அதிசார குருப்பெயர்ச்சி பலன்கள்.. மிக கவனத்துடன் இருக்க வேண்டிய 5 ராசியினர்கள் யார் யார் தெரியுமா !!

ஆன்மீகம்

இருக்க வேண்டிய 5 ராசியினர்கள்…

முழு சுப கிரகம், தனக்காரகன், புத்திரக்காரகன், பிரகஸ்பதி என்றழைக்கப்படக் கூடிய குரு பகவான் அதிசார பெயர்ச்சியாக, மகர ராசியிலிருந்து கும்ப ராசியில் இருக்கும், அஸ்தம் 3, 4 பாதம், சதயம் நட்சத்திரம் வரை சென்று திரும்ப உள்ளார். குரு பகவான் அதிசார பெயர்ச்சியாக ஏப்ரல் 5ம் தேதி இரவு 12.43 மணிக்கு மகரத்திலிருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகி, மீண்டும் செப்டம்பர் 13ம் தேதி மகர ராசிக்கு திரும்புவார். மேலும், 5 மாத காலத்தில் எந்தெந்த ராசியினர் கவனமாக இருக்க வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.,

மேஷம்
குடும்பத்தில் தேவையற்ற குழப்பங்கள் ஏற்படலாம் சுபகாரிய முயற்சிகளில் கவனமாக இருப்பது அவசியம்.எந்த ஒரு செயலையும் சிந்தித்து செயல்படுவது மிகவும் அவசியம். சுப காரியத்தில் தடைகள் தடங்கல் ஏற்படும் வாய்ப்புள்ளது. பணவிஷயத்தில் கவனமாக இருக்கும் பணம் கொடுப்பதாக இருந்தாலும் வாங்குவதாக இருந்தாலும் கவனித்து செயல்படுவது அவசியம். உத்தியோகஸ்தர்களும் தொழில் செய்பவர்களும் ஆவணங்களை கையாளும் போது கவனமாக இருப்பது அவசியம். பொறுமையும் முயற்சியும். மேஷ ராசிக்கு தேவைப்படக்கூடிய காலமாக இந்த ஐந்து மாதங்கள் இருக்கும்.

கடகம்
கடக ராசிக்கு அஷ்டம ஸ்தானமான 8-ஆம் இடத்தில் வருவதால் அனைத்து விஷயத்திலும் சற்று கவனமாக செயல்படுவது அவசியம். பின், அலுவலகமோ அல்லது வீடாக இருந்தாலும் உங்கள் பேச்சில் நிதானம் தேவை. தேவையற்ற பேச்சு உங்களுக்கு பெரிய சங்கடத்தை ஏற்படுத்தக்கூடும். உங்கள் கோ ப த் தை குறைத்துக் கொண்டு வேகமாக செயல் படுவதால் எந்த ஒரு செயலிலும் வெற்றியை பெறலாம். பொருளாதார நிலை சிறப்பாக இருந்தாலும் செலவுகளும் அதற்கேற்றாற்போல அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது. சுப காரியங்கள் நடக்க தாமதம் ஏற்படலாம். குழந்தை பாக்கியத்திற்காகக் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படலாம். குலதெய்வ வழிபாடு செய்வது மிகவும் அவசியம்.

கன்னி
கன்னி ராசிக்கு இதுவரை 5ம் இடத்தில் குரு அமர்ந்து 7ம் பார்வையால் அற்புத பலனை கொடுத்துக் கொண்டிருந்த நிலையில், குரு 6ம் இடத்திற்கு செல்வதால் அனைத்திலும் கவனமாக இருக்க வேண்டிய நிலை ஏற்படும். வெளிநாடு செல்ல முயல்பவர்கள் சுய ஜாதகத்தை ஆராய்ந்து பின்னர் முயற்சியில் இறங்குவது நல்லது. சொத்து வாங்குதலில் கவனம் தேவை. தேவையற்ற கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்படலாம். முடிந்த வரை மற்றவர்களிடம் பணம்,பொருள் வாங்குவதை கட்டாயம் தவிர்த்துக் கொள்வது நல்லது.

விருச்சிகம்
உங்கள் ராசிக்கு 3-ம் இடத்தில் அமர்ந்து ராசிக்கு 11ம் இடத்தைப் பார்த்துக் கொண்டிருந்த நிலையில், தற்போது 12ம் இடமான துலாம் ராசியைப் பார்க்கிறார். விரய ஸ்தானம், அயன, சயன, பயண ஸ்தானத்தைப் பார்க்கிறார். இதனால் முடிந்த வரை தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது அவசியம். தனித்து செய்வதால் பல்வேறு வகையில் நற்பலன் உண்டாகும். தொழில் பங்குதாரர் மூலம் சற்று சங்கடங்கள் ஏற்படலாம். இருக்கும் இடையில் சற்று முன்னேற்றம் இருக்கும் என்பதால் முடிந்த வரை இப்போது இருக்கும் நிலையிலேயே இருப்பது நல்லது.

மகரம்
குரு பகவான் உங்கள் சொந்த வீடான மகர ராசியில் சஞ்சரித்து வந்த நிலையில் தற்போது அதிசார நிலையாக 2ம் இடத்திற்கு செல்வதால் தேவையற்ற விரயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், தேவையற்ற வாக்குறுதிகளைக் கொடுக்காமல் இருப்பது அவசியம். இதை செய்து முடிப்பேன், முடித்துத் தருவேன் என வாக்குறுதிகளைக் கொடுக்க வேண்டாம். ஆன்மிக பயணம் செய்யும் வாய்ப்பு உள்ளது. உத்திராடம் நட்சத்திரத்தினர் விநாயகர் வழிபாடு செய்யவும். திருவோணம் நட்சத்திரத்தினர் ஹயக்ரீவர் வழிபட்டு அவரின் மந்திரம் 108 முறை உச்சரித்து வரவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *