குருவின் 7ம் பார்வையால் அதிர்ஷ்டம் கொட்டோ கொட்டுனு கொட்டப்போகிறது எந்த ராசிக்கு ! குரு அதிசார பெயர்ச்சி பலன்கள் !!

ஆன்மீகம்

குரு அதிசார பெயர்ச்சி பலன்கள் !!

ஜோதிடத்தில் கிரக பெயர்ச்சி முக்கியத்துவம் வாய்ந்தது. அதில் மிக மக்கியானதாகக் கருதப்படுவது முழுசுபர் என அழைக்கப்படக்கூடிய குரு பகவான்.இந்த குரு பகவான் ஏப்ரல் 5, பங்குனி 23ம் தேதி செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12.24 மணிக்கு மகர ராசியில் சஞ்சரிக்கும் குரு தனது அதிசார பெயர்ச்சியாகக் கும்பத்திற்கு பெயர்ச்சி ஆகிறார்.இது மினி குரு பெயர்ச்சி என்று நாம் எடுத்துக் கொள்ளலாம். பல்வேறு வகையில் குரு அதிசார பெயர்ச்சி சிம்ம ராசிக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித்தருவதாக அமையப்போகிறது.

ஜோதிடத்தில் கிரக பெயர்ச்சி முக்கியத்துவம் வாய்ந்தது. அதில் மிக மக்கியானதாகக் கருதப்படுவது முழுசுபர் என அழைக்கப்படக்கூடிய குரு பகவான்.இந்த குரு பகவான் ஏப்ரல் 5, பங்குனி 23ம் தேதி செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12.24 மணிக்கு மகர ராசியில் சஞ்சரிக்கும் குரு தனது அதிசார பெயர்ச்சியாகக் கும்பத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். இது மினி குரு பெயர்ச்சி என்று நாம் எடுத்துக் கொள்ளலாம். பல்வேறு வகையில் குரு அதிசார பெயர்ச்சி சிம்ம ராசிக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித்தருவதாக அமையப்போகிறது.

குரு அதிசார பெயர்ச்சி காலம்
பொதுவாக குரு ஒரு ராசியில் ஒரு ஆண்டு காலம் சஞ்சரிக்கக்கூடியவர். இவர் சூரியனை அடிப்படையாகக் கொண்டு ஒரு ஆண்டுகளுக்குள், தான் முறையாக இருக்கக்கூடிய ராசியிலிருந்து, அடுத்த ராசிக்கு வேகமாக செல்லக்கூடிய வாய்ப்பு உண்டு.அந்த வகையில் மகரத்தில் சஞ்சரிக்கும் குரு அவிட்டம் 2ம் பாதத்திலிருந்து கும்பத்தில் இருக்கும் அவிட்டம் 3ம் பாதத்திற்கு பெயர்ச்சி ஆகி சதயம் நட்சத்திரம் வரை சென்று மீண்டும் செப்டம்பர் 13ம் தேதி மகரத்திற்கு வக்ர நிவர்த்தி ஆகி திரும்ப வர உள்ளார்.இது போன்ற நிகழ்வு ஒவ்வொரு ஆண்டும் ஒரு 3 மாதங்கள் நடப்பது வழக்கம். ஆனால் இந்த முறை கிட்டத்தட்ட 5 மாதத்திற்கும் மேலாக 162 நாட்கள் அதிசாரமாக சென்று திரும்புவார்.

குரு பகவான் எப்படிப்பட்டவர்?
நவகிரகங்களில் குரு மட்டும் தான் ஒளி பொருந்திய முழு சுப கிரகமாகும். குருவின் பார்வை பட்டால் கோடி புண்ணியம் என்பார்கள். எந்த ராசியின் மீது குருவின் பார்வை விழுந்து விட்டால் குருவின் பார்வை பெற்றவர் செல்வங்களைப் பெறுவதோடு, அதை விட மிக முக்கியமானதாக அவரின் ஒழுக்க நிலை மேம்படும். ஒரு மனிதனுக்கு தேவையான அனைத்து மனிதத்தன்மையைத் தரக்கூடியவர். பிறரால் மதிக்கப்படுதல், வணங்கப்படுதல் என ஒரு பெரிய குணநலன்களை ஒருவர் தி டீ ரென பெற்றால் அது குருவினால் மட்டுமே சாத்தியம்.யாருக்கும் அடங்காதவராகக் கோபக்காரராக இருப்பவன் கூட சாந்தமாகிவிடுவான். பண்பாடுடையவனாகவும், தர்ம சிந்தனை மிக்கவராக குரு மாற்றுவார்.

சிம்ம ராசிக்கு குரு எப்படிப்பட்ட பலன் தருவார்?
தற்போது குரு ராசிக்கு 6ம் இடமான மகரத்தில் நீச நிலையில் இருக்கிறார். அதனால் பெரியளவு நன்மை கிடைக்காத நிலை இருந்தது.தற்போது குரு அதிசாரமாக ராசிக்கு 7ம் இடமான கும்பத்திற்கு செல்வதால், குருவின் 7ம் பார்வை உங்கள் மீது விழுகிறது.குருவின் 5ம் பார்வையாக ராசிக்கு 11ம் இடமான மூத்த சகோதரர், லாப ஸ்தானத்தைப் பார்க்கிறார். அதனால் நல்ல நண்பர்கள் மூலமாக ஆதரவைப் பெறுவீர்கள். மேலும் உங்களின் செயல்பாடு பல வகையில் லாபத்தைக் குவிக்கக்கூடியதாக இருக்கும்.

உங்களின் அறிவுரை, ஆலோசனையை மற்றவர்கள் ஏற்றுக் கொண்டால் அவருக்கு மிகப்பெரியளவில் நன்மையைப் பெறலாம். நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் என நினைக்கக்கூடிய நல் உள்ளம் கொண்ட உறவினர்கள், நண்பர்கள் மூலம் ஆதாயமும், செல்வமும் பெற முடியும்.எடுத்த காரியத்தில் வெற்றி பெறலாம். ஆரோக்கியம் மேம்படும். உங்களின் செலவுகள் குறைந்து சேமிக்கும் மனப்பாங்கு ஏற்படும். உங்களின் வருவாய் அதிகரிக்கும் என்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சிக்குப் பஞ்சமிருக்காது.குழந்தைகளின் ஆரோக்கியம் மேம்படும். குலதெய்வத்தை தரிசித்து வருவீர்கள்.

எதிலும் லாபம் அதிகமாக இருக்கும் என்பதால், அதை தகுந்த முறையில் சேமிக்க வேண்டிய வழிகளை முன்னெடுங்கள்.
குருவின் 9ம் பார்வை ராசிக்கு 3ம் இடமான தைரிய, வீரிய ஸ்தானம், இளைய சகோதரர் ஸ்தானம் மீது விழுகிறது. இதனால் பல வழியிலிருந்து நல்ல தகவல்களையும், அறிவையும் பெறுவீர்கள். மன பலம் கூடும். உங்களின் நுண்ணறிவு அதிகரிக்கும். சிறிய பயணங்கள் ஏற்படும் அது மனதிற்கு குளுமையைத் தரும்.உங்களின் காது, மூக்கு, தொண்டை சார்ந்த உடல் ஆரோக்கிய பிரச்னைகள் தீரும். உடல் வலி, தொந்தரவுகள் எல்லாம் விலகி உடல் பொழிவு பெறும். எழுத்து சார்ந்த தொழில், கமிஷன் தொழில் உள்ளிட்டவை பிரகாசிக்கும்.

நினைத்ததெல்லாம் நடக்கும். உங்களின் செயல்கள் சிறப்பாக நிறைவேறு உங்கள் உடல், மனம் சிறப்பாக ஒத்துழைப்பதோடு, குடும்பம், பணியிடத்திலும் நல்ல ஆதரவு ஏற்படும்.அதோடு எந்த ஒரு செயலை செய்வதற்கு முன் எடுக்கக்கூடிய முடிவுகளை சிறப்பாக, தீர்க்கமாக எடுப்பீர்கள். அதனால் உங்களின் செயல் திட்டமிடல் சிறக்கும். வெற்றி வாய்ப்பு பல மடங்கு உயரும்.வாழ்க்கைத் துணையின் அன்பும், ஆதரவும் மிக சிறப்பாக இருக்கும். கூட்டு தொழில் செய்பவர்களுக்குப் பங்குதாரரின் ஆதரவு சிறப்பாக இருப்பதோடு, தொழிலாளர்களின் செயல்பாடு உங்களுக்கு திருப்தியும், லாபம் தருவதாக இருக்கும். உத்தியோகம், தொழில் முன்னேற்றம் ஏற்படும்.

வனமாக இருக்க வேண்டியவை
குரு அவிட்ட நட்சத்திரம் 3, 4ம் பாதத்தில் இருக்கும் போது பெரியளவில் நன்மையைத் தரமாட்டார். அதுமட்டுமல்லாமல் சில விஷயங்களில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.பல வகையில் விரயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. வீடு, வண்டி, வாகனங்கள் மூலமாக விரயம் ஏற்படக்கூடும். வாகனங்களில் செல்லும் போது கூடுதல் கவனத்துடன் செல்வது அவசியம். நீங்கள் அதிகமாக சம்பாதித்தாலும் அது உங்களிடம் தங்குவது சிரமமே.அதிகமாக பயணங்கள், ஊர் சுற்றக்கூடிய நிலையில் இருப்பீர்கள். இதனால் குடும்பத்தில் உங்கள் மீதான மதிப்பு குறையும்.அவச்சொல் கேட்க வேண்டி இருக்கும்.

பெற்றோரின் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நல்லது.இந்த குரு அதிசார பெயர்ச்சி சிம்ம ராசிக்கு பல வழிகளில் நன்மை அதிகமாக தரக்கூடியதாக இருக்கும். அதை தக்க வகையில் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.பத்திரகாளி அம்மனை வழிபட்டு வந்தால் உங்களின் பிரச்னகள் தீர்வுகள் ஏற்படும்.தினமும் சூரிய வழிபாடு செய்வதால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.முருகன் வழிபாடு செய்வது சிறப்பும்.அதிர்ஷ்ட எண் : 1, 5, 6 அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை, சிகப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *