பிறக்கப்போகும் தமிழ் புத்தாண்டு பிலவ வருடம்.. எப்படி இருக்கபோகிறது தெரியுமா !!

ஆன்மீகம்

பிலவ வருடம் எப்படி இருக்கபோகிறது ….

ஆண்டு தோறும் சித்திரை பிறக்கும் தினத்தையே தமிழ் புத்தாண்டாக கொண்டாடுகிறோம். ஆங்கிலத்தில் ஜனவரி, பிப்ரவரி என்று 12 மாதங்கள் உள்ளன. அதே போன்று சித்திரை, வைகாசி என்று 12 தமிழ் மாதங்கள் உள்ளன. சூரியன் மேஷத்திற்குள் நுழையும் நிகழ்வு சித்திரையில் நிகழ்கிறது. சூரியன், முதல் ராசியான மேஷ ராசிக்குள் நுழைவதிலிருந்து, அந்த ராசியை விட்டு வெளியேறும் வகையில் உள்ள காலம் சித்திரை மாதம்.

சித்திரையில் துவங்கி, பங்குனி வரையிலான தமிழ் மாதத்தில், அம்மாதத்தின் பௌர்ணமி அன்று வரும் நட்சத்திரத்தின் பெயரே அம்மாதத்தின் பெயர். சித்திரை மாத பௌர்ணமியன்று சித்திரை நட்சத்திரம் வருவதால் அந்த மாதத்தின் பெயர் சித்திரை. இதே போன்று, வைகாசி மாத பௌர்ணமியன்று, விசாக நட்சத்திரம் வருவதால், அந்த மாதத்தின் பெயர் வைகாசி. இப்படி ஒவ்வொரு மாதத்திற்கும், இந்த அடிப்படையில் தான் பெயர்கள் வழங்கப்படுகின்றன.

தமிழ் புத்தாண்டு தொடக்கம் – பிலவ தமிழ் புத்தாண்டு வரும் ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி சித்திரை மாதம் 01ஆம் நாள் புதன்கிழமை அதிகாலை 02.31 மணிக்கு துவங்குகின்றது. பலன்கள் – மருத்துவ துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். கல்வி தொடர்பான செயல்பாடுகளில் சில மாற்றங்கள் ஏற்படும். ஆன்மிகம் சார்ந்த துறைகளில் சில சலுகைகள் கிடைக்கும். விவசாயம் தொடர்பான பணிகளில் மாற்றமான சூழல் உண்டாகும்.

வங்கி துறைகளில் மாற்றமான சூழல் ஏற்பட்டு மறையும். வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் சில நெருக்கடிகள் ஏற்பட்டு மறையும். இன்டர்நெட் மற்றும் டவர் தொடர்பான பணிகளில் கவனம் வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *