குரு பெயர்ச்சியால் ஏற்பட போகும் பாரிய மாற்றம் !! சனியின் கோரப்பார்வையில் இருந்து தப்பிய கடக ராசி!

ஆன்மீகம்

கடக ராசிக்கு இதுவரை 6ம் இடத்தில் குரு அமர்ந்து பல பிரச்சினைகளையும், பண விரயங்கள், குடும்ப பிரச்னை என தந்தார். 6ம் இடத்தில் குரு ஆட்சி பெற்று அமர்ந்திருந்தாலும், நீச்சம் பெற்று இருந்ததால் நல்ல பலனை அளிக்க முடியவில்லை. அதுமட்டுமல்லாமல் குரு தனது 5ம் பார்வையாக 10ம் இடத்தைப் பார்த்ததால் தொழில் பிரச்னை இருந்தது. அதனால் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டிருந்தது. அதோடு 7ம் பார்வையாக 12ம் வீட்டைப் பார்த்ததால் வீண் செலவுகள், விரயங்கள், வீடு மாற்றம், இடமாற்றம் என தேவையற்ற எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டிருக்கக்கூடும்.

குருவின் 9ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 2ம் இடத்தைப் பார்த்துக் கொண்டிருந்ததால் சுப விரயங்கள், சுப நிகழ்ச்சிகள் நடந்திருந்தாலும், உங்களுக்கு தொழில் உள்ளிட்ட பல நிகழ்வுகளில் போட்டி, பொறாமை இருந்திருக்கும். பண வரவு ஓரளவுக்கு நன்றாகவே இருந்ததற்கு காரணம் அவர் 2ம் இடத்தைப் பார்த்ததனால் தான்.

கடக ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்

5ம் பார்வையால் ராசிக்கு 11ம் இடமான மூத்த சகோதரர் ஸ்தானம், வெற்றி ஸ்தானம், லாப ஸ்தானத்தைப் பார்க்கிறார். ஏற்கனவே அங்கு ராகு இருக்கிறார். இதனால் உங்கள் மன ஆசைகளும், நீங்கள் நினைத்ததெல்லாம் மிக சிறப்பாக நடக்கும். அதுமட்டுமல்லாமல் நீங்கள் எதிர்பார்த்த அதிர்ஷ்டத்தையும், லாபத்தையும் பெறலாம்.

பொதுவாக குரு பகவான் 2, 5, 7, 9, 11 ஆகிய இடங்களில் அமர்ந்திருந்தால் கோச்சார ரீதியாக மிக நல்ல பலன்களைத் தருவார் என்பது ஜோதிட நம்பிக்கை. இந்த முறை குரு கடக ராசியை 7ம் பார்வையால் பார்க்க உள்ளதால் கடக ராசிக்கு மிகப்பெரிய யோகம், தன வரவு, சுப நிகழ்வுகளைத் தர உள்ளார்.

குரு தன் 7ம் பார்வையால் மனைவி, தொழில், கூட்டாளி ஸ்தானமான உங்கள் ராசியைப் பார்ப்பதால் கணவன் – மனைவி இடையேயான ஒற்றுமை மேம்படும். நீண்ட நாட்களாக திருமணம் தள்ளிப்போகின்றவர்களுக்கும். திருமண முயற்சியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு விரைவாக திருமணம் நடைபெறக்கூடிய அமைப்பு ஏற்படும்.

திருமணமான தம்பதியர் குழதை வரம் வேண்டி இருப்பவர்களுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. தொழிலில் உங்களின் பங்குதாரரின் ஒத்துழைப்பும், வேலையாட்களின் செயல்பாடு திருப்திகரமாகவும் இருக்கும். அரசாங்கத்தின் மூலம் உங்கள் தொழில் வளர்ச்சிக்கு சாதகமான பலனும், பங்குதாரர்கள் மூலம் தொழில் வளர்ச்சிக்கான செயல்பாடு, திட்டங்கள் சாதக நிலையில் இருக்கும்.

கல்வி, உத்தியோகம், தொழில் தொடர்பாக வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் சிறப்பாக அமையும். அதன் மூலம் அனுகூலமான பலனைப் பெறலாம். ராசியைப் பார்க்கும் குருவால் உங்களின் ஆசை, எண்ணங்கள் ஈடேறும். இலக்குகள் அடைவீர்கள். வழக்கு, போட்டிகளில் சிறப்பான வெற்றியைப் பெறுவீர்கள். உங்களுக்கு சமூகத்திலும், குடும்பத்திலும் பெயர், புகழ் உண்டாகும். விரும்பிய உயரத்தை அடையக்கூடிய வாய்ப்புகளும், திறமை, மன தைரியம் கிடைக்கும்.

​நீசமானாலும் நல்ல பலன் எப்படி தருவார்?

குரு உத்திராடம் 2ம் பாதத்தில் நுழைந்தாலும், அடுத்து கடக ராசி நாதனான சந்திரனை அதிபதியாக கொண்ட திருவோணம் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்ய உள்ளார். இதனால் மிக நல்ல பலனை அவசியம் பெறலாம் என்பதில் ஐயமில்லை. அதன் பின்னர் அவிட்டம் எனும் நட்பு கிரகமான செவ்வாய் ஆட்சி செய்யும் நட்சத்திரத்தில் செல்வதாலும் மிக நல்ல பலனை பெறலாம் என்பதில் ஆச்சரியமில்லை.

உங்கள் தொழிலில் போட்டி, பொறாமை, எதிரிகள் அதிகரிப்பர். அதனால் பயப்படத் தேவையில்லை. இவற்றையெல்லாம் முறியடித்து வெற்றிக் கொடிநாட்டக்கூடிய திறமையும், அதிர்ஷ்டத்தையும் குரு அருள்வார். உத்தியோகஸ்தர்களுக்குச் சகபணியாளர்களின் ஒத்துழைப்பு சற்று குறையாலாம். பணிச்சுமை அதிகரிக்கலாம். ஆனால் நீங்கள் உங்கள் செயல்பாடுகளில் சிறாபாக செயல்படுவதால் உங்களுக்கு பதவி, பட்டம். பாராட்டு என எதேனும் ஒன்று வந்து சேரும் என்பது நிச்சயம்.

குருவின் 9ம் பார்வையால் ராசிக்கு 3ம் இடமான இளைய சகோதரர், தைரிய ஸ்தானத்தைப் பார்ப்பதால் எந்த விஷயத்திலும் தைரியமாக செயல்படுவீர்கள். தொழில், உத்தியோகம் மற்றும் எந்த விஷயமாக இருந்தாலும் நீங்கள் மன உறுதியுடன் ஒரு முடிவை எடுப்பீர்கள்.

குருவின் 9ம் பார்வையால் ராசிக்கு 3ம் இடமான இளைய சகோதரர், தைரிய ஸ்தானத்தைப் பார்ப்பதால் எந்த விஷயத்திலும் தைரியமாக செயல்படுவீர்கள். தொழில், உத்தியோகம் மற்றும் எந்த விஷயமாக இருந்தாலும் நீங்கள் மன உறுதியுடன் ஒரு முடிவை எடுப்பீர்கள்.

இளைய சகோதரர் வழியில் பல நன்மைகளை அடைவீர்கள். அவருக்கு நடக்க வேண்டிய சுப காரியங்கள் நடக்க வாய்ப்புள்ளது. உங்களின் வீடு, வண்டி, வாகனம் வாங்க வேண்டும் என்ற ஆசைகள் நிறைவேறக்கூடிய அற்புதம் நடக்கும். கலை, எழுத்து, பத்திரிக்கை போன்ற துறைகளில் பணியாற்றுபவர்களுக்கு மிகச்சிறப்பான யோகங்கள் உண்டாகும்.

சனி, ராகு பகவானின் கெடுபலனைக் குறைக்கும்

குரு சனி பகவானுடன் சேர்ந்து சஞ்சரிப்பதாலும், குருவின் பார்வை ராகு அமர்ந்திருக்கும் வீட்டில் விழுவதால், சனி, ராகு மூலம் நீங்கள் அடையக்கூடிய கெடுபலன்களைக் கட்டுப்படுத்துவார். பெரிய பாதிப்பை இவர்கள் தராமல் குரு அருள்வார்.

பரிகாரம்

மிக சிறப்பான குரு அருளைப் பெற உள்ள கடக ராசியினர் மேலும் நல்ல பலனைப் பெற அருகில் உள்ள சிவ ஆலயத்திற்கு சென்று நவகிரகங்களை வணங்கி வரவும். வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தியை வணங்குதலும் நல்லது. முடிந்தவர்கள் குரு ஸ்தலமான திருச்செந்தூர் சென்று வருவது சிறப்பு. பசுவுக்கு கீரை, வாழைப்பழம் வழங்கி வணங்கி வர தெய்வ கடாட்சம் பெறலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *