உங்க பிறந்தநாளை வச்சு நீங்க எப்படிப்பட்ட கேரக்டர்னு தெரிஞ்சுக்கங்க! இந்த கிழமையில் பிறந்தவர்கள் பேரதிஷ்டசாலியாம்?

ஆன்மீகம்

இந்த பூமியில் பிறந்த ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு குணங்கள் இருக்கும். கோடிக்கணக்கான மக்கள் இந்த பூமியில் இருந்தாலும் கூட ஒவ்வொருவரும் மற்றவருடன் 100% இங்கு ஒத்து போவதில்லை. அதேபோல ஒவ்வொரு தனிப்பட்ட மனிதருக்கும் இருக்கும் குணங்கள் மற்றும் அவர்களது நடவடிக்கைகள் கண்டிப்பாக மற்றவருக்கு இருக்காது. அந்த வகையில் உங்கள் பிறந்த கிழமையை வைத்து நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

திங்கள்

நீங்கள் திங்களன்று பிறந்தவராக இருந்தால் உங்களுக்கு கிரியேட்டிவ் தன்மை அதிகமாக இருக்கும்.அதே நேரம் உங்கள் யோசனைகளை உங்களுக்கு உள்ளேயே வைத்துக்கொள்ளும் நபராக நீங்கள் இருப்பீர்கள். உங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் நபராக இருப்பீர்கள். நீங்கள் பிசினெஸ் செய்தால் அதில் நல்ல ஒரு லீடராகத் திகழ வாய்ப்புள்ளது.

செவ்வாய்

நீங்கள் ஒரு எனெர்ஜிட்டிக்கான நபராக இருப்பீர்கள்.உங்களால் நிறைய பேர் ஈர்க்கப்படுவார்கள், மற்றும் அவர்கள் உங்களுக்கு உதவி செய்யவும் விரும்புவார்கள். சில நேரங்களில் நீங்கள் அதிகமாக சிந்தித்து சிந்தனைகளை கட்டுக்குள் கொண்டுவர முடியாமல் வருத்தப்படுவீர்கள். வாழ்க்கையில் நல்ல விஷயங்களை விரும்பினாலும் பணத்தை மிச்சப்படுத்துவது உங்களுக்கு ஒரு சவாலாகவே இருக்கும்.உங்களிடம் நேர்மை இருக்கும்.ஆனால் விமர்சனங்களை எதிர்கொள்ள நீங்கள் பயப்படுவீர்கள்.

புதன்

நீங்கள் விரைவாக புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வீர்கள். உங்களைப்போல நிதானமாக இருக்க வேண்டும் என மற்றவர்கள் நினைக்கும் அளவுக்கு சூழ்நிலைகளை நிதானத்துடன் கையாளுவீர்கள்.ஆனால் நிலையாக இருப்பதற்கு நீங்கள் போராடுவீர்கள்.அனைத்து விதமான நபர்களுடனும் நன்றாகப் பழகுவீர்கள்.உங்கள் வேலையையும்,உங்களுடன் பணிபுரியும் நபர்களையும் நீங்கள் அதிகம் நேசிப்பீர்கள்.மற்றவர்களுடன் இருந்து கற்றுக்கொள்வதையும், அவர்களுடன் பழகுவதையும் அதிகம் விரும்புவீர்கள்.

வியாழன்

மரியாதை கொடுத்து மரியாதை வாங்க வேண்டும் என்பதை கடைபிடிக்கும் நபர் நீங்கள்.உங்கள் வேலையில் சுதந்திரத்தை விரும்பக்கூடிய நபராக நீங்கள் இருப்பீர்கள். உங்களிடம் தலைமைத்துவ பண்பு இயல்பாகவே இருக்கும். முதலிடம் பெறுவதற்கு கடின உழைப்பினை வழங்குவீர்கள். உங்களை விமர்சிக்கும் நபர்களை நீங்கள் விரும்ப மாட்டீர்கள்.எளிதில் சலிப்படைந்து(Bore) விடும் நபர் நீங்கள்.உங்களிடம் இயற்கையிலேயே இருக்கும் கவர்ச்சி மற்றவர்களை எளிதில் கவர்ந்திழுக்கும்.

வெள்ளி

நீங்கள் ஒரு சிறந்த படைப்பாளியாக இருப்பீர்கள்.உறவுகள் என்று வரும்போது எளிதில் நீங்கள் உணர்ச்சி வசப்படக்கூடிய நபராக இருப்பீர்கள்.இயற்கையிலேயே உங்களுக்கு ஆன்மீக உணர்வு அதிகமாக இருக்கும். நீங்கள் புத்திசாலிகள் என்றாலும் உங்கள் ஆன்மா பழையவற்றையே அதிகம் விரும்பும்.உங்களுக்கு ஏற்படும் பின்னடைவுகளை சமாளிப்பதில் நீங்கள் தடுமாறக்கூடும்.நீங்கள் ஒரு மிகச்சிறந்த உள்ளுணர்வு உடையவர்.

சனி

நீங்கள் நம்பகத்தன்மை அதிகம் வாய்ந்த நபர்.நிகழ்காலத்தில் இல்லாமல் கடந்த காலத்திலோ,எதிர்காலத்திலோ வாழ முற்படும் நபராக இருப்பீர்கள்.நீங்கள் ஒரு புத்திசாலி என்றாலும் பர்பெக்ட் நபராக இருப்பதற்கு அதிகம் முயற்சி எடுப்பீர்கள்.உங்களுக்கு இயற்கையாகேவே நம்பிக்கை அதிகம் இருக்கும் ஆனால், பிறர் பார்வையில் உங்கள் நம்பிக்கை முட்டாள்தனமாக படக்கூடும்.மற்றவர்கள் உங்கள் கருத்தைக் கேட்கும்போது நீங்கள் எதிர்மறையாக பதில் அளிப்பீர்கள்.உங்கள் தோற்றத்தில் ஒரு பெருமிதம் இருக்கும், இதனால் அழகாக காட்சியளிக்க நீண்ட நேரத்தை நீங்கள் எடுத்துக்கொள்வீர்கள்.

ஞாயிறு

நீங்கள் பாசிட்டிவ் சிந்தனை அதிகம் உடைய நபர்.மற்றவர்களுக்கு கொடுத்து மகிழ்பவராக இருப்பீர்கள்.எனினும் நீங்கள் எளிதில் சோர்வடைந்து விடுவீர்கள், இதனால் உங்கள் திட்டங்கள் நிறைவேறாமல் பாதியிலேயே நிற்கக்கூடும். அதிகம் உணர்ச்சி வசப்படும் நீங்கள் மற்றவர்களின் கருத்துக்களை மனதில் கொண்டு வாழ முற்படுவீர்கள்.உங்கள் சந்தேகத்துக்கு இடமான மனநிலையால்,நீங்கள் மற்றவர்களிடம் பழக அதிகநேரம் எடுத்துக் கொள்வீர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *