இந்த ராசிக்கு மட்டும் கூரையை பிச்சிக்கிட்டு அ டி க்கப்போகும் அதிர்ஷ்டம் !! பிலவ வருடத்தில் இப்படியொரு பலன்கள் !!

ஆன்மீகம்

பிலவ வருடத்தில் அதிர்ஷ்டம் …..

அன்புள்ள மேஷ ராசி நேயர்களுக்குதொழில், உத்தியோகம் செய்யக்கூடியவர்களுக்கு ஏற்றமும், லாபமும் தரக்கூடியதாக இருக்கும். மேலும், உங்களின் விட முயற்சி, திறமைகளுக்கு ஏற்ப லாபங்கள் கண்டிப்பாக பெற்றிடலாம். குடும்பத்தில் மற்றவர்களின் தலையீடு தவிர்ப்பது அவசியம். எந்த ஒரு செயலையும் திட்டமிட்டு, ஆலோசித்து பொறுமையாக, நிதானமாக செய்வது அவசியம்.

ஆண்டு கிரக நிலவரம் மேஷத்தில் சூரியன், புதன், சூரியன் ரிஷபத்தில் ராகு மிதுனத்தில் செவ்வாய்
விருச்சிகத்தில் கேது மகரத்தில் ஆட்சி பெற்ற சனி கும்பத்தில் அதிசார பெயர்ச்சி பெற்ற குரு
தனக்காரகன் குருவின் மிகவும் விசேஷமான 9-ம் பார்வை உங்கள் ராசிக்கு 7-ம் இடமான களத்திர ஸ்தானத்தின் மீது விழுவதால், இதுவரை திருமணம், உள்ளிட்ட சுப காரியங்களில் ஏற்பட்டிருந்த தடைகள் நீங்கும். உங்களுக்கு ஏற்ற வரன் தேடி வரும்.

உங்கள் துணையுடனான அன்பும், அன்னியோன்னியமும் அதிகரிக்கும். இதனால் குடும்பத்தில் இன்பமும், நிம்மதியான மன நிலை ஏற்படும். பின்னர், குழந்தை பாக்கியத்தை அருளக்கூடிய குரு பகவான் 11-ம் இடத்தில் அமர்ந்து உங்களின் பூர்வ புண்ணிய ஸ்தானத்தைப் பார்க்கிறார். இதனால் குழந்தை செல்வம் கிடைக்க அருமையான சூழல் உண்டாகும். மேலும், பிள்ளைகளின் கல்வியில் முன்னேற்றம் உண்டாகும்.

அவர்கள் விரும்பிய படி கல்வி, வேலை தொடர்பான முன்னேற்றத்தை தரக்கூடியதாக இருக்கும். பிள்ளைகளின் படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கும். பிள்ளைகள் வழியில் பெற்றோர்களுக்கு மதிப்பு, மரியாதை அதிகரிக்ககூடியதாக இருக்கும். இந்த தமிழ் புத்தாண்டு தொடங்கும் மாதத்தில் உங்கள் ராசிக்கு 5-ம் அதிபதியான சூரியன் உச்சமாக இருப்பதால் நீங்கள் நினைக்கக்கூடிய, பல கால ஆசைகள் வெற்றியும், கனவு நினைவாக்கக்கூடிய நிலை இருக்கும்.

சுக்கிரனால் உங்களின் நிதி நிலை மேம்படும். திருமணம் மட்டுமல்லாமல் காதல் தொடர்பான விஷயங்களில் வெற்றி தரக்கூடியதாக இருக்கும். மேஷ ராசி, மேஷ லக்கினத்தை சார்ந்தவர்களுக்கு தொழில், உத்தியோகம் செய்யக்கூடியவர்களுக்கு ஏற்றமும், லாபமும் தரக்கூடியதாக இருக்கும். தொழில் காரகன் எனும் சனி இவர் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதோடு, 10ம் இடத்தில் அந்த தொழில் காரகனான சனி ஆட்சி பலம் பெற்றிருப்பதால் உங்களின்

தொழில் மற்றும் தொழில் சார்ந்த விஷயங்கள் பெரியளவில் முன்னேற்றத்தை தரக்கூடியதாக இருக்கும். குரு பகவான், உங்கள் ராசிக்கு 11ம் இடமான லாப ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதால் நிதி நிலை மேம்படும், பல்வேறு வகையில் லாபங்கள் அடையக்கூடியதாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அவர்களின் தகுதிக்கேற்ப பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்க அருமையான வாய்ப்புகள் அமையும். இடமாற்றம் நிகழும்.

தனக்காரகன் குரு பகவான் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானம் எனும் 11ம் இடத்தில் அமர்ந்திருப்பது மிகவும் சிறப்பானது. குருவின் அருளால் பொருளாதார ரீதியாக முன்னேற்றமும். குடும்பத்தில் நிதி நிலை பற்றாக்குறையால் இருந்து வந்த பிரச்னைகள், குழப்பமான மன நிலை எல்லாம் மாறி உங்களின் செல்வாக்கு, சொல்வாக்கிற்கு மதிப்பு கிடைக்கும். 2-ல் ராகு, 8ல் கேது இருப்பதால் தம்பதியர் விட்டுக் கொடுத்து செல்வது மிகவும் அவசியம். இதனால் அன்பு அதிகரிப்பதோடு, மன நிம்மதி இருக்கும்.

வழிபாடு – ஒவ்வொரு திங்ககிழமைகளில் சிவாலயத்திற்கு சென்று வழிபட்டு சிவனின் அருளைப் பெற்றிடுங்கள். முடிந்தால் திருவண்ணாமலை சென்று அண்ணாமலையாரை வழிபட்டு வாருங்கள். செவ்வாய் கிழமைகளில் ராசி நாதன் முருகப்பெருமான் ஆலயத்திற்கு சென்று வழிபாடு நடத்தி வருவதால் எண்ணற்ற பலன்களைப் பெறலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *