சிவனுக்கு மூன்று கண்களாய்… அதிசயமாய் விளைந்த கத்தரிக்காய் வைரலாகி வரும் நிகழ்வு !!

ஆன்மீகம்

அதிசயமாய் விளைந்த கத்தரிக்காய்…..

இறை நம்பிக்கை என்பது நபர்களுக்கு நபர் வேறுபடுகிறது, பொதுவாக மனிதர்களை இரண்டு வகையில் பகுக்க முடியும், அதாவது இறைவன் உண்டு என ஒரு சாராரும் இறைவன் இல்லை என ஒரு சாராரும் வாழ்ந்து வருகின்றனர். இறை நம்பிக்கை உள்ளவன் நாள்தோறும் இறைவனை நம்பி பக்தியில் இறைவனோடு வாழ்கிறான்,

ஆனால் இறை நம்பிக்கை இல்லாதர்வர்களோ கால் போன போக்கிலும் மனம் போன போக்கிலும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். மனிதர்களை விடவும் இந்த உலகில் இறை நம்பிக்கை உள்ள உயிரினங்கள் உள்ளன என்பதற்கு பல சான்றுகளும் நிகழ்வுகளும் ஆங்கங்கே நடை பெற்ற வண்ணமே உள்ளன. தமிழகத்தில் ஒரே காம்பில் மூன்று கத்தரிக்காய் விளைந்ததை மக்கள் அதிசயத்துடன் பார்த்து செல்கின்றனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தின் கொள்ளிடத்திற்கு கும்பகோணம் பகுதியில் இருந்து தினமும் லொறிகள் மூலம் காய்கறிகள் விற்பனைக்கு வருவது வழக்கம். நேற்று வழக்கம் போல் காய்கறிகள் வந்த நிலையில், ஒரு கத்தரிக்காய் வித்தியாசமாய் இருந்துள்ளது, அதாவது ஒரே காம்பில் மூன்று கத்தரிக்காய்கள் இருந்துள்ளன. இதனை அந்த கடைக்காரர் காட்சிப்பொருளாக வைக்க, பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.

ஒரே காம்பில் மூன்று கத்தரிக்காய் இருப்பதால் இது அதிசயமானது என்றும், சிவனுக்கு மூன்று கண்கள் இருப்பது போல் கத்தரிக்காயும் மூன்றாக இருப்பதால் அதிர்‌‌ஷ்டமானது எனவும் கூறி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *