இன்று இந்த ராசிக்காரர்கள் பிற்பகலுக்கு மேல் எந்த செயல்களிலும் ஈடுபட வேண்டாம் !! யாருக்கெல்லாம் நல்ல நேரம், எமகண்டம் உண்டாகும் !!

ஆன்மீகம்

தினம் தினம் திருநாளே!..

மனிதர்களாகிய நாம் எந்த ஒரு காரியத்தை செய்வதற்கு முன்பும் நல்ல நேரம், எமகண்டம், ஆகியவற்றைப் பார்ப்பது வழக்கம்.அவ்வாறு நல்ல நேரம் பார்த்து செய்தால் தான், அந்த காரியம் நிச்சயம் வெற்றி அடையும் என்ற நம்பிக்கையும் உண்டு.அதுபோல, தினமும் காலையில் காலண்டரை திகதிப் பார்க்க கிழிக்கிறோமோ இல்லையோ, கண்டிப்பாக ராசிப்பலன் பார்க்க கிழிப்போம்.இன்றைய தினத்தில், நமது ராசிக்கு என்ன பலன் என்பதை பார்ப்பதில், அதிகமானோருக்கு ஆர்வம் இருக்கிறது.அந்த வகையில், இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன் என்பதை பார்க்கலாம் வாருங்கள்.

மேஷம்
முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் கிடைக்கும். அரசாங்கக் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். கோர்ட் வழக்கில் நல்ல திருப்பம் ஏற்படும். பிற்பகலுக்கு மேல் காரியங்களில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களை தரிசித்து, ஆசிகளைப் பெறும் வாய்ப்பு உண்டாகும்.

ரிஷபம்
சிலருக்கு முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் கிடைக்கும். எ தி ர் பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. பிற்பகலுக்குமேல் காரியங்களில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகள் உண்டாகும்.

மிதுனம்
மனம் உற்சாகமாகக் காணப்படும். எ தி ர்பார்த்த பணம் கிடைக்கும். முயற்சிகளில் வெற்றி உண்டாகும். பிள்ளைகள் வழியில் நல்ல செய்தி கிடைக்கும். ஒரு சிலருக்கு குடும்பத்துடன் சென்று குலதெய்வ பிரார்த்தனை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கோயில்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படும்.

கடகம்
வெளியூரில் இருந்து கிடைக்கும் தகவல் மனதுக்கு மகிழ்ச்சி தரும். அலுவலகத்தில் பணிச் சுமை அதிகரித்தாலும் உற்சாகமாகச் செயல்பட்டு மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். நேரத்துக்கு சாப்பிட முடியாது. பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்க வகையில் செலவுகள் ஏற்படக்கூடும்.

சிம்மம்
காலையில் புதிய முயற்சிகள் எதையும் மேற்கொள்ளவேண்டாம். வீட்டில் உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். பிற்பகலுக்கு மேல் எ திர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கும். வாழ்க்கைத் துணை வழியில் பணவரவு உண்டாகும். பிள்ளைகளால் பெருமை சேரும். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை ஆபரணங்கள் சேரும்.

கன்னி
மனம் உற்சாகமாகக் காணப்படும். உறவினர் நண்பர் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். பிள்ளைகள் வகையில் சிறு மனவருத்தம் உண்டாக வாய்ப்பு உண்டு என்பதால் பொறுமை மிக அவசியம். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசால் அனுகூலம் உண்டாகும்.

துலாம்
வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து எ தி ர்பார்த்த நல்ல தகவல் வந்து சேரும். வியாபாரத்தில் உங்கள் திறமை வெளிப்படும். உறவினர் நண்பர்கள் வருகையால் வீட்டில் குதூகலம் பிறக்கும். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை ஆபரண சேர்க்கையும் பணலாபமும் கிடைக்கும்.

விருச்சிகம்
மனம் உற்சாகமாகக் காணப்படும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். எதிர்பாராத தனலாபம் உண்டாகும். வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து எ திர்பார்த்த தகவல்கள் வரும். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சிறுசிறு தடைகள் ஏற்படக்கூடும்.

தனுசு
புதிய முயற்சிகளில் ஈடுபடாமல், வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும். சிலருக்கு எ திர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். பேச்சில் நிதானம் தேவை. பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முக்கிய பிரமுகர்களின் சந்திப்பும் அதனால் ஆதாயமும் ஏற்படக்கூடும்.

மகரம்
முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் கிடைக்கும். எ திர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. தந்தையுடன் ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாடு நீங்கும். வெளியூரில் இருந்து எ திர்பார்த்த நல்ல செய்தி வந்து சேருவதால் மகிழ்ச்சி உண்டாகும். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் தரிசனமும் ஆசிகளும் கிடைக்கும்.

கும்பம்
இன்று நீங்கள் தொடங்கும் காரியங்கள் அனைத்தும் சாதகமாக முடியும். எதிர்பாராத பணவரவும் உண்டாகும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தருவதாக இருக்கும். நீண்டநாளாக எ திர்பார்த்து காத்திருந்த தகவல் வந்து சேரும். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் தரிசனமும் ஆசிகளும் கிடைக்கும் வாய்ப்பு உண்டு.

மீனம்
எதிர்பார்த்த நல்ல தகவல் வந்து சேரும். உறவினர்களின் வரவும் அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். கோயில் திருவிழாக்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டாகும். பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *