ஏப்ரல் 5ம் தேதி குருவின் அதிசார பெயர்ச்சியில் இந்த ராசிக்கு மட்டும் கிடைக்கப்போகும் ராஜயோகம் என்ன தெரியுமா !!

ஆன்மீகம்

இந்த ராசிக்கு பலனும் பரிகாரமும்

குரு அதிசாரமாக ஏப்ரல் 5ம் தேதி முதல் செப்டம்பர் 13ம் தேதி வரை மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு செல்கிறார்.
இதனால், இந்த ராசிக்கு மறைவு ஸ்தானத்தில் குரு செல்வதால் பல வகையில் கவனமாக இருக்க வேண்டிய நிலை உள்ளது. மேலும், கடந்த 3 மாதமாக இந்த ராசிக்கு பல கிரகங்கள் சிறப்பான யோகங்கள் தந்தாலும், தற்போது இந்த குருவின் நகர்வு சிக்கலைத் தரக்கூடியதாக இருக்கும்.

இந்த குரு அதிசார பெயர்ச்சியின் காரணமாக இந்த ராசிக்கு சற்று பிரச்னைகளைத் தரக்கூடிய குரு மறைவு ஸ்தானமான 6ம் இடத்திற்குச் செல்கிறார். குரு அதிசார காலத்தில் இந்த ராசிக்கு கடன்கள், நஷ்டங்கள், விரயங்கள் என பொருளாதார ரீதியாக பல்வேறு சிக்கல்களைச் சந்திக்க வேண்டி இருக்கும். முதல் இரண்டரை மாதங்கள் குரு நேர்கதியிலும், அடுத்த இரண்டு மாதங்கள் மகரத்திற்கு மீண்டு திரும்ப வக்ர கதியிலும் இருப்பார்.

இந்த கால கட்டத்தில் நீங்கள் புதிய தொழில், புதிய முதலீடு விஷயங்களில் ஈடுபடும் போது தேவையற்ற நஷ்டம், சட்ட சிக்கல், பொருளாதார தடை ஏற்பட வாய்ப்புள்ளது. ஏற்கனவே புதிய தொழில், வேலை, வியாபாரம் செய்து கொண்டிருந்தால் எந்த பா தி ப் பு ம் குருவால் இல்லை என்பதை மனதில் நிறுத்துங்கள். குரு இந்த ராசிக்கு 6-ம் இடத்தில் அமர்ந்து 10ம் இடமான கர்ம, தொழில் ஸ்தானம் எனப்படும் உத்தியோக ஸ்தானத்தைப் பார்க்கிறார்.

இதன் காரணமாக நீங்கள் செய்து கொண்டிருக்கும் உத்தியோகம், தொழிலில் எந்த ஒரு பா தி ப் பும் ஏற்படாது. மேலும், தொழில் வளர்ச்சி, மன நிம்மதி, நிறைவு தரும் வகையிலான லாபம் கிடைக்கக்கூடியதாக இருக்கும். வெளிநாடு செல்வதற்கான அமைப்பு உள்ளது. ராசிக்கு 7, 9, 12 ஆகியவற்றின் ஏதேனும் ஒரு தசா புத்தி நடந்து கொண்டிருப்பின் நீங்கள் நினைத்தபடி வெளிநாடு கனவு நினைவாகும்.

கன்னி ராசிக்கு 2ம் இடமான குடும்ப, தன ஸ்தானத்தை குரு தனது 9ம் பார்வையால் பார்க்கிறார். இதனால் தனம் லாபத்தில் எந்த குறைவும் ஏற்படாது. ஒருவரின் தொழில், தன லாபம் சிறப்பாக இருந்துவிட்டால் அவரின் வாழ்க்கை பெரியளவிலான கஷ்டங்கள் நீங்கிவிடும். ஒ ட் டு மொத்தத்தில் கன்னி ராசிக்கு இந்த குரு அதிசார பெயர்ச்சியால் தடை, பிரச்னைகளை விட பெரியளவில் லாபம் தரக்கூடியதாக தான் இருக்கும். ஏனெனில் புதிய தொழில், வேலை தொடங்காமல், முதலீடு செய்யாமல் இருந்து, இருக்கும் வேலையை சரியாக செய்து வந்தாலே உங்களுக்கு பல்வேறு வகையில் அனுகூலமானதாக இருக்கும்

யாரிடமும் தேவையற்ற வாக்கு வாதங்களில் ஈடுபட வேண்டாம். சொல், செயலில் கவனமாக இருந்தால் அவசியம். இல்லையெனில் தேவையற்ற எதிரிகளை பெறுவீர்கள். பின், மனம் போன்ற போக்கில் செயல்படுவது பெரிய பிரச்னைகளை கொண்டு வரும். சிந்தித்து, திட்டமிட்டு செயல்படுவது மிக அவசியம். தினமும் வீட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி வழிபடவும். குறிப்பாக பெருமாள் வழிபாடு செய்வது அவசியம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *