நீங்கள் இந்த ராசியா? அதிர்ஷ்டக் காலத்தை தெரிந்து கொள்ளுங்கள் !! குரு அதிசார பெயர்ச்சி பலன்கள் என்னென்ன !!

ஆன்மீகம்

அதிர்ஷ்டக் காலத்தை தெரிந்திட ….

குரு பகவான் பொதுவாக ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆகக்கூடிய காலம் ஒரு ஆண்டு. இதற்கிடையே சூரியனின் சஞ்சாரத்தை வைத்து குரு முன்னோக்கி நகரக்கூடிய அதிசார நிகழ்வு நடப்பது வழக்கம். இது குரு சஞ்சரிக்கக்கூடிய ராசியைத் தாண்டி அடுத்த ராசிக்கு சென்று திரும்பக் கூடிய நிகழ்வாக அமைகிறது.

குரு அதிசார பெயர்ச்சி நிகழ்வு இரண்டு அல்லது மூன்று மாத காலம் நடப்பது வழக்கம். ஆனால் இந்த முறை கிட்டத்தட்ட 162 நாட்கள் அதாவது ஏப்ரல் 5ம் தேதி இரவு 12.43 மணிக்கு மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு செல்லக்கூடிய குரு பகவான் செப்டம்பர் 13ம் தேதி தான், 5 மாதம் கழித்து மீண்டும் மகரத்திற்கு திரும்ப உள்ளார்.

குரு அதிசார நிகழ்வு மினி குரு பெயர்ச்சி என்று கூறும் அளவிற்கு நீண்ட காலம் நிகழ உள்ளது. இதில் தனுசு ராசிக்கு 3ம் இடத்தில் அமரக்கூடிய குரு எப்படிப்பட்ட பலன்களை தருவார் என்பதை விரிவாக பார்ப்போம். தனுசு ராசி மூலம் 1,2,3, 4 பாதங்கள், பூராடம் 1, 2, 3, 4 பாதங்கள், உத்திராடம் 1ம் பாதம் அடங்கியது.

தனுசு ராசிக்கு ராசி நாதன் குரு பகவான் என்பதால் 1, 4ம் இடத்திற்குரியவராக வருவார். தற்போது குரு சனி பகவானுடன் சேர்ந்து மகர ராசியில் சஞ்சரித்து வருகின்றார். ஏப்ரல் 5ல் குரு கும்ப ராசிக்கு அதிசாரமாக பெயர்ச்சி ஆக உள்ளார். 3ம் இடத்தில் குருவுக்கு ஸ்தான பலம் கிடையாது. இருப்பினும் உங்கள் ராசிக்கு அதிபதி குரு என்பதாலும், 3ம் இடம் தைரிய வீரிய ஸ்தானம் என்பதால் நற்பலனைத் தரக்கூடிய அமைப்பாகத் தான் இருக்கும்.

3ல் குரு வருவதால் இதுவரை உங்களுக்கு இருந்த மனக்குழப்பங்கள், சங்கடங்கள் எல்லாம் நீங்கி தெளிவு பிறக்கும். உங்கள் செயலுக்கு இளைய சகோதர, சகோதரிகளில் ஆதரவும், ஆலோசனையும் சிறப்பாக இருக்கும். கல்வி, வேலை தொடர்பாக வெளிநாடு, வெளியூர் செல்ல திட்ட மிட்டிருப்பவர்களுக்குச் சாதகமான பலனை அடையக்கூடியதாக அமையும். அரசு வகையில் உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். அரசு தொடர்பான வேலைகள் நடக்க வேண்டு மென்றால் அது சிறப்பாக நடந்தேறும்.

குரு பார்வை பலன்
குரு இருக்கும் இடத்தை விட அவரின் பார்வை பலன் மிக சிறப்பானது என்பார்கள். அந்த வகையில் குரு தனது 5, 7, 9ம் பார்வை பலன் மிகவும் அதிர்ஷ்டத்தை வழங்கக்கூடியதாக இருக்கும். குரு தனது 5ம் பார்வையால் ராசிக்கு 7ம் இடமான மனைவி, தொழில், கூட்டாளி ஸ்தானத்தைப் பார்க்கிறார்.
குரு தனது 7ம் பார்வையால் ராசிக்கு 9ம் இடமான பாக்கிய, தந்தை ஸ்தானத்தைப் பார்க்கிறார். குரு தனது 9ம் பார்வையால் ராசிக்கு 11ம் இடமான மூத்த சகோதரர், லாப ஸ்தானத்தைப் பார்க்கிறார்.
பொதுபலன் : குருவின் அமைப்பு உங்கள் ராசிக்கு கடினமாக உழைக்கக்கூடிய அருள் வழங்குவார். அதன் மூலம் நீங்கள் விரும்பிய நிலையை அடைவீர்கள். பணம் சார்ந்த விஷயங்களில் உங்களுக்கு நிம்மதி கிடைக்கும்.

குருவின் 5ம் பார்வை பலன் : குருவின் 5ம் பார்வை உங்கள் ராசிக்கு களத்திர ஸ்தானம் எனும், கூட்டாளி ஸ்தானத்தின் மீது விழுகிறது. இதனால் உங்கள் திருமண வாழ்வில் இனிமை பொங்கி வழியும். திருமணம் ஆகாத இளைஞர்களுக்குச் சிறப்பாக திருமண வரன் அமைந்து விரைவில் திருமணம் நடக்க வாய்ப்புள்ளது. காதலில் இருப்பவர்கள் திருமணம் செய்துகொள்ள வாய்ப்புகள் அமையும்.

புத்திர பாக்கியம் எ தி ர் பார் ப்பவர்களுக்கு குருவின் அருள் கிடைக்கும். பிரிந்திருந்த கணவன் – மனைவி ஒன்று சேர்வதற்கான சிறப்பான காலமாக இருக்கும். உங்கள் தொழிலில் கூட்டாளிகள், பங்காளிகளின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். நண்பர்கள் ஆதரவு நன்றாக இருக்கும். எந்த ஒரு செயலும் கூட்டாக செய்ய முயன்றால் வெற்றி கிடைக்கும்.

குருவின் 7ம் பார்வை பலன் : குருவின் 7ம் பார்வை உங்கள் ராசிக்கு 9ம் வீடான பாக்கிய ஸ்தானம் மீது விழுவது மிகவும் விசேஷமானது. பாக்கிய ஸ்தானம் குருவின் பார்வையால் வலுசேர்ப்பதால் பல்வேறு பாக்கியங்கள் சாத்தியமாகக்கூடிய நிலை இருக்கும். அதாவது உங்களின் வீடு, மனை கனவுகள் நிறைவேறும். சொத்து கிடைப்பதற்கும், வாங்குவதற்கும் வாய்ப்பு உள்ளது.

தந்தை வழியில் யோகமானதாக அமையும், தந்தையின் ஆரோக்கியம் மேம்படும். தந்தையின் மதிப்பு, மரியாதை சமூகத்தில் அதிகரிக்கும். அவரின் ஆலோசனைகள் உங்களை முன்னேற்றத்திற்குக் காரணமாக அமையலாம். உங்களுடைய பூர்வீக சொத்துக்கள் கிடைக்கவும். உங்களுக்கு இருந்த பின்னடைவுகள் நீங்கி, நீங்கள் தொட்டதெல்லாம் வெற்றி பெறக்கூடிய அருமையான காலமாக இருக்கும்.

குருவின் 9ம் பார்வை பலன் : குரு 9ம் பார்வையாக தனுசு ராசிக்கு லாப ஸ்தானத்தைப் பார்க்கிறார். இதனால் அனைத்து வகையிலும் உங்களுக்கு லாபமானதாக அமையும். திருமண பிராப்தம் அமையும். உங்கள் வாழ்க்கை துணை மூலம் உங்களுக்கு லாபம் தரக்கூடியதாக இருக்கும். உங்களின் மூத்த சகோதர, சகோதரிகள் மூலமாக கூட நற்பலனை அடையக்கூடியதாக இருக்கும். உங்களின் தொழிலில் இருந்த இறுக்கமான நிலை, தேக்க நிலை மாறி வளர்ச்சி அடையக்கூடியதாக இருக்கும்.

நீங்கள் எதை செய்தாலும் லாபம் பெறக்கூடிய நிலை உள்ளது. புதிய தொழில் திட்டங்கள் நிறைவேறும். புதிய தொழில் திட்டங்கள், தொழில் விரிவுபடுத்துதல் போன்றவை நிறைவேற வாய்ப்புள்ளது. வண்டி, வாகன யோகம் உண்டு. இப்படி பல வகையில் யோகங்களையும், அதிர்ஷ்டங்களையும் பெறக்கூடியதாக இருக்கும். குறிப்பாக திருமண யோகம், எந்த நல்லதும் நடக்கவில்லையே என புலம்பிக்கொண்டிருப்பவர்களுக்கு நீங்களே வி ய க் கு ம் அளவிற்கு பல நற்பலனை பெற உள்ளீர்கள். ​வழிபாடு : தினமும் வீட்டில் பூஜை செய்து வழிபடுங்காள். முடிந்த போதெல்லாம் சிவாலயத்திற்குச் சென்று வழிபடுவதும், அங்கிருக்கும் நவகிரக வழிபாடு செய்து குரு பகவானை மனமுறுகி வேண்டிக் கொள்ளவும். குரு காயத்ரி மந்திரத்தை உச்சரிக்கவும்.

குரு பகவான் காயத்ரி மந்திரம்: வருஷபத் வஜாய வித்மஹே க்ருணீ ஹஸ்தாய தீமஹீ தந்நோ குரு ப்ரசோதயாத் குரு சுலோகம் : குரு பிரம்மா குரு விஷ்ணு குரு தேவோ மகேஸ்வர; குரு சாஷாத் பரப்பிரம்மா தஸ்மை ஸ்ரீகுருவே நமஹகுரு சுலோகம் : குரு பிரம்மா குரு விஷ்ணு குரு தேவோ மகேஸ்வர; குரு சாஷாத் பரப்பிரம்மா தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ அதிர்ஷ்ட எண்: 1,3, 5, 9 அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிகப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *