பிலவ வருட சுபநேரங்களில் நீங்கள் செய்யவேண்டியவை இவைதான் !! பிறக்க போகும் 2021 எவ்வாறு இருக்கும் என உங்களுக்கு தெரியுமா !!

ஆன்மீகம்

சுபநேரங்கள், கிரப்பெயர்ச்சிகள் …..

இப்புதுவருடத்தில் அதாவது 2021 பிலவ வருடத்தில் சுபநேரங்கள் என்னென்ன ? கிரகப்பெயர்ச்சிகள் என்னென்ன பிலவ வருட சுபநேரங்களில் நீங்கள் செய்யவேண்டியவை என்னென்ன பிறக்க போகும் 2021 எவ்வாறு இருக்கும் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம். ஏப்ரல் மாதம் 14ம் திகதி, புதன்கிழமை, சித்திரை 1ம் திகதி மங்களகரமான பிலவ தமிழ் வருடம் பிறக்கிறது.

தற்போது மக்களிடையே கடவுள் பக்தியும், ஜோதிட நம்பிக்கையும் சற்று அதிகரித்துள்ளது. இதனால் தான் தற்போது பலர் எந்த ஒரு செயலை செய்வதற்கு முன்பும் ஜோதிடர்களை சந்தித்து, தங்களது ஜாதகங்களைக் கொடுத்து நல்ல காலமா என்பதைப் பார்க்கிறார்கள். மேலும், ஜோதிடர்கள் தங்களுக்கு சாதகமாக என்ன கூறினாலும் அதை செய்யவும் தயாராக உள்ளனர். இது சிலருக்கு பொருந்தும், சிலருக்கு பொருந்தாமலும் இருக்கும். எந்த விடயங்களையும் முழு நம்பிக்கையுடன் செய்தால் வெற்றி நிச்சயம்.

ஒவ்வொரு நாளும் கிரகங்களின் நிலை மாறும். இப்படி தினமும் மாறும் கிரகங்களின் சஞ்சாரங்களால் ஒவ்வொரு ராசிக்காரரின் பலனும் அன்றாடம் மாறுபடும். தினசரி ராசிப்பலன்கள் மூலம் நீங்கள் எந்த மாதிரியான சவால்களை எதிர்கொள்வீர்கள் என்பதை தெரிந்து கொள்ள முடியும். உங்கள் வாழ்க்கை ஏற்பட போகும் அனைத்து வகையான கேள்விகளுக்குமான விடை இங்கு கிடைக்கும். நம்மில் பெரும்பான்மையானோருக்கு அன்றைய நாளை ராசிபலன் பார்த்து தொடங்கினால் தான் நிம்மதியாக இருக்கும்.

சிலரோ அன்றைய ராசிக்கான அதிர்ஷ்ட நிற ஆடையை அணிந்து தான் வெளியில் செல்வார்கள். அன்றைக்கு நடக்கும் எல்லா செயல்களுக்கும் தன்னுடைய ராசியும் தான் அணிந்திருக்கும் உடையும் தான் காரணம் என எளிதாக நிம்மதியுடன் அன்றைய நாளை கடந்து சென்று விடுவார்கள். சிலரோ இன்றைய நாள் சிறப்பாக இல்லாததற்கு, நாம் காலையில் ராசிபலனைப் பார்த்து அதன்படி நடந்து கொள்ளாததுதான் காணமோ என்று கூட நினைக்கலாம். அப்படி மக்களின் மனதில் ஆழப்பதிந்த ஒரு விஷயம்தான் ஜோதிடம். அந்த வகையில், இன்று நீங்கள் சந்திக்கவிருக்கும் வாய்ப்புகள் மற்றும் சவால்கள் பிலவ வருட சுபநேரங்களில் நீங்கள் செய்யவேண்டியவை இவைதான்.

புது வருடப்பிறப்பு வாக்கிய பஞ்சாங்கம் – 14 – 04 -2021 – புதன் கிழமை அதிகாலை 1.39
திருக்கணித பஞ்சாங்கம் – 14 – 04 -2021 – புதன்கிழமை அதிகாலை 2.31 – மருத்துநீர் – வாக்கிய பஞ்சாங்கம் – 13-04-2021 14 – 04 -2021 – இரவு 9.39 முதல் அதிகாலை 5.39 வரை

திருக்கணித பஞ்சாங்கம் – 13-04-2021 14 – 04 -2021 – இரவு 10.23 முதல் அதிகாலை 6.23 வரை
அணியும் ஆடைகள் – நீலம், சிவப்பு பட்டாடை அல்லது நீலம் , சிவப்பு கரையுள்ள பட்டாடைகள்
அணியும் ஆபரணங்கள் – நீலம், பவளம் பதித்த ஆபரணங்கள் = சந்திர தோச நட்சத்திரங்கள் – அஸ்வினி, பரணி, கார்த்திகை (1ம் பாதம்), பூரம், உத்திரம் ( 2ம், 3ம், 4ம் பாதம்), அத்தம், சித்திரை (1ம், 2ம் பாதம்), பூராடம்.

கிரகப் பெயர்ச்சிகள் – ராகு – கேது பெயர்ச்சி – பிலவ வருடத்தில் பங்குனி மாதம் ராகு-கேது பெயர்ச்சி நிகழ்கிறது. பங்குனி மாதம் 7-ம் திகதி (21.3.2022), திங்கள்கிழமை அன்று மதியம் 2:52 மணிக்கு ராகு பகவான் ரிஷப ராசியிலிருந்து மேஷ ராசிக்குப் பெயர்கிறார். கேது பகவான் விருச்சிகத்திலிருந்து துலாம் ராசிக்குப் பெயர்கிறார்.

குருப்பெயர்ச்சி – குருபகவானின் வக்ர பெயர்ச்சி இந்த பிலவ வருடம் ஆவணியில் நிகழ்கிறது. அதாவது, ஆவணி மாதம் 29-ம் நாள் (14.9.2021) செவ்வாய்க் கிழமை அன்று, இரவு 9:48 மணிக்கு அவிட்ட நட்சத்திரம் 2-ம் பாதம் மகர ராசிக்கு (வக்ர பெயர்ச்சி) குருபகவான் பெயர்ச்சி ஆகிறார். அதேபோல், ஐப்பசி மாதம்-27 (13.11.2021) சனிக்கிழமை அன்று மாலை 6:10 மணிக்கு, அவிட்டம் 3-ம் பாதம் கும்ப ராசிக்குப் பெயர்கிறார். அதேபோல், பங்குனி-30 (13.4.2022) புதன்கிழமை அன்று நள்ளிரவுக்குப் பிறகு (விடிந்தால் வியாழன்) 4:09 மணிக்கு பூரட்டாதி 4-ம் பாதம் மீன ராசிக்குப் பெயர்கிறார்.

சனிப்பெயர்ச்சி – இந்தப் பிலவ வருடத்தில் சனிப்பெயர்ச்சி இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *