இவ்வளவு அற்புதங்களை கொண்ட சீத்தாப் பழத்தினை யார் யாரெல்லாம் சாப்பிடலாம் தெரியுமா? ​நீரிழிவுக்கு நல்லதா?

மருத்துவம்

சீத்தாப்பழம் பழங்களில் தனிப்பட்ட சுவையும் மணமும் கொண்டது. சீத்தாப்பழத்தின் தோல், விதை, இலை, மரப்பட்டை என எல்லாமே மருத்துவகுணங்களை கொண்டதுதான். சீத்தாப்பழம் குளுக்கோஸ், சுக்ரோஸ் இரண்டுமே நிறைந்திருப்பதால் உடனடியாக உடலுக்கு ஆற்றல் தருகிறது. சீத்தாப்பழம் தரும் நன்மைகள் குறித்து தெரிந்துகொள்வோம். சீத்தாப்பழத்தில் வைட்டமின் சி, வைட்டமின் பி -காம்ப்ளக்ஸ், வைட்டமின் ஏ, நார்ச்சத்து, மெக்னீசியம், நார்ச்சத்து, கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து நிறைந்தது. புரதம், தாது பொருள்கள், இனிப்பு, கொழுப்புசத்து நிறைந்தது. இதில் இருக்கும் தாதுப்பொருள்கள் நம் உடலில் இருக்கும் எலும்புகளுக்கும், தசைகளுக்கும், இதயத்துக்கும் வலு கொடுக்கும்.

உடலில் உள்ள திசுக்களுக்கு பாதிப்பு தரக்கூடிய நச்சுப்பொருள்களை உடலிலிருந்து வெளியேற்ற ஆன்டி- ஆக்ஸிடண்ட் தேவை. இதை உடலுக்குத் தருவது வைட்டமின் சி. சமைத்த உணவை காட்டிலும் பழங்களில் நிறைவாக வைட்டமின் சி கிடைக்கும். சீத்தாப்பழத்தில் அதிக அளவு பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் உள்ளது. இது ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க இவை இரண்டுமே உதவுகிறது.

ரத்த நாளங்களின் விரிவாக்கத்தை ஊக்குவிக்கிறது. இதனால் ரத்த அழுத்தம் சீராகிறது. இதய நோய் மற்றும் பக்கவாதம் அபாயத்தை அதிகரிக்கிறது. ஆய்வில் அதிகமாக மெக்னீசியம் உட்கொள்ளும் நபர்களுக்கு ரத்த அழுத்தம் வருவதற்கான ஆபத்து குறைவாக இருக்கும். உயர் ரத்த அழுத்தம் குறை ரத்த அழுத்தம் இருப்பவர்கள் அனைவருமே சீத்தாப்பழத்தை எடுத்துகொள்ளலாம்.

ஒரு கப் அளவுள்ள சீத்தாப்பழ விழுதில் 5 கிராம் அளவுக்கு நார்ச்சத்து உள்ளது. சீத்தாப்பழத்தில் நார்ச்சத்தும் தாமிரச்சத்தும் சீராக இருப்பதால் செரிமானத்துக்கு உதவுகிறது. இதனால் மலச்சிக்கல் வராமல் தடுக்கப்படுகிறது.

இவை குடல் இயக்கத்தை சீராக்கி குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை மேம்படுத்துகிறது. சீத்தாப்பழம் ஜீரண சக்தியை அதிகரிப்பதால் பித்தம், வாந்தி, பேதி, தலைச்சுற்றல் போன்றவற்றை குணப்படுத்தும்.

உடல் எடை அதிகரிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் உடல் எடையை குறைப்பதை போன்றே ஆரோக்கியமான எடை அதிகரிப்பையும் அதிகரிக்க வேண்டும். இல்லையெனில் உடலில் அதிக கொழுப்புகள் சேர்ந்துவிட வாய்ப்புண்டு.

அப்படி ஆகாமல் ஆரோக்கியமாக உடல் எடை அதிகரிக்க வேண்டுமெனில் சீத்தாப்பழத்தை தேர்வு செய்யலாம். இது அதிக ஊட்டச்சத்துக்கள், சரியான அளவு கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் புரதங்களால் நிரம்பியுள்ளது. சீத்தாப்பழத்துடன் தேன் கலந்து சாப்பிடுவதன் மூலம் ஆரோக்கியமாக உடல் எடை அதிகரிக செய்யும்.

​நீரிழிவுக்கு நல்லதா?

நீரிழிவு நோயாளிகள் சீத்தாப்பழம் சாப்பிடலாமா என்பது குறித்து பலருக்கும் சந்தேகம் இருந்துவருகிறது. சீத்தாப்பழம் குளுக்கோஸ் மற்றும் பிரக்டோஸ் நிறைந்திருக்கும் என்பதால் இதை சாப்பிட்ட உடனேயே ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்துவிடும் என்கிறார்கள்.

ஒரு சிலர் சீத்தாப்பழம் கிளைசெமிக் குறியீடு 54 என்பதால் நீரிழிவு இருப்பவர்களுக்கு நல்ல பழம் என்றே சொல்கிறார்கள். ஏனெனில் நீரிழிவு இருப்பவர்களுக்கு லோகிளைசெமிக் உணவில் 55 மற்றும் அதற்கு குறைவான அளவு உணவுகளே பரிந்துரைப்பதால் சர்க்கரை நோயாளிகள் சீத்தாப்பழம் சாப்பிடலாம் என்கிறார்கள்.

மேலும் இது நார்ச்சத்தும் உள்ள பழம் என்பதால் இது ரத்த சர்க்கரை அளவு உறிஞ்சுவதை மெதுவாக்குகிறது என்றும் சொல்கிறார்கள். உங்களுக்கு நீரிழிவு இருந்து நீங்கள் சீத்தாப்பழத்தின் மீது அதிக பிரியம் கொண்டிருந்தால் ஒருமுறை உங்களின் மருத்துரின் ஆலோசனையை பெறவும் மறக்க வேண்டாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *