எ ந்த திசையில் அமர்ந்து இருந்து சாப்பிட்டால் அதிஷ்டம் என்று தெரியுமா ! வாஸ்து சாஸ்திரம் சொல்லும் உண்மை !!

ஆன்மீகம்

ஒரு மனிதனுடைய ஆரோக்கியமான வாழ்விற்கு இன்றி அமையாததாக காணப்படுவது அன்றாடம் உண்ணும் உணவு ஆகும். ஏனினில் நம் வாழ்க்கை பயணமானது நாம் உண்ணும் உணவை பொறுத்து தான் அமைகின்றது. நாம் உழைப்பதே ஒரு வேளை நிம்மதியான சாப்பாட்டிற்கு தான். உண்ணும் உணவே மருந்து என பல்வேறு முக்கியத்துவம் கொண்ட இந்த உணவை உண்ணும் போது எந்த திசையில் அமர்ந்து சாப்பிடுகிறோம் என்பதும் முக்கியம். நம் முன்னோர்கள் ஒவ்வொன்றிக்கும் ஒவ்வொரு திசையை முக்கியத்துவப்படுத்துவது நாம் பார்த்து கற்றுக்கொள்ள மறந்த ஒன்று. ஒவ்வொரு திசைக்கும் ஒரு பலன் உண்டு. யார் எந்த திசை நோக்கி அமர்ந்து உண்ண வேண்டும் என்பதை பற்றி வாஸ்து சாஸ்திரங்கள் கூறுகின்றது.

நம் முன்னோர்கள், நம் அன்றாட பழக்க வழக்கங்களில், பல சாஸ்திரங்களைப் பின் பற்றி உள்ளார்கள். அதை இன்றும் மக்கள் கடைப்பிடித்து வருகின்றனர். அவை எல்லாம் பொழுது போக்கிற்காக சொல்லப் பட்டவை அல்ல. அவற்றின் பொருள் உணர்ந்து, பயன்களைத் தெரிந்து கொண்டு தான், பல செய்திகளைச் சொல்லி இருக்கிறார்கள். அப்படித் தான் நாம் சாப்பிடும் முறைகளைப் பற்றியும் குறிப்பிட்டு உள்ளார்கள்.

இப்போது வீடாகட்டும், வெளியில் உள்ள ஹோட்டல்களில் ஆகட்டும். சாப்பாடெல்லாம் தட்டில் தான் வைத்துப் பரிமாறுகிறார்கள். வீட்டில் நாம் தட்டில் சாப்பிடுவதால், நம் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்காது. இவ்வாறு கூறுகின்ற வாஸ்து சாஸ்திரங்கள் படி அமர்ந்து சாப்பிடும் போது அதிலும் நமக்கு அதிஸ்டம் கிடைக்கின்றது. அப்படியானால் எந்த திசைகளில் இருந்து சாப்பிட வேண்டும் என்பதனை இங்கு பார்க்கலாம்.

கிழக்கு திசை நோக்கி அமர்ந்து சாப்பிட்டால் – ஒருவர் சாப்பிடுகின்ற வேளையில் கிழக்கு திசையை நோக்கி அமர்ந்து சாப்பிட்டால், அவர்களுக்கு ஆயுள் அதிகரிக்குமாம்.

மேற்கு திசை நோக்கி அமர்ந்து சாப்பிட்டால் – ஒருவர் மேற்கு திசையை நோக்கி அமர்ந்து சாப்பிட்டால், அவர்கள் தனது வாழ்வில் செல்வச் சிறப்புடன் வாழ்வார்களாம்.

தெற்கு திசை நோக்கி அமர்ந்து சாப்பிட்டால் – ஒருவர் தெற்கு திசையை நோக்கி அமர்ந்து சாப்பிட்டால், அவர்களின் வாழ்க்கையில் அனைத்து புகழும் உண்டாகுமாம்.

வடக்கு திசை நோக்கி அமர்ந்து சாப்பிட்டால் – ஒருவர் வடக்கு திசையை நோக்கி அமர்ந்து சாப்பிட்டால், அவர்களுக்கு ஆபத்து உள்ளது. எனவே அவ்வாறு சாப்பிடக் கூடாது என்று சாஸ்திரங்கள் சொல்கிறது.

எனவே கேள் கூறப்பட்டுள்ள வாஸ்து சாஸ்திரங்களின் படி இனி மேல் நீங்கள் சாப்பிடும் போது எந்த திசையில் அமர்ந்து சாப்பிடுகிண்ரம் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *