அதிசார குருப்பெயர்ச்சி பலன்கள்.. இந்த ராசிக்கு எதிர்பாராமல் அ டி க்கப்போகும் ராஜயோகம் என்ன?

ஆன்மீகம்

எதிர்பாராத ராஜயோகம் ……

திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் குருபகவான் ஏப்ரல் மாதம் 5ஆம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி வரை அதிசாரமாக கும்ப ராசியில் சஞ்சாரம் செய்கிறார். இதனால், இந்த அதிசார குருப்பெயர்ச்சியின் மூலமாக ஒவ்வொரு ராசிக்கும் ஏற்படக்கூடிய சுப மற்றும் அசுப பலன்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது.

இதுவரை மகர ராசியில் சஞ்சாரம் செய்து கொண்டிருந்த குருபகவான், ராசிக்கு இரண்டாம் இடத்தில் சஞ்சாரம் செய்கிறார். சுபரான குருபகவான் தான் நின்ற ராசியில் இருந்து. ஐந்தாம் பார்வையாக மிதுன ராசியையும், ஏழாம் பார்வையாக சிம்ம ராசியையும், ஒன்பதாம் பார்வையாக துலாம் ராசியையும் பார்வையிடுகின்றார்.

மேலும், குருபகவான் இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடமே நன்மை அளிக்கும் என்பது ஜோதிட விதியாகும். அதனால், குருவின் பார்வையால் மகர ராசியினர் மகர ராசிக்கு ஏற்படும் பலன்களை பற்றி பார்ப்போம். எ தி ர்பாராத தி டீ ர் தனவரவுகள் ஏற்படும். புதிய வாய்ப்புகளும், அதிர்ஷ்டமும் உண்டாகும். பங்குச்சந்தை தொடர்பான வியாபாரத்தில் லாபங்கள் மேம்படும். பணிபுரியும் இடங்களில் இருந்துவந்த பிரச்சனைகள் படிப்படியாக குறையும்.

வழக்கு தொடர்பான விஷயங்களில் இருந்துவந்த காலதாமதங்கள் குறையும். மேலும், பங்காளி மற்றும் தாய்மாமன் வழியில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை மேம்படும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் முயற்சிக்கேற்ப முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். வாழ்க்கை துணைவர் வழியில் தனவரவுகள் மேம்படும். வியாபாரம் நிமிர்த்தமான செயல்பாடுகளில் அரசு சார்ந்த உதவிகள் சாதகமாக அமையும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *