தமிழ் பிலவ வருடத்தில் ஏற்படப்போகும் தி டீ ர் அதிர்ஷ்டம் என்ன? புத்தாண்டு பலன்கள் யாருக்கெல்லாம் என்னென்ன மாற்றத்தை தரும் !!

ஆன்மீகம்

தமிழ் பிலவ வருடத்தில் அதிர்ஷ்டம் …..

தமிழ் பிலவ வருடத்தில் கிரகங்களின் மாற்றங்களினால் 12 ராசிக்கும் வாழ்க்கையில் உருவாகக்கூடிய பலன்களை திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் காண்போம். கிரக அமைப்புகள் : ராசிக்கு நான்கில் கேதுவும் ஆறில் சனியும் ஏழில் குருவும் எட்டில் புதனும் ஒன்பதில் சூரியனும், சுக்கிரனும், சந்திரனும் பத்தில் ராகுவும், செவ்வாயும் அமர்ந்திருக்கும் இந்த தருணத்தில் பிலவ வருடமானது பிறக்கிறது.

பலன்கள் – மனதில் நினைத்த காரியங்களை செய்து முடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். மனதில் இருந்துவந்த சிறு சிறு ப ய ங் களும், ப த ற் ற ங்களும் நீங்கி தெளிவு பிறக்கும். மேலும், உடன் பிறந்தவர்கள் மூலம் அலைச்சல்களும், கருத்து வேறுபாடுகளும் ஏற்பட்டாலும் சில நேரங்களில் ஆதரவான சூழ்நிலைகள் உருவாகும்.

உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். பொருளாதாரம் தொடர்பான விஷயங்களில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் காணப்படும். செலவுகளின் தன்மைகளை அறிந்து செலவு செய்வது சேமிப்பை பாதுகாக்கும். மாணவர்கள் பிடிவாத குணத்தை விடுத்து பொறுமையுடன் பாடங்களில் கவனத்தை செலுத்துவது நல்ல மதிப்பெண்களை பெற வழிவகுக்கும்.

வாழ்க்கைத்துணை வழியில் ஆதரவான பலன்கள் கிடைக்கும். பேசும் வார்த்தைகளால் மன வருத்தங்கள் ஏற்பட இருப்பதினால் பேச்சுக்களில் சற்று கவனம் வேண்டும். திருமணம் மற்றும் சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உயரதிகாரிகளிடம் சூழ்நிலைக்கு ஏற்றவாறு அனுசரித்து செல்வது நன்மையை ஏற்படுத்தும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மேன்மையை ஏற்படுத்தும்.

வியாபாரிகளுக்கு தொழில் அபிவிருத்தி நிமிர்த்தமாக எதிர்பார்த்திருந்த கடன் உதவிகள் சற்று காலதாமதமாக கிடைக்கும். அரசியல் மற்றும் சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு வித்தியாசமான அணுகுமுறைகளும், வாய்ப்புகளும் கிடைக்கும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு இதுவரை மனதில் இருந்துவந்த குழப்பங்கள் யாவும் நீங்கி தெளிவுகள் கிடைக்கப் பெறுவீர்கள். பின் தன வருவாய் மற்றும் சேமிப்புகள் அதிகப்படுத்தும் காலக்கட்டங்கள் இதுவாகும். முயற்சிக்கான பலன்கள் சாதகமாக அமையும்.

வழிபாடு – சனிக்கிழமைதோறும் நல்லெண்ணெயில் தீபமேற்றி ஆஞ்சநேயரை வழிபாடு செய்துவர நன்மைகள் உண்டாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *