தி டீ ர் அதிர்ஷ்டத்தால் ஏற்படும் திருப்புமுனை எந்த ராசிக்கு என்று தெரியுமா !! குரு அதிசார பெயர்ச்சி பலன்களின் நன்மை !!

ஆன்மீகம்

திருப்புமுனை எந்த ராசிக்கு …..

கால புருஷ தத்துவத்தில் இரண்டாவதாக வரக்கூடிய ரிஷப ராசியை, இன்பங்கள், சுகங்களை அளிக்கக்கூடிய சுக்கிர பகவான் ஆளக்கூடிய ராசியாகும். ராசிக்கு 10ம் இடத்திற்கு குரு பெயர்ச்சி ஆகிறார். ​ரிஷப ராசி பொது குணம் : முகத்தைக் குறிக்கக்கூடிய இந்த ராசி சுக்கிரனை அதிபதியாக கொண்டவர்கள் என்பதால் தங்களை அழகு படுத்திக் கொள்வதிலும், அழகாய் காட்டிக் கொள்வதில் அதிக ஆர்வம் காட்டுவர். எதிரிகளுக்குச் சவாலானவராக இருப்பதோடு, எதிரியை வெல்லக்கூடிய சிறப்பான ஆற்றலைக் கொண்டவராக இருப்பீர்கள். இருப்பினும் இயல்பால் நீங்கள் சாந்தமானவராகவே இருப்பீர்கள். பொது வாழ்வில் ஈடுபட உங்களுக்கு பிடிக்கும். உங்களின் செயல்பாட்டால் சமூகத்தில் மதிப்பு, மரியாதை உண்டாகக்கூடும்.

குரு அதிசார நிலை அடையப்போவது எப்போது?
குரு பகவான் மகர ராசியிலிருந்து பங்குனி 23ம் தேதி (ஏப்ரல் 5) திங்கட் கிழமை நள்ளிரவு 12.42 மணிக்கு அதிசாரமாக கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆக உள்ளார். கிட்டத்தட்ட 160 நாட்கள் 5 மாதத்திற்கும் மேலாக அதிசார நிலையிலேயே கும்ப ராசியில் இருக்கும் குரு பகவான் செப்டம்பர் 16, பிலவ வருடம் ஆவணி 29ம் தேதி மீண்டும் குரு மகர ராசிக்கு திரும்புவார். இந்த பெயர்ச்சியின் போது கும்ப ராசியில் உள்ள அவிட்டம் 3,4ம் பாதங்களுக்கும், சதய நட்சத்திரத்திற்கும் சென்று திரும்ப உள்ளார்.

​பொது பலன்கள் : இந்த குரு அதிசார பெயர்ச்சியின் காரணமாக ரிஷப ராசிக்கு 10ம் இடமான கர்ம ஸ்தானம், தொழில் ஸ்தானத்திற்கு செல்வதால் உங்கள் ராசிக்கு தொழில், வேலையில் நல்ல முன்னேற்றத்தைத் தரக்கூடியதாகவும், உங்களுக்கு புதிய பதவி, பதவி உயர்வு, அல்லது வேலையில் இடமாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் உங்களுக்கு நீங்கள் செய்யக்கூடிய வேலையில் ஒரு புதிய உச்சத்தை அடைவீர்கள்.

​ரிஷபத்திற்கு என்ன யோகம் உண்டாகும் ? கும்ப ராசி சனி பகவானை அதிபதியாகக் கொண்டது. அவர் ரிஷப ராசி அதிபதியான சுக்கிரனுக்கு நட்பு கிரகமாகும். அதுமட்டுமல்லாமல் அவிட்ட நட்சத்திரம் குருவின் நட்பு கிரகமான ராசிக்கு 7, 12ம் ராசிகளுக்கு அதிபதியான செவ்வாயை அதிபதியாக கொண்டது. அதனால் அவிட்ட நட்சத்திரத்தில் குரு பகவான் சஞ்சரிக்கக்கூடிய காலத்தில் மிகவும் சுப பலன்களை அளிப்பார். இந்த காலத்தில் உங்கள் ராசிக்கு திருமணம் உள்ளிட்ட சுப காரியங்கள் கைகூடும். சுப செலவுகள் அதிகமாக ஏற்பட வாய்ப்புள்ளது. ராகுவை அதிபதியாக கொண்ட சதய நட்சத்திரத்தில் சஞ்சரிக்கக்கூடிய காலத்தில் சற்று கூடுதல் கவனத்துடன் செயல்படுவது அவசியம்.

​பதவி கிடைக்கும் – குரு 9ம் இடமான பாக்கிய ஸ்தானத்திலிருந்து தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உங்களுக்கு புதிய வேலை வாய்ப்பு கிடைக்கலாம். அல்லது இப்போது வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. புதிய தொழில் தொடங்க நினைப்பவர்கள் ஆலோசனைப் பெற்று தொடங்கலாம். தொழில், வேலையில் இருந்த தடுமாற்றங்கள் மாறி, முன்னேற்றத்தை தரக்கூடியதாக இருக்கும்.

​வழிபாடு :உங்கள் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள குரு பகவானுக்கு உகந்த ஆலயங்களுக்குச் சென்று வரலாம். வியாழக்கிழமைகளில் சிவாலயங்களில் உள்ள நவகிரகங்களில் உள்ள குரு பகவானை வழிபட்டு வருவதும், குருவுக்கு உகந்த மந்திரங்களை உச்சரித்து வருவது சிறப்பு. குரு பகவான் காயத்ரி மந்திரம்: வருஷபத் வஜாய வித்மஹே க்ருணீ ஹஸ்தாய தீமஹீதந்நோ குரு ப்ரசோதயாத் குரு சுலோகம் : குரு பிரம்மா குரு விஷ்ணு குரு தேவோ மகேஸ்வர; குரு சாஷாத் பரப்பிரம்மா தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ குரு மந்திரம் : தேவாணாஞ்ச ரிஷிணாஞ்ச குரும் காஞ்சன ஸந்நிபம் புத்தி பூதம் திரிலோகேஸம் தம் நமமி பிருகஸ்பதிம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *