ஏப்ரல் மாதத்தில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கொட்டோ கொட்டுனு கொட்டும்? விரய சனியால் கவனமாக இருக்க வேண்டிய ராசி !!

ஆன்மீகம்

இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம்

ஏப்ரல் மாதத்தில் 5ம் தேதி குரு அதிசார பெயர்ச்சி நடக்க உள்ளது. ஏப்ரல் 14ம் தேதி தமிழ் புத்தாண்டு பிலவ வருடம் தொடங்குகிறது. இப்படி முக்கியத்துவம் வாய்ந்த பல ஜோதிட நிகழ்வுகள் நடக்க உள்ள நிலையில் ஏப்ரல் மாதத்தில் எந்த ராசியினருக்கு அதிர்ஷ்ட பலன்களும், எந்த ராசிக்கெல்லாம் சற்று கவனமாக இருக்க வேண்டிய பலனும் ஏற்படும் என்பதைப் பார்ப்போம்.

மேஷம்
வீடு வாங்குதல், இடமாற்றம் செய்ய நினைப்பவர்கள், சித்திரையில் இடமாற்றம் செய்யலாம். சித்திரையில் தொழில், கல்வி சார்ந்த இடமாற்றம் ஏற்படும். குழந்தைகள் தொடர்பான மருத்துவ ரீதியான ஆய்வு செய்வீர்கள். இது உங்களுக்கு சாதகத்தை தருவதாக இருக்கும். ஒரு சில விசயங்களில் தடுமாற்றம் இருந்தாலும், சில விஷயங்களில் நல்ல யோக பலனைத் தரக்கூடியதாக இருக்கும். அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள், பச்சை

ரிஷபம்
குழப்பத்தால் மன ப யம் ஏற்படும். பயத்தைத் தவிர்த்து எந்த ஒரு செயலையும் தைரியத்துடன் செய்வதால் காரியங்களில் வெற்றி ஏற்படும். இந்த மாதத்தில் வெளியூர் ப ய ங்கள் செய்ய வாய்ப்புள்ளது. மாத தொடக்கத்திலிருந்து பயணங்கள் தொடர்பான எண்ணங்கள் மனதில் ஓடிக் கொண்டே இருக்கும். இந்த மாதத்தில் வெளியூர், வெளிநாடு பயணங்களுக்கான முயற்சிகளை எடுக்கலாம். தற்போது இருக்கும் வேலையை விட நல்ல சம்பளம், இடத்தில் வேலை கிடைக்க வேண்டும் என்ற முயற்சி செய்பவர்களுக்கு, நல்ல வேலை மாற்றம் ஏற்படலாம்.

​மிதுனம்
இந்த மாதத்தில் தொழில், உத்தியோக மாற்றத்தை தவிர்ப்பது மிகவும் அவசியம். உங்களுக்கு உத்தியோக மாற்றம் கட்டாயம் என்றால் செய்யலாம். ஆனால் நீங்களே விரும்பி செய்வதென்றால் அது தவிர்க்கப்பட வேண்டியது. ஏனெனில் அடுத்து இதை விட சிறப்பான வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. அதிர்ஷ்ட நிறம் : பச்சை, மஞ்சள் அதிர்ஷ்ட எண் : 1, 3, 7

​கடகம்
தொழில், வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த மாற்றங்கள் உண்டாகும். உங்களின் செயல்களை திட்டமிட்டுச் செய்வது சிறப்பு. வெளியூர், வெளிநாடு பயணங்கள் செய்ய முயற்சி செய்ய ஏற்ற மாதம். வீடு மாற்றம், புதிய வீடு கட்ட, மனை வாங்க சிறப்பான மாதம். திருமணம், நிச்சயதார்த்தம் தொடர்பான சுப காரியங்கள் நிறைவேற வாய்ப்புள்ளது.
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண் : 6,9

​சிம்மம்
கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். குழந்தைகளுடனான ஒரு பிணைப்பு சிறப்பாக இருக்கும். உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். பெற்றோருடனான பிரச்சினைகள் தீரும். ஆரோக்கியம் சிறக்கும். தாய் வழி உறவுகள் மூலம் நன்மை உண்டாகும். பூர்விக சொத்துகளில் உங்களுக்கு சாதக நிலை ஏற்படும். அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு அதிர்ஷ்ட எண் :4,6

​கன்னி
பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். வீடு பராமரிப்பு, வீட்டு உபயோக பொருட்கள் வாங்க வாய்ப்புள்ளது. கோச்சார ரீதியாக இந்த மாதம் ஏற்றம் மிகுந்த மாதமாக இருக்கும் என்பதால், புதிய தொழில், வேலை, முயற்சிகளைத் தொடங்க மிகவும் ஏற்றதாக இருக்கும். புதிய தொழில் தொடங்குபவர்கள் உங்கள் சுய ஜாதகத்தை ஆராய்ந்து கொள்வது நல்லது. அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண் : 1, 3,5

​துலாம்
உத்தியோகம், தொழில் போன்றவற்றில் நீங்கள் மட்டுமே செய்ய வேண்டிய முக்கிய விஷயங்களை முடிப்பதில் மிகவும் கவனமாக இருப்பது அவசியம். முக்கிய முடிவு எடுப்பதிலும், வெளியூர், வெளிநாடு பயணங்கள் குறித்த முடிவுகள் எடுப்பதில் அவசரம் காட்ட வேண்டாம். வேலை மாற்றங்களில் கவனமாக இருப்பது அவசியம்.

​விருச்சிகம்
புதிய வேலை கிடைக்கும். தொழில் மாற்றம், வியாபார விருத்தி அடையக்கூடிய மாதமாக இருக்கும். சுய தொழில் செய்யக்கூடிய வாய்ப்பை எ தி ர்பார்க்கலாம். சுய தொழில் யோகம் உள்ள ஜாதகத்திற்கு இந்த காலம் சிறப்பாக அமையும். அதிர்ஷ்ட எண் : 1, 3, 5 அதிர்ஷ்ட நிறம் : நீலம், மஞ்சள்

​தனுசு
வண்டி, வாகனங்களை கையாளும் போது கவனம் தேவை. அதிக விலை உயர்ந்த பொருட்களை பயன்படுத்தும் போதும், கையாள்வதிலும் எ ச் ச ரிக் கையாக, கவனம் கொள்ளவும். ஆரோக்கியத்தில் சிறு தொந்தரவுகள் ஏற்படலாம். நரம்பு சார்ந்த மற்றும் மற்ற உடல் பிரச்னைகள் சிறிது தொந்தரவு தந்து செல்லும். அதிர்ஷ்ட நிறம் : பச்சை, இளம் சிவப்பு, இளம் மஞ்சள் அதிர்ஷ்ட எண் : 3, 5, 9

​மகரம்
திருமணம் சார்ந்த முயற்சிகள் சிறப்பாக நிறைவேறலாம். குழ்ந்தைபேறுக்கான முயற்சி மருத்துவம் எடுத்துக் கொள்ளலாம். பொதுவாக இந்த ஆண்டில் ஆரோக்கிய விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டிய நிலையில், இந்த மாதம் குழந்தைகளின் நலனில் அக்கறை தேவை. மாணவர்களின் கல்வி நிலை சுமாராக இருக்கும் அதிர்ஷ்ட நிறம் : நீலம், இளம் மஞ்சள் அதிர்ஷ்ட எண் : 3, 9

​கும்பம்
விரய சனி நடக்கும் காலமாக இருப்பதோடு, நல்ல வரவுகள் அதிகமாக இருக்கும் அதேபோல அதை செலவு செய்யக்கூடிய நிலையும் இருக்கும். அதை சேமித்து சுப செலவாக செய்வது அவசியம். அதன் மூலம் விரய செலவாக போகாமல் தவிர்க்கலாம். வேலை மாற்றம், புதிய வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. இருப்பினும் வேலை சார்ந்த குழப்பம் ஏற்படும் என்பதால் தெளிவான முடிவு எடுப்பது அவசியம். சிரமங்கள் அதிகமாக இருக்கும் என்பதால் கூடுதல் முயற்சி தேவை. அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண் : 1, 3, 5,7

​மீனம்
பொதுவாக வாக்கு சம்பந்தமான விஷயங்களில் கவனமாக இருந்தாலே போதுமானது. இந்த மாதம் பல்வேறு வகையில் யோக பலனைப் பெறலாம். பணி இடங்களில் உயர் பதவி ஏற்படலாம். குழந்தைகளால், மூத்தவர்களால் நன்மை ஏற்படலாம். உறவுகள், நண்பர்கள் மூலம் அனுகூலம் உண்டாகும். பிரிந்த உறவு ஒன்று சேரும். அதிர்ஷ்ட எண் : 4, 6 அதிர்ஷ்ட நிறம் : பச்சை, மஞ்சள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *