நவராத்திரி பலன்கள்! பிறக்கும் ஆயுதபூஜை – விஜயதசமியில் வீட்டில் செல்வம் நிலைக்க என்னென்ன வழிபாடு செய்யலாம்

ஆன்மீகம்

நவராத்திரியை முடிவடையும் பத்தாவது நாள் விஜயதசமி. மகிஷாசுரனை வதம் செய்வதற்காக அவதரித்த அம்பிகை ஒன்பது நாட்களும், கடும் தவத்தை மேற்கொண்டு,வெற்றி கண்ட நாளைத்தான் விஜயதசமி என்று கொண்டாடுகின்றோம்.மேலும், விஜயம் என்றால் வெற்றி, அர்த்தம் ஜெயம் என்ற வார்த்தையை குறிக்கின்றது. மனிதர்களாக இருந்தாலும், இறைவனாக இருந்தாலும் எந்த ஒரு செயலிலும், எடுத்த எடுப்பிலேயே வெற்றி காணமுடியாது.முயற்சி என்ற ஒன்று எல்லோருக்கும் அவசியம் என்பதை வலியுறுத்துவதற்காக கொண்டாடப்படும் வழிபாடு என்று கூட இந்த நவராத்திரியை சொல்லலாம்.

நாளில் எப்படி நாம் செய்யும் வேலைக்கு நன்றியைச் செலுத்துகின்றோமோ, இதேபோல் நமக்கு குருவாக இருக்கும் ஆசானுக்கும் நன்றியை தெரிவிக்க வேண்டும், என்பதை மறந்து விடாதீர்கள்.படிக்கும் மாணவர்கள் தன்னுடைய ஆசிரியருக்கு கட்டாயம் நன்றி தெரிவித்து, அவரது பாதங்களில் வணங்கி ஆசீர்வாதத்தை பெற வேண்டும்.

அல்லது வேறு ஏதேனும் கலைகளைக் கற்றுக் கொள்ளும் மாணவர்களாக இருந்தால், உங்களுக்கு அந்த கலையை சொல்லித்தரும் குருவின் பாதங்களில் விழுந்து, வணங்கி ஆசீர்வாதத்தை பெற வேண்டும்.இதுமட்டுமின்றி, உங்களால் முடிந்த தக்ஷனையை அல்லது பரிசுப் பொருளையோ உங்கள் குருவுக்கு கட்டாயம் தரவேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.தட்சனை என்றால் அதிகளவில் பணம் செலவு செய்து தான் வாங்கி தர வேண்டும் என்பது கிடையாது.

பாசத்தோடு நீங்கள் தர கூடிய சின்ன பொருளாக இருந்தாலும் சரி.இவ்வாறாக நம் வாழ்க்கையில் நம்முடைய முன்னேற்றத்திற்கு, ஊன்றுகோலாக, உதவியாக இருக்கும் எல்லாவற்றியிருக்கும் மனதார நன்றி தெரிவிக்கும் நாளாக இந்த விஜயதசமி சொல்லப்பட்டுள்ளது.மேலும், உங்க வாழ்க்கையில், உங்களுக்கு உதவி செய்திருக்கும் மனிதர்களுக்கும், கடவுளுக்கும், குருவுக்கும், ஆயுதங்களுக்கும் நன்றி தெரிவிக்க மறக்காதீர்கள்.

இந்த விஜயதசமி திருநாளில் உங்கள் வீட்டு முறைப்படி பூஜை அறையில் படையலிட்டு, பிரசாதங்களை செய்து வைத்து, வழிபடலாம்.இதனைத்தொடர்ந்து, உங்கள் வீட்டில் தயார்செய்யும் பிரசாதத்தோடு பால் பாயாசத்தையும், காராமணி சுண்டலையும் சேர்த்து அம்பிகைக்கு நிவேதனமாக படைப்பது சிறப்பானது.

புதியதாக நீங்கள் ஏதாவது ஒரு விஷயத்தை தொடங்குவதாக இருந்தால், அதை இந்த விஜயதசமி திருநாளில் தொடங்கலாம்.விஜயதசமி அன்று தொடங்கும் எந்த ஒரு காரியமும் தோல்வி அடையாது. விடாமுயற்சியோடு உங்களுடைய வாழ்க்கையில் மென்மேலும் வெற்றியடைய, விஜயதசமி வழிபாட்டை நம்பிக்கையோடு செய்து பலன் அடைய வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *