜூன் – 4 ஜூலை வரை

இவர்கள் சுயமாக முடிவெடுக்கும் திறமை கொண்டவர்கள். இவர்கள் சில சமயங்களில் கடுமையாகவும், முரட்டுத்தனமாகவும் நடந்து கொள்வார்கள். இவர்களுடைய நேர்மறையான எண்ணங்கள் சரியான ஒரு பாதையை நோக்கி செல்லாது. இவர்கள் அறிவார்ந்தவர்களாகவும், வேடிக்கையானவர்களாகவும் இருப்பார்கள். நீங்கள் மற்றவர்களிடம் பொருமையாக நடந்து கொள்ளுங்கள். இந்த உலகம் உங்களுக்கு எப்போதுமே மோசமானதை மட்டுமே செய்து கொண்டிருக்காது.

5 ஜூலை – 4 ஆகஸ்ட் வரை

ஆப்பிரிக்க ஜோதிடத்தின் படி இவர்கள் நடைமுறைக்கு ஏற்றவாறு நடந்துகொள்பவர்களாக இருப்பார்கள். இவர்கள் தங்களது வாழ்க்கைக்கான முடிவுகளை தைரியமாக எடுக்க கூடியவர்கள். மேலும் வாழ்க்கையில் வரும் பிரச்சனையை எதிர்த்து போராடும் தைரியம் இவர்களுக்கு இருக்கும். இவர்கள் எதிர்காலத்தில் இது தவறாக அமையும், இது தவறாக அமையும் என்று நினைத்து கவலைப்பட மாட்டார்கள். இன்றைய வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்ற மனநிலை கொண்டவர்கள்.

5 ஆகஸ்ட் – 3 செப்டம்பர் வரை

இவர்கள் ஆற்றல் மிக்கவர்களாக இருப்பார்கள். ஆனால் வாழ்க்கையில் ஒரு நிலையற்ற தன்மையை கொண்டிருப்பார்கள். இவர்கள் ஒரு முடிவை எடுத்து விட்டு, இப்படி ஒரு முடிவை எடுத்துவிட்டோமே என்று வருத்தப்படுவார்கள். வேலை விஷயத்தில் இவர்கள் நம்பகத்தன்மை உடையவர்களாக இருக்கமாட்டார்கள். ஆனால் இவர்கள் மிகச்சிறந்த் நண்பர்களை பெற்றிருப்பார்கள். இவர்களுக்கு இருக்கும் சக்தியானது நல்ல வழியில் உபயோகப்படுத்தப்பட்டல் இவர்கள் வாழ்க்கையில் சிறப்பாக வருவார்கள்.

4 செப்டம்பர் – 3 அக்டோபர் வரை

இவர்களை பற்றி புரிந்து கொள்வது மிகவும் கடினமான ஒன்று. இவர்கள் தங்களது சொந்த உள்ளுணர்வு மற்றும் உந்து திறன் மூலமாகவே எதையும் செய்வார்கள். பிறரை சார்ந்திருக்க மாட்டார்கள். இவர்கள் கொஞ்சம் தனிமையானவர்கள், அதனால் இவர்களால் புதிய சூழ்நிலைகளை சமாளிப்பது சற்று கடினமாகும். இவர்கள் சில விஷயங்களில் இருந்து சற்று விலகியே இருக்கலாம் என்று நினைப்பவர்கள்.

4 அக்டோபர் – 3 நவம்பர் வரை

இவர்கள் முற்றிலும் வித்தியாசமானவர்களாக இருப்பார்கள். உதாரணமாக, அனைவரும் பயணிக்க சாலை வழியை தேர்ந்தெடுத்தால், இவர்கள் மற்றவர்களின் யோசனையில் இருந்து மாறுபட்டு நடந்து கொள்வார்கள். வாழ்க்கை துணையை நீங்களே தேர்ந்தெடுப்பீர்கள். உங்களுக்கு மிகச்சிறந்த வாழ்க்கை துணை அமைவார்.

4 நவம்பர் – 3 டிசம்பர் வரை

இவர்கள் சில நேரங்களில் சோர்வாக இருப்பதோடு, வாழ்க்கையில் தேவையில்லாத விஷயங்களின் மீது தங்களது கவனத்தை செலுத்துவார்கள். இவர்கள் மிகச்சிறந்த செல்வ வளங்களுடன் பிறந்திருந்திருப்பார்கள். ஆனால் சிலர் ஏழ்மையில் மாட்டிக் கொண்டிருப்பார்கள். இவர்கள் கடின உழைப்பாளிகள், படிப்படியாக இவர்கள் வாழ்க்கையில் உயர்ந்து கொண்டே போவார்கள். இவர்கள் சிறப்பாக வேலை செய்வார்கள்.. ஆனால் சொந்த வாழ்க்கையில் இவர்கள் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

4 டிசம்பர் – 3 ஜனவரி வரை

இவர்கள் தங்களது வாழ்க்கையை மேம்படுத்த எந்த நேரத்திலும் எதையும் செய்ய தயாராக இருப்பார்கள். இவர்கள் தங்களது இலட்சியத்தை அடைய கடினமாக உழைப்பார்கள். இவர்கள் சற்று மகிழ்ச்சியாகவும், வேடிக்கையாவும் இருக்க கற்றுக்கொள்ள வேண்டும். ஏனென்றால் வாழ்க்கை ஒன்றும் அவ்வளவு கடினமானது அல்ல.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *