தூ ங்குவதற்கு 10 நிமிடத்திற்கு முன்பு இதை மட்டும் பண்ணிடாதீங்க..? அலாரம் அடிக்கும் போது அற்புதம் நடக்கும்..!!

மருத்துவம்

சரியான இரவு நேர நித்திரை மற்றும் இலகுவாக எழும்புவதற்கான சூத்திரம் இது. ஆழமான நித்திரை மற்றும் சுகாதாரமான உணவு குறித்து உடற்பயிற்சி பயிற்சியாளர் Craig Ballantyne கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். அதனை “10-3-2-1-0″ சூத்திரம் என அவர் அழைத்துள்ளார். அந்த சூத்திரத்திற்கமைய எந்த ஒரு நபரும் முழுமையான ஆழ்ந்த நித்திரையடைதல் மற்றும் புத்துணர்வுடன் காலையில் எழும்புதல் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

தூங்குவதற்கு 10 மணி நேரம் முன்பு – கு ருதியோட்டத்தில் உள்ள ந ச்சுத்தன்மையை நீக்குவதற்கு இவ்வளவு நேரம் தேவைபடுகின்றது. இதனால் இந்த நேரங்களில் கோப்பி, க்ரீன் டீ, தேநீர், கோகோ கோலா, ஆற்றல் நிறைந்த பானங்கள், அல்லது சாக்லேட் போன்றவைகளை எடுத்துக் கொள்ளக்கூடாது .

தூ ங்குவதற்கு 03 மணி நேரம் முன்பு – நித்திரைக்கு செல்வதற்கு ஏறக்குறைய மூன்று மணிநேரம் மட்டுமே இருந்தால், எந்தவொரு மதுபானம் அடங்கிய உணவுகளை சாப்பிட வேண்டாம். வேலை முடிந்து வீட்டிற்கு சென்றால் ஓய்வு பெற்று கொள்ள வேண்டியது அவசியமாகும்.

தூ ங்குவதற்கு 02 மணி நேரம் முன்பு – இந்த நேரம் முதல் வேலை செய்யாதீர்கள். வேலையை பற்றி சிந்திக்காதீர்கள். அடுத்த நாள் செய்வதற்காக ஒதுக்கி விடுங்கள்.

தூ ங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்பு – இந்த நேரம் முதல் தொலைகாட்சி பார்த்தல், கணினி பார்த்தல், ஸ்மார்ட்போன் பயன்படுத்துதல் போன்றவற்றை நிறுத்திவிடுங்கள். இவற்றினை ஓரங்கட்டினால் கண்கள் மற்றும் மனது அமைதியாகும்.

தூ ங்குவதற்கு 0 நிமிடத்திற்கு முன்பில் இருந்து காலை அலாரம் மணி அடிக்கும் வரை – அலாரத்தை நிறுத்திவிட்டு படுக்கையில் இருந்து உடனடியாக எழுந்திருக்க வேண்டும். மேலும் 10 நிமிடங்கள் உறங்கலாம் என எண்ண கூடாது.

இதனை பழக்கப்படுத்தி கொள்ள வேண்டும். மேலும் 10 நிமிடங்கள் அதிகமாக உறங்கினால் அது உடலுக்கு சோர்வை ஏற்படுத்தும். அத்துடன் இரவு உறங்கும் போது நேராக தலையை வைத்து நேராக உறங்குவதே உடலுக்கு நன்மையை ஏற்படுத்தும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *