பண மழையில் இன்று நனையப்போகும் ராசியினர் தான் !! வெற்றியும் பணமும் தேடிவர போகிறதாம் .. எந்த ராசிக்கு தெரியுமா?

ஆன்மீகம்

நனையப்போகும் ராசியினர் ….

மேஷம் – இந்த ராசிக்காரர்களுக்கு இன்றைய நாளைப் பொறுத்தவரையில் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். இடமாற்றச் சிந்தனை மேலோங்கும். கட்டிடப் பணியில் இருந்த தொய்வு அகலும். கொள்கைப் பிடிப்பை தளர்த்திக் கொள்வீர்கள். ரிஷபம் – இந்த ராசிக்காரர்களுக்கு இன்றைய நாளைப் பொறுத்தவரையில் புதிய பாதை புலப்படும் நாள். புகழ்மிக்கவர்களின் சந்திப்பு கிட்டும். இல்லத்திற்கு தேவையான பொருட்களை வாங்கிச் சேர்க்கும் எண்ணம் உருவாகும். உத்தியோகத்தில் உங்கள் கருத்துக்களுக்கு மதிப்புக் கூடும்.

மிதுனம் – இந்த ராசிக்காரர்களுக்கு இன்றைய நாளைப் பொறுத்தவரையில் தேக நலனில் தெளிவு பிறக்கும் நாள். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். பாதியில் நின்ற பணிகளை ஒவ்வொன்றாகச் செய்து முடிப்பீர்கள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். பயணம் பலன் தரும். கடகம் – இந்த ராசிக்காரர்களுக்கு இன்றைய நாளைப் பொறுத்தவரையில் வீடு, இடம் வாங்குவதில் கவனம் செலுத்தும் நாள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கிச் சேர்க்கும் எண்ணம் மேலோங்கும். வழிபாடுகளில் நம்பிக்கை வைப்பீர்கள். தி டீர் லாபம் தித்திக்க வைக்கும்.

சிம்மம் – இந்த ராசிக்காரர்களுக்கு இன்றைய நாளைப் பொறுத்தவரையில் பொறுமையோடு செயல்பட்டுப் பெருமை காண வேண்டிய நாள். விரயங்கள் அதிகரிக்கும். திட்டமிட்ட பயணமொன்றில் திடீர் மாற்றங்களைச் செய்து மகிழ்வீர்கள். அலுவலகப் பணிகளில் தாமதம் ஏற்படும். கன்னி – இந்த ராசிக்காரர்களுக்கு இன்றைய நாளைப் பொறுத்தவரையில் பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும் நாள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். அருகில் இருப்பவர்களை அனுசரித்துக் கொள்வதன் மூலம் ஆதாயம் கிட்டும்.

துலாம் – இந்த ராசிக்காரர்களுக்கு இன்றைய நாளைப் பொறுத்தவரையில் குடும்ப முன்னேற்றம் கூடும் நாள். வரவு திருப்தி தரும். எதிர்காலத்தைப் பற்றிய பயம் அகலும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். பஞ்சாயத்துக்கள் சாதகமாக முடியும். விருச்சிகம் – இந்த ராசிக்காரர்களுக்கு இன்றைய நாளைப் பொறுத்தவரையில் சந்தோ‌ஷம் அதிகரிக்கும் நாள். வாரிசுகளின் வளர்ச்சியைக் கண்டு மகிழ்ச்சியடைவீர்கள். பணவரவில் திருப்தி ஏற்படும். தொழில் ரீதியாக எடுத்த முயற்சி வெற்றி தரும். நூதனப் பொருட்களின் சேர்க்கை உண்டு.

தனுசு – இந்த ராசிக்காரர்களுக்கு இன்றைய நாளைப் பொறுத்தவரையில் எதிரிகள் உதிரியாகும் நாள். எந்தக் காரியத்தையும், எடுத்தோம் முடித்தோம் என்று செய்து முடிப்பீர்கள். வருங்காலத்தைப் பற்றிய சிந்தனை மேலோங்கும். உடல் நலம் சீராகி உற்சாகப் படுத்தும். மகரம் – இந்த ராசிக்காரர்களுக்கு இன்றைய நாளைப் பொறுத்தவரையில் தடைகள் அகலும் நாள். தனவரவு திருப்தி தரும். சந்தித்தவர்களால் சந்தோ‌ஷம் அதிகரிக்கும். பிள்ளைகளால் உதிரி வருமானங்கள் கிடைக்கும். பிற இனத்தாரின் ஆதரவோடு பிரச்சினைகளிலிருந்து விடுபடுவீர்கள்.

கும்பம் – இந்த ராசிக்காரர்களுக்கு இன்றைய நாளைப் பொறுத்தவரையில் வருமானம் அதிகரித்து வளம் பெருகும் நாள். மங்கலச் செய்தியொன்று மனை தேடி வந்து சேரலாம். ஆற்றல் மிக்கவர்களின் ஒத்துழைப்பால் அதிக லாபம் தொழிலில் கிடைக்கும். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். மீனம் – இந்த ராசிக்காரர்களுக்கு இன்றைய நாளைப் பொறுத்தவரையில் வெற்றிச்செய்திகள் வீடு வந்து சேரும் நாள். நட்பு வட்டம் விரிவடையும். வாங்கல்– கொடுக்கல்கள் ஒழுங்காகும். நண்பகலுக்கு மேல் தொழிலில் லாபம் உண்டு. பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *