இந்த ராசிக்கு மட்டும் கிடைக்கவுள்ள ராஜயோகம் என்ன? குரு அதிசார பெயர்ச்சி பலன்களின் மாற்றங்கள் !!

ஆன்மீகம்

கிடைக்கவுள்ள ராஜயோகம் என்ன….

மகர ராசியில் சஞ்சாரம் செய்து கொண்டிருக்கக்கூடிய தேவகுரு, வருகிற ஏப்ரல் மாதம் 6-ம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 16ஆம் தேதி வரை அதிசாரமாக கும்ப ராசியில் சஞ்சாரம் செய்யவுள்ளார்.
இந்த அதிசார குருப்பெயர்ச்சியின் மூலமாக மேஷ ராசிக்கு ஏற்படக்கூடிய சுப மற்றும் அசுப பலன்கள் யாது என்று பார்ப்போம்.

மேஷ ராசிக்கு இதுவரை பத்தாம் இடத்தில் சஞ்சாரம் செய்து கொண்டிருந்த குரு பகவான் லாப ஸ்தானமான 11ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்யவுள்ளார். சுபரான குரு தான் நின்ற ராசியிலிருந்து, ஐந்தாம் பார்வையாக மிதுன ராசியையும், ஏழாம் பார்வையாக சிம்ம ராசியையும், ஒன்பதாம் பார்வையாக துலாம் ராசியையும் பார்வையிட போகின்றார். மேலும், குரு இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடமே மேன்மை அளிக்கும்.

மேஷ ராசிக்கு, மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி செயல்பாடுகளில் புத்துணர்ச்சியும், துரிதமும் உண்டாகும். இவர்கள், எழுத்து தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். அடிக்கடி சிறிது தூரம் பயணம் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். அக்கம் பக்கம் இருந்தவர்களிடத்தில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் படிப்படியாக குறைந்து ஒற்றுமை உண்டாகும்.

திருமணமான தம்பதிகளுக்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். மேலும், திருமண வரன் தேடுபவர்களுக்கு எ தி ர் பா ர் த்த நல்ல வரன்கள் கிடைக்கப் பெறுவீர்கள்.இளைய சகோதரர்களுக்கு உதவிகள் செய்து மகிழ்வீர்கள்.

புதிய நபர்களின் அறிமுகம் மூலம் வாழ்க்கையில் மாற்றங்களும், முன்னேற்றமும் உருவாகும். மாணவர்கள் போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை பெற்று மகிழ்வீர்கள். திட்டமிட்ட காரியங்களில் எ தி ர் பார் த் த வெற்றிகளை பெறுவதற்கான சூழ்நிலைகள் அமையும். வாரிசுகளுக்கு சுபகாரியம் செய்து வைப்பதற்கான தருணங்கள் உருவாகும். கடன் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வுகளும், உதவிகளும் கிடைக்கப் பெறுவீர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *