இத்தனைநாள் இப்படித்தான் கடவுளை வழிபடுகிறீர்களா !! சிவவாக்கியர் சித்தர் கூறும் கடவுளை வழிபடும் ரகசியமுறையும்! பலனும்!

ஆன்மீகம்

இப்படித்தான் கடவுளை வழிபடுகிறீர்களா …..

பொதுவாக எல்லோருக்குள்ளும் கடவுள் பக்தி கட்டாயம் இருக்கும், அவ்வாறு கடவுள் பக்தி இல்லாதவர்களும் இந்த உலகில் இருக்கிறார்கள், இவர்களை நாத்திகவாதிகள் என அழைப்பார்கள். மனித வாழ்க்கை சிறப்பாவும் மேன்மையடையவும் கடவுளை வணங்குவது முக்கியமான ஒன்றாகும். ஆனால் இன்றைய சமூகத்தில் இறைவனை எப்படியெல்லாம் தொழுது கொள்ளவேண்டும் என்பதனனை மக்கள் மறந்து விடுகிறார்கள்.

கண் போன போக்கிலும் கால் போன போக்கிலும் வாழ்ந்து விட்டால் போதும் என்ற உணர்வுடன் வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் பொதுவாக கடவுளை எப்படி வழிபடுகின்றோம் எப்படி நடந்து கொள்கிறோம் என்பது பற்றி எவருமே யோசிப்பது இல்லை. கடவுள் பக்தி இல்லாத நாத்திகவாதிகள் கூட தீராத துன்பம் பிரச்சனைகள் வரும் பொழுது அவர்களுக்குள் உண்மையான பக்தி இருக்கும்.

ஆனால் தினமும் வழிபடும், கடவுள் பக்தியுள்ள, கடவுளை நம்பும் சிலருக்கு அவரை எப்படி வழிபட வேண்டும்? என்பது புரிவதில்லை. அந்த வகையில் சிவவாக்கியர் சித்தர் கூறும் கடவுளை வழிபடும் ரகசியமுறையும் பலனும் பற்றி பார்க்கலாம். இந்த சிவவாக்கியர் சித்தர் 18 சித்தர்களில் ஒருவராக விளங்குபவர்,

மனதின் சிந்தனை
ஒவ்வொருவருடைய மனமும் நபர்களுக்கு தகுந்தாற்போல மாறுபடும். இதனால் தான் மனம் ஒரு குரங்கு என்பர்.
கோவிலுக்கு வந்து விட்டு உங்கள் வீட்டு பிரச்சனைகளையும், தொழில் ரீதியான பிரச்சனைகளையும் நினைத்துக் கொண்டிருந்தால் அந்த இடத்தில் பக்தியில் குற்றம் உண்டாகி விடுகிறது. நீங்கள் கோவிலில் இறைவனை பார்க்கும் பொழுது உங்களுடைய மனமும், எண்ண ஓட்டமும் எதைப் பற்றிய சிந்தனையில் இருக்கிறது என்பது முக்கியம். அதன் பிறகு நீங்கள் வைக்கும் வேண்டுதல்கள் எப்படி பலிக்கும்? என்பதை சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

முன் ஆயத்தம்
அவசரமான உலகில் எல்லோருமே முன் ஆயத்தம் இன்றி மளமளவென கடவுளை தேடுபவர்களாக தான் இருக்கிறார்கள். வெள்ளிக்கிழமையில் விளக்கு ஏற்ற வேண்டும் என்பது கட்டாயமாகும். ஒரு நாள் சரியான நேரத்திற்கு சாமி கும்பிட முடியவில்லை! என்ன செய்வீர்கள். அதிகமானவர்கள் மளமளவென எல்லாவற்றையும் ஏற்பாடு செய்வார்கள். ஆனால் அந்த இடத்தில் உண்மையான பக்தி இருக்குமா? நேரமாகிவிட்டது விளக்கேற்றி ஆகவேண்டும். அவ்வளவு தான் உங்கள் மனதில் இருக்கும். இப்படி இறைவனை வழிபடும் பொழுது எப்படி வேண்டுதல்கள் பலிக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *