ஒரே ஒரு வார்த்தையால் உலக ட்ரெண்டிங் ஆகிவரும் வெள்ளை கிளி !! அப்படி என்ன கதைத்தது என்று உங்களுக்கு தெரியுமா !!

விந்தை உலகம்

வெள்ளை கிளியின் ட்ரெண்டிங் வார்த்தை ….

அதிகமானவர்களின் வீடுகளில் பறவையினங்களிலேயே செல்ல பிராணியாக இருப்பது தான் இந்த கிளிகள் தான் அதிகம். சொன்னதை சொல்லுமாம் கிளி பிள்ளை என்னும் பழமொழிக்கேற்ப அநேகரை கவர்ந்து இழுக்கும் இயல்பினை தன்னகத்தே கொண்டது தான் கிளிகள். ஏனைய செல்ல பிராணிகளில் இருந்து இவை சற்று தனித்துவமானவை ஏனெனில், பேசும் ஆற்றலை இவைகள் கொண்டிருப்பதால்.

அதிகளவிலான மக்கள் உலகில் பல பகுதிகளிலும் பல்வேறு மொழி பேசும் மக்களும் கிளிகளை செல்ல பிராணியாக வளர்த்து வருகிறார்கள். அந்த வகையில் ஒற்றை வார்த்தையால் மில்லியன் இதயங்களை நெகிழ செய்த வெள்ளை கிளி ஒன்றினுடைய இதயத்தை உருக்கும் அழகிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது. இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட ஒரு வீடியோ காட்சியில்

ஒரு அழகான வெள்ளை கிளி முதல் முறையாக சந்தித்த ஒரு நாய்க்குட்டியிடம் ‘ஐ லவ் யூ’ என்று சொல்லும் கியூட் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. தனது செல்லப்பிராணிகளின் வேடிக்கையான நிகழ்வுகளை துணுக்குகளை தவறாமல் பகிர்ந்து கொள்ளும் வெண்டி மேரி என்ற பெண் இந்த வீடியோவை ஷேர் செய்திருந்தார்.அந்த வீடியோவில், அவரது கிளி ஸ்வீட் பே மற்றும் ஒரு அழகான நாய்க்குட்டியை அறிமுகப்படுத்தியுள்ளார்.

அவர் வீடியோ எடுக்கும் போது கிளி அந்த நாய்க்குட்டியின் தலையை காதால் கோரி விடுவதை காண முடியும்.சில நொடிகளுக்கு பிறகு, வேண்டி கிளியை பார்த்து நாய்க்குட்டியை நேசிப்பதாக கூறுமாறு கேட்கிறார். அப்போது மனிதனுக்கு பதிலளிக்கும் விதமாக அந்த கிளி , ‘ஐ லவ் யூ’ என ஆச்சரியப்படும் வகையில் கூறுகிறது.

தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது. வீடியோ கீழே …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *