தாடி வைத்திருக்கும் ஆண்களுக்கு மட்டும் இப்படி ஒரு அதிஷ்டமா? கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள் !!

விந்தை உலகம்

இப்படி ஒரு அதிஷ்டமா ஆண்களுக்கு ….

அனைத்து ஆண்களுமே ஒருவகையில் அழகுதான். ஆனால் சில ஆண்கள் கூடுதல் அழகாக தெரிய காரணம் அவர்களின் முகத்தில் இருக்கும் மீசையும், தாடியும்தான். அதிக தாடி வளர்ப்பது சமீப காலங்களில் ஆண்களிடையே மிகுந்த வரவேற்ப்பையும், ஆர்வத்தையும் பெற்றுள்ளது. இப்படி நீங்கள் ஆசையாக வளர்க்கும் தாடி உங்களை புற்றுநோயிலிருந்து பாதுகாப்பதோடு நிறைய ஆரோக்கிய நன்மைகளை வழங்கும்.

உண்மைதான், சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தாடி வைத்திருப்பவர்கள் அதிக ஆரோக்கியத்துடன் வாழ்வதாக முடிவுகள் தெரிவிக்கின்றன. எந்தவித செலவும் இல்லாமல் உங்கள் அழகுக்காக நீங்கள் வளர்க்கும் தாடி உங்களின் ஆயுளை அதிகரிக்கும்போது நீங்கள் ஏன் ஆரோக்கியத்தை நினைத்து கவலைப்பட வேண்டும். இங்கே உங்களுடைய தாடி உங்களுக்கு எந்தவகையில் எல்லாம் ஆரோக்கியத்தை அள்ளித்தருகிறது என்பதை பார்க்கலாம்.

சரும புற்றுநோயிலிருந்து பாதுகாப்பு – சூரிய ஒளியிலிருந்து வரும் புறஊதா கதிர்கள் பெரும்பாலும் உங்களின் அடர்த்தியான தாடியால் தடுக்கப்படுகிறது. அறிவியல்ரீதியாக முகத்தில் அதிக முடி இருக்கும்போது சூரிய ஒளிக்கதிர்களால் சருமத்தை தாக்க இயலாது என நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க பல்கலைக்கழகம் நிகழ்த்திய ஆய்வில் அதிக தாடி வைத்திருக்கும் ஆண்களுக்கு தோல்புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு பாதியாக குறைகிறது என கூறப்பட்டுள்ளது.

ஈரப்பதம் – உங்கள் உடலில் இயற்கையாக உள்ள எண்ணெய் சத்துக்கள் உங்கள் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்கிறது. ஷேவ் செய்து இதனை நீங்கள் அழிப்பதால் இயற்கையாக இருக்கும் ஈரப்பதம் அழிக்கப்பட்டு சரும வறட்சி ஏற்படுகிறது. சருமம் முடி இல்லாமல் இருக்கும்போது அது வானிலை மாற்றங்களால் பாதிக்கப்படக்கூடிய வாய்ப்புகள் அதிகம்.

இளமையான தோற்றம் – ஆரோக்கியம் எந்த அளவிற்கு முக்கியமோ அதே அளவிற்கு அழகும் முக்கியம். அந்தவகையில் தாடி உங்கள் ஆசையை சிறப்பாக நிறைவேற்றும். முன்னரே கூறியது போல அதிக தாடி வைப்பதுதான் இப்போது ட்ரெண்டாக இருக்கிறது. அதிக தாடி வளர்த்து அதை சீராக பராமரிப்பது உங்களுக்கு இளமையான அதேநேரம் அழகான தோற்றத்தை வழங்குகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *