அ தி ர் ச் சியில் வாய்ப்பிளக்கும் திருப்பதி பக்தர்கள் !! சாதாரண முடியில் வருமானம் 100 கோடி!

ஆன்மீகம்

திருப்பதி பக்தர்கள் …

திருப்பதி ஏழுமலையானுக்கு பக்தர்கள் செலுத்திய தலைமுடிகள் இந்தியா-மியான்மார் எல்லையில் மீட்க்கப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையானுக்கு நேர்த்திக் கடனாக தலைமுடியை பக்தர்கள் செலுத்தி வருகின்றனர். இவ்வாறு தலைமுடி காணிக்கை செலுத்தப்பட்ட பின்னர், அவை தரம் பிரிக்கப்படும்.
25 முதல் 27 அங்குல நீளம் உள்ள தலைமுடி முதல் வகையை சேர்ந்தது. அதன் பின்னர், 18 முதல் 24 அங்குலம் தலைமுடி 2ம் வகையை சேர்ந்தது.

இப்படியாக காணிக்கை தலைமுடிகள் 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, அவை நன்றாக அலசி, உலர வைத்து, அதன் பின்னர் அவை சுத்தப்படுத்தி பாதுகாக்கப்படுகிறது. இந்த தலைமுடிகள் 3 மாதங்களுக்கு ஒருமுறை ஏலம் விடப்படுகிறது. இவற்றை ஏலம் எடுக்க வெளி நாட்டவர் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர். இதற்காகவே ஒரு கும்பல் அவர்களாகவே ஒரு வட்டம் அமைத்துக் கொண்டு ஏலத்தில் பங்கேற்பதாகவும் கு ற் ற ச்சாட்டுகள் நிலவுகின்றன.

ஆதலால், ஒரு சிலர் மட்டுமே ஏலத்தில் பங்கேற்று அவர்கள் கூறும் விலைக்கு தலைமுடி ஏலம் விடப்படுகிறது. இவை சீனா, இலங்கை, தாய்லாந்து போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப் படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் மிசோரம் அருகே மியான்மர் எல்லையில் வாகனங்களை அசாம் ஆ யு த ப் ப டை யி ன ர் த ணி க் கை செய்தனர். அப்போது, ஒரு சரக்கு லாரியில் 120 தலைமுடி மூட்டைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இது குறித்து வி சா ர ணை நடத்தியதில், இவை அனைத்தும் திருப்பதி ஏழுமலையானுக்கு பக்தர்கள் காணிக்கையாக வழங்கியவை என தெரிய வந்துள்ளது.

ஆனால், இவை ஏன் வெளிநாட்டுக்கு கடத்தப்பட வேண்டும்? இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்? என்ற சந்தேகம் அனைவருக்கும் எழுந்துள்ளது. இதேவேளை, சீனாவில் தான் அதிக அளவிலான செயற்கை முடிகள் தயாரிக்கப்படுகின்றது. எனவே இந்த முடிகள் சீனாவுக்கு கடத்தப்பட்டிருக்கலாம் என்ற கருத்தும் பரவலாக பேசப்படுகின்றது.

மேலும்,தேவஸ்தானத்திற்கும் இதற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. எந்த நிறுவனம் இது போன்ற செயலை செய்தார்கள் எனும் விவரத்தை வெளியிட்டால் அந்த நிறுவனத்தார் இனி ஏலத்தில் பங்கேற்காதவாறு ந ட வ டிக்கை எடுப்போம் என தேவஸ்தானம் தகவல் வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *