உங்கள் பாதம் இப்படி இருந்தால் பேரதிர்ஷ்டசாலிகள் !! பாதத்தை வெச்சே நீங்க எப்படிப்பட்டவர்ன்னு சொல்ல முடியும் !!

ஆன்மீகம்

பாதம் எப்படிப்பட்டவர்ன்னு ……

பொதுவாக ஒருவரது உடலை வைத்து அவரது குணங்களைக் கூற முடியும். உதாரணமாக, மூக்கின் வடிவம், கையின் பெருவிரல் நேராக அல்லது வளைந்து இருப்பது மற்றும் உட்காரும் போது கால்களை வைத்திருக்கும் நிலை என பல ஒருவரது குணாதிசயங்களை வெளிப்படுத்தும். அந்த பட்டியலில் பாதங்களின் வடிவத்தையும் சேர்த்துக் கொள்ளலாம். கீழே பாத வடிவங்களும், அந்த பாதத்தைக் கொண்டவரின் குணாதிசயம் எப்படி இருக்கும் என்றும் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து, உங்கள் பாதங்கள் எந்த வடிவத்தில் உள்ளது, உங்கள் குணாதிசயங்கள் பற்றி சரியாக சொல்லப்பட்டுள்ளதா என்பதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

சரிவான பாதம்
இந்த வகையான சரிவான கால்விரல்களைக் கொண்ட பாதம் மிகவும் பொதுவான பாத வகையாகும். பெரும்பாலானோரின் கால்கள் பார்ப்பதற்கு இப்படி தான் இருக்கும். உங்களின் கால்கள் பார்ப்பதற்கு இவ்வாறு இருந்தால், நீங்கள் எதையும் சீராக கையாளக்கூடியவர். தன்னிச்சையாக செயல்படக்கூடியர் மற்றும் புதிய நபர்களை சந்திக்க விரும்புவீர்கள். மேலும் நீங்கள் எப்போதும் புதிய அனுபவங்களை பெற நினைப்பீர்கள். உங்களுக்கு பயணம் செய்ய பிடிக்கும். ஏனெனில் இந்த வகையான நபர்கள் வெவ்வேறு கலாச்சாரங்களை ஆராய விரும்புவீர்கள்.

சுடர் வடிவிலான பாதம்
உங்கள் பாதம் சுடர் வடிவில் இருந்தால், அதாவது பெருவிரலுக்கு அருகில் உள்ள விரல் நீளமாக இருந்தால், இந்த வகை பாதங்களைக் கொண்டவர்கள் மிகவும் விளையாட்டுத்தனமாக இருப்பார்கள். அதோடு நல்ல படைப்பாளி. புதிய விஷயங்களைப் பற்றி அதிகம் சிந்திக்க விரும்புவீர்கள். ஏனெனில் நீங்கள் மிகவும் உற்சாகமானவர். அதோடு நீங்கள் மற்றவர்களை திறம்பட வெல்லக்கூடியவர்.

சதுரமான பாதம்
இந்த வகையான பாதத்தில், கால்விரல்கள் அனைத்தும் தோராயமாக ஒரே நீளம் கொண்டவையாக இருக்கும். இந்த மாதிரியான பாதங்களைக் கொண்டவர் உண்மையான சிந்தனையாளர். எந்த ஒரு முடிவை எடுப்பதற்கு முன்பும் அந்த முடிவால் பெறும் நன்மை தீமைகளை நன்கு யோசித்து எடுப்பார்கள். எதார்த்தமானவர் மற்றும் மிகவும் நம்பிக்கைக்குரியவராக இருப்பர்.

நீட்டிய பாதம்
இந்த வகையான பாதத்தில் கால் பெருவிரலின் அடுத்தடுத்து உள்ள இரண்டு விரல்களும் ஒரே நீளத்திலும், மற்ற இரண்டு விரல்கள் குட்டையாகவும் இருக்கும். இந்த மாதிரியான பாதங்களைக் கொண்டவர்கள், வெளிப்படையானவராக இருக்கமாட்டார்கள். யாருடனும் அவ்வளவு எளிதில் பழகமாட்டார்கள். அனைத்து விஷயங்களையும் தனக்குள்ளேயே வைத்துக் கொள்வார்கள். இவர்களது மனநிலையில் வேகமாக மாற்றங்கள் ஏற்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *