வீட்டில் துன்பங்கள் விலகவேண்டுமா?.. குல தெய்வ கோவில் சென்று இந்த ஒரு பொருளை வீட்டில் வைத்தாலே போதுமாம் !!

ஆன்மீகம்

குல தெய்வ கோவில் …..

வீட்டில் சகல செல்வங்களும் கிடைக்க அந்த வீட்டில் குலதெய்வம் தங்கியிருக்க வேண்டும். இலையெனில், அந்த வீடு முழுமையான இல்லமாக நிறைவு பெறாது. இதையடுத்து, குலதெய்வம் என்ற ஒரு வார்த்தையை உச்சரித்து, தெரியாத அந்த தெய்வத்தை மனதார நினைத்து தினமும் ஒரு முறையாவது வீட்டில் இருக்கும் பெண்கள் கட்டாயம் பூஜை அறையில், வழிபாடு செய்ய வேண்டும்.

இதை தவிர, குலதெய்வத்தை நம் வீட்டிலேயே நிரந்தரமாக தங்க வைக்க வேறு வழியை பற்றியும் பார்ப்போம்… வருடத்திற்கு ஒரு முறையாவது குல தெய்வ கோவிலுக்கு செல்ல வேண்டும். இதுதவிர வீட்டில் உள்ள அனைவரின் கையாளும் சிறிதளவு மண்ணை எடுத்து, ஒரு துணியில் வைத்து முடிச்சுப்போட்டு வீட்டிற்கு எடுத்து வர வேண்டும்.

இதன் பின்னர், உங்கள் பூஜை அறையில் வைத்து, விடுங்கள். மறுநாள் காலை பிரம்ம முகூர்த்த நேரத்திலேயே எழுந்து அந்த மண்ணை ஒரு அகலமான தட்டில் கொட்டி கொஞ்சமாக மஞ்சள் தண்ணீர் தெளித்து, மண்ணை சுத்தி செய்துகொள்ள வேண்டும்.அதன் பின்னர், அந்த குலதெய்வ கோவிலில் இருந்து எடுத்து வரப்பட்ட மண்ணில்,

கொஞ்சமாக பச்சை கற்பூரம், ஏலக்காய் 2, கிராம்பு 2, வெட்டிவேர் சிறிய துண்டு, தர்ப்பைப்புல் 1, இந்தப் பொருட்களையெல்லாம் சேர்த்து அந்த மணலுக்கு சாம்பிராணி தூபம் காட்டி, ஒரு சிறிய கிண்ணத்தில் போட்டு பூஜை அறையில் வைத்துக் கொள்ளலாம். அப்படி இல்லையெனில், இந்த மண்ணை ஒரு மஞ்சள் துணியில் போட்டு முடிச்சாக கட்டி, வீட்டில் நில வாசப்படிக்கு உள்பக்கமாக கட்டி வைக்கலாம்.

மேலும், அன்றாடம் காலையில் சுத்தமாக குளித்துவிட்டு, இந்த மண்ணை எடுத்து உங்கள் நெற்றியில் குலதெய்வத்தை வேண்டி இட்டுக் கொண்டாலே போதும். பிரச்சனைகள் தானாக மறைந்து போகும். முயற்சி செய்து பாருங்கள் நல்ல்தே நடக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *