உச்சம் பெறும் சுக்கிரன் மற்றும் சூரியன்… ஏப்ரல் மாதத்தில் பேரதிர்ஷ்டம் யாருக்கு? முழுபலன்கள் இதோ !!

ஆன்மீகம்

ஏப்ரல் மாதத்தில் பேரதிர்ஷ்டம் …..

உச்சம் பெற்ற சுக்கிரன், சூரியன் ஏப்ரல் மாதத்தில் அனைத்து ராசிக்காரர்களுக்கு நிறைய அற்புதங்களை கொடுக்கப் போகிறது. ஏப்ரல் மாதம் கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் நவகிரகங்களின் நாயகன் சூரியன் மீன ராசியில் பயணிக்கிறார் உச்சம் பெற்ற சுக்கிரன், ரிஷபத்தில் செவ்வாய் ராகு, விருச்சிகத்தில் கேது, மகரத்தில் சனி, குரு, கும்ப ராசியில் புதன் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. ஏப்ரல் மாதம் மேஷ ராசிக்கு மன மகிழ்ச்சியும் அதிர்ஷ்டமும் நிறைந்த மாதமாக அமையப்போகிறது.

கிரக பெயர்ச்சியைப் பார்த்தால் ஏப்ரல் மாதத்தில் சூரியன் மீன ராசியில் இருந்து 14ஆம் தேதி மேஷ ராசிக்கு சென்று உச்சமடைகிறார். உச்சம் பெற்ற சூரியனின் பார்வை துலா ராசியின் மீது விழுகிறது. சுக்கிரனும் மேஷ ராசியில் பயணிக்கிறார். புதன் நீசம் பெற்று சஞ்சரிப்பார். குரு பகவான் ஏப்ரல் 5ஆம் தேதி மகர ராசியில் இருந்து அதிசார பெயர்ச்சியாகி கும்ப ராசிக்கு செல்கிறார். ராகு உடன் இணைந்துள்ள செவ்வாய் ரிஷப ராசியில் இருந்து 13ஆம் தேதி மிதுன ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். இந்த மாதத்தில் கிரகங்களின் இடமாற்றம் அதிகம் உள்ளது. இந்த கிரகங்களின் சஞ்சாரம் மாற்றத்தின்படி மேஷம் முதல் கடகம் வரை முதல் நான்கு பலன்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

மேஷம்
அற்புதமான மாதம் – மேஷ ராசிக்கு விரைய ஸ்தானத்தில் பயணம் செய்யும் சூரியன் 14ஆம் தேதி உச்சமடைகிறார். சனி பத்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். லாப ஸ்தானத்தில் குரு வருகிறார். செவ்வாய் இந்த மாதம் தன ஸ்தானத்தில் ராகு உடன் பயணம் செய்கிறார். இந்த மாதம் ரொம்ப நல்ல மாதம் தொழில் வளமடையும் வேலையில் உற்சாகமாக செயல்படுவீர்கள். குருவின் சஞ்சாரம் உங்களுக்கு நன்மையைத் தரப்போகிறது. வேலையில் தி டீ ர் மாற்றங்கள் ஏற்படும். அரசுத்துறையை சார்ந்தவர்களுக்கு அற்புதமான மாதம்.

சந்தோஷம் அதிகரிக்கும்
உங்கள் ராசி நாதன் செவ்வாய் மாத பிற்பகுதியில் ராகுவிடம் இருந்து விலகி விடுகிறார். செவ்வாய் மூன்றாம் வீட்டிற்கு நகர்கிறார். எப்பொழுதும் ப ர ப ர ப் பா கவும் சுறுசுறுப்பாகவும் வேலை செய்வீர்கள். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் நோய்கள் நிவர்த்தி அடையும். உச்சம் பெற்ற சுக்கிரனால் நிறைய சந்தோஷ சம்பவங்கள் நடைபெறும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். கல்வி கற்கும் மாணவர்கள் உற்சாகமாக இருப்பீர்கள். இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சிகரமான மாதம் பொன் பொருள் சேர்க்கை ஏற்படும்.

சுப காரியம் கைகூடும்
கொடுத்த கடன் திரும்ப கிடைக்கும். வேலையில் தி டீ ர் புரமோசன் வரும். ஏப்ரல் 5 முதல் குரு பத்தாம் வீட்டில் இருந்து லாப ஸ்தானத்திற்கு வருகிறார். சுப காரியம் கை கூடி வரும். அரசியல் துறைகளில் இருப்பவர்களுக்கு இது யோகமான கால கட்டம். புதன் இந்த மாதம் விரைய ஸ்தானத்தில் நீசமாக இருப்பதால் கவனம் தேவை. கோ ப த் தை கட்டுப்படுத்துங்கள் அ னல் வீசும் பேச்சுக்களை தவிர்த்து விடுங்கள். இந்த மாதம் வேலை விசயங்களில் கவனம் தேவை.

பேச்சில் நிதானம் தேவை
மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்தவும். நிதி நெ ரு க் க டி கள் நீங்கும். தங்க நகைகளை அடகு வைக்க வேண்டாம் தவிர்த்து விடுங்கள். கிரக சூழ்நிலைகள் மாத பிற்பகுதியில் பெண்களுக்கு சாதகமாக உள்ளது. கண் பிரச்சினைகள் நீங்கும். அலுவலகத்தில் இருந்து நல்ல செய்திகள் தேடி வரும். ஒரு சொல் வெல்லும் ஒரு சொல் கொல்லும். யார் மனதையும் புண் படுத்தும் வகையில் பேச வேண்டாம்.

கவனம் தேவை
வேலை செய்யும் இடத்தில் விழிப்புணர்வும் கவனமும் தேவை. உயரதிகாரிகளை ப கை த் துக் கொ ள்ள வேண்டாம். பிள்ளைகள் விசயத்தில் கவனமாக இருக்கவும் கண்காணிப்பும் அவசியம். சிவன் கோவிலுக்கு சென்று அம்பாளை வழிபடலாம். நமச்சிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை சொல்லி வணங்கலாம். சிவனுக்கு பாலாபிஷேகத்திற்கு பசும்பால் வாங்கிக் கொடுக்கலாம்.

ரிஷபம்
பத்தில் குருவின் சஞ்சாரம் – ரிஷப ராசிக்கு ஏப்ரல் மாதம் சனி 9ஆம் இடத்திலும் குரு பத்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். முன்னேற்றமான மாதமாக அமைந்துள்ளது. உங்கள் ராசிநாதன் உச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். வலிமையான சுக்கிரன் வசதிகளை ஏற்படுத்துவர். 10ம் தேதிக்கும் மிக முக்கியமான முடிகளை எடுக்கலாம்.

பயணங்களால் நன்மை
தனாதிபதி புதன் லாப ஸ்தானத்தில் உச்சம் பெற்ற சுக்கிரனும் சஞ்சரிக்கிறார். ஏப்ரல் 14ஆம் தேதி சூரியன் 12ஆம் வீட்டில் உச்சம் பெற்று சஞ்சரிப்பதால் தி டீ ர் மாற்றம் ஏற்படும். 10ஆம் தேதிக்கு மேல் சுக்கிரன் 12ஆம் வீட்டிற்கு வருவதால் சுப செலவுகள் ஏற்படும். பயணங்களால் நன்மை ஏற்படும். புதன் மாத பிற்பகுதியில் மிதுன ராசியில் இருந்து விலகி விரைய ஸ்தானத்தில் பயணம் செய்வதால் உடல் உ பா தை க ள் ஏற்படும். மாத பிற்பகுதியில் யோக கிரகங்கள் எல்லாம் விரைய ஸ்தானத்தில் பயணிப்பதால் தி டீ ர் விரைய செலவுகள் வரும்.

பேச்சில் கவனம்
சனியும் குருவும் பாக்ய ஸ்தானத்தில் இணைந்திருந்தனர். குரு சனியை விட்டு விலகி தனியாக சஞ்சரிப்பார்கள். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். ராசியில் ராகு ஏழில் கேது பயணிப்பதால் தம்பதியர் இடையே விட்டுக்கொடுத்து செல்லவும். உடன் வேலை செய்பவர்களுடன் கவனம் தேவை. மாத பிற்பகுதியில் வார்த்தைகளில் கவனம் தேவை.

பெற்றோர்கள் ஆலோசனை தேவை
முக்கிய முடிவுகள் எதுவாக இருந்தாலும் 10ஆம் தேதிக்குள் எடுக்கவும். மாணவர்களுக்கு படிப்பில் கவனம் தேவை. கல்வி தொடர்பாக எடுக்கும் முக்கிய முடிவுகளுக்கு பெற்றோர்களின் ஆலோசனை தேவை. செவ்வாய் உங்கள் ராசியில் இருந்து விலகி இரண்டாம் வீட்டிற்கு நகர்கிறார். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. ஜாமீன் கையெழுத்து இட்டு மாட்டிகொள்ள வேண்டாம்,மாணவர்கள் படிப்பில் கவனம் தேவை. ஒருமுறைக்கு இருமுறை எழுதி பார்த்து படிக்கவும்.

மிதுனம்
அஷ்டமத்து சனி – மாத முற்பகுதியில் பத்தில் சூரியன் பதவியில் உச்சத்தை கொடுப்பார். மாத பிற்பகுதியில் சூரியன் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் வந்து உச்சம் பெற்று சஞ்சரிப்பது சிறப்பு. செய்யும் தொழிலில் லாபம் வரும். அதிசார குருவின் பெயர்ச்சி உங்களுக்கு சாதகமாக உள்ளது என்றாலும் சனி உங்கள் ராசிக்கு அஷ்டம ஸ்தானத்தில் உள்ளது. எட்டாம் வீட்டில் உள்ள சனிபகவான் எட்டாத உயரத்தை எட்ட வைப்பார் சனி பகவான். வண்டி வாகனத்தில் போகும் போது கவனம் தேவை.

பண வரவு அதிகரிக்கும்
குருவின் பார்வை உங்களுக்கு அதிக பண வரவைத் தரும் இது நாள் வரை உங்களுக்கு இருந்த நிதி நெருக்கடிகள் நீங்கும். தடைகள் நீங்கி நல்ல சம்பவங்கள் நிறைய நடைபெறும். வேலை மாற்றம் கிடைக்கும். நல்ல வேலைக்கு முயற்சி செய்யலாம் கிடைக்கும். வண்டி வாகன வசதி ஏற்படும்.

பணப்புழக்கம் அதிகரிக்கும்
குரு பார்வையால் திருமண சுப காரியங்கள் நடைபெறுவதில் இருந்த தடைகள் நீங்கும். நல்ல வரன் தேடி வரும். சுப காரியங்களை பேசி முடிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். திருமணம் முடிந்து புத்திரபாக்கியத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். குடும்பத்தில் செல்வம் செல்வாக்கு உயரும். பிள்ளைகளுக்கு இருந்த பிரச்சினைகள் நீங்கும்.

போக்குவரத்தில் கவனம்
உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டில் சுக்கிரன் உச்சம் பெற்றிருப்பது சிறப்பு. மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடைகள் நீங்கும். செவ்வாய் பெயர்ச்சி உங்களுக்கு சாதகமாக இல்லை என்பதாலும் அஷ்டமத்தில் சனி இருப்பதாலும் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. வண்டி வாகன போக்குவரத்தில் கவனம் தேவை. வேலையில் விழிப்புணர்வு அவசியம்.

குடும்ப வாழ்க்கையில் கவனம்
உங்கள் ராசிக்கு செவ்வாய் வருகிறார் பேச்சில் நிதானம் தேவை. குடும்பத்தில் சில பிரச்சினைகள் வந்தாலும் விட்டுக்கொடுத்து செல்லவும். அதிக வேகத்தை தவிர்க்கவும். குடும்ப வாழ்க்கையில் சிக்கல்கள் பிரச்சினைகள் வரும். வேலை காரணமாக குடும்பத்தில் சில சிக்கல்கள் வரலாம் கவனம் தேவை. செவ்வாய் ராசியில் இருப்பதால் சகோதர உறவுகளில் சில பிரச்சினைகள் வந்தாலும் விட்டுக்கொடுத்து செல்லவும். சிவ ஆலயம் சென்று பாலபிஷேகத்திற்கு வாங்கித்தரவும். அம்மன் கோவிலுக்கு சென்று விளக்கேற்றி வழிபடவும் மொத்தத்தில் ஏப்ரல் மாதம் மிதுன ராசிக்கு மாற்றங்களும் முன்னேற்றங்களும் நிறைந்த மாதமாக அமைந்துள்ளது.

கடகம்
குரு பகவான்
ஏப்ரல் 5ஆம் தேதி மகர ராசியில் இருந்து அதிசார பெயர்ச்சியாகி கும்ப ராசிக்கு செல்கிறார். ராகு உடன் இணைந்துள்ள செவ்வாய் ரிஷப ராசியில் இருந்து 13ஆம் தேதி மிதுன ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். இந்த மாதத்தில் கிரகங்களின் இடமாற்றம் அதிகம் உள்ளது. இந்த கிரகங்களின் சஞ்சாரம் மாற்றத்தின்படி கடக ராசிக்கு ஏப்ரல் மாதம் அதிர்ஷ்டங்கள் நிறைந்த மாதமாக அமைந்துள்ளது.

நன்மைகள் நடைபெறும்
சந்திரனை ராசி அதிபதியாகக் கொண்ட கடக ராசிக்காரர்களே பாக்ய ஸ்தானத்தில் சூரியன், சுக்கிரன், புதன், என கிரகங்கள் இருப்பதால் உங்களுக்கு எதிர்பாராத நல்ல சம்பவங்கள் அதிகம் நடைபெறும். அஷ்டமத்தில் குரு, கண்டகச்சனி என கிரகங்கள் சஞ்சரித்தாலும் கவலைப்பட தேவையில்லை. வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். ஒன்பதாம் வீட்டில் புதன் நீச பங்க யோகம் பெற்றிருக்கிறார். தன ஸ்தானாதிபதி சூரியன் தர்ம ஸ்தானம் கர்ம ஸ்தானத்தில் சஞ்சரிப்பது சிறப்பு. தந்தை வழி உறவுகளால் நன்மைகள் நடைபெறும்.

கவனம் தேவை
உச்சம் பெற்ற சூரியன் உங்களுக்கு அதிக பலன்களைத் தருவார். குரு ராசிக்கு எட்டாம் வீட்டில் பயணித்தாலும் குருவின் பார்வை வாக்கு ஸ்தானத்தின் மீது விழுவதால் நீங்கள் நினைத்தது நிறைவேறும். சொன்னதை செய்து முடிப்பீர்கள். சனி கண்டகச்சனியாக இருந்தாலும் பாதகமில்லை. காரிய சித்தி உண்டாகும். வண்டி வாகனங்களில் போகும் போது கவனம் தேவை. அவ்வப்போது உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குரு எட்டாம் வீட்டில் பயணிப்பதால் டென்சன் அதிகரிக்கும் மன அழுத்தம் நீங்கும்.

பணம் பத்திரம்
விலை உயர்ந்த பொருட்களை பத்திரமாக வைத்துக்கொள்வது அவசியம். பண முதலீடுகளில் கவனம் தேவை. யாருக்கும் பணம் ஜாமீன் கையெழுத்து இட்டு வாங்கி தர வேண்டாம். வேலையில் அதிக கவனம் தேவை. வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். அதிக கடன் வாங்க வேண்டாம். அகலக்கால் வைக்க வேண்டாம் பொருள் நஷ்டம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மாணவர்கள் படிப்பில் கவனம் தேவை சாஸ்தா வழிபாடு செய்வது நன்மையை தரும். குதிரை மேல் அமர்ந்து வலம் வரும் காவல் தெய்வம் கருப்பசாமியை வழிபட நன்மை நடைபெறும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *