சிரிக்கும் குபேர பொம்மையை இந்த திசையில் வையுங்கள்! எதிர்பாராத அதிர்ஷ்டம் உங்க வீட்டு கதவை தட்டும் !!

ஆன்மீகம்

கடவுளாக குபேர பொம்மையினை வீட்டில் வைத்து வழிபட்டால் செல்வம் குவியும். சிலரது வீடுகளில் அலங்கார பொருட்களின் ஒரு அங்கமாக குபேர பொம்மை விளங்குகிறது. இன்னும் சிலரது வீடுகளில் இந்த பொம்மை பூஜை அறையில் காணப்படுகிறது. புத்த மதத்தை சார்ந்தவர்கள் கடவுளாக வணங்கும் இந்த பொம்மையின் உண்மை பெயர் சிரிக்கும் புத்தர். ஹிந்துக்களின் நம்பிக்கையில் முக்கியமான ஒருவராக கருதப் படுகின்றவர் குபேரன். இவரை வீட்டில் வைப்பதால் வீட்டில் குறையாத செல்வம் இருக்கும் என்பது எமது முன்னோர்கள் வழி வந்த நம்பிக்கையாகும். சரி வீட்டில் குபேர சிலையை வீட்டில் எங்கு வைக்க வேண்டும்? அப்படி வைப்பதால் என்ன நன்மைகள் கிடைக்கும் ?
வாங்க பார்க்கலாம்.

வீட்டின் கிழக்கு திசை தான் குடும்பத்தின் அதிர்ஷ்ட புள்ளியாக கருதப்படுகிறது. எனவே சிரிக்கும் குபேர பொம்மையை கிழக்கு திசையில் வைத்தால் வீட்டில் ஒற்றுமையும் சந்தோஷமும் அதிகரிக்கும். கிழக்கு திசையில் குபேர பொம்மையினை வைப்பதால் குடும்பத்திற்குள் ஏற்படும் சண்டைகள், சச்சரவு, வாக்குவாதத்தினால் ஏற்படும் மனகஷ்டம் தீரும்.

கிழக்கு திசையில் வைப்பதால் செல்வம் பெருகுவதோடு வாழ்க்கையில் வெற்றி கிடைக்க உதவிடும். நேர்மறையான எண்ணங்களை நமக்குள் கொண்டு வரும்.

குபேர பொம்மையை எங்கு வேண்டுமானாலும் வைக்கலாம். தென்கிழக்கு திசையில் வைத்தால் எதிர்பாராத அதிர்ஷ்டமும், அதிக வருமானமும் கிடைக்கும்.

சிரித்து கொண்டு இருக்கும் பொம்மையை பார்க்கும் போது மன அழுத்தம் குறைகிறது. பிரச்சனைகளை எதிர்நோக்குவதற்கு புது நம்பிக்கை நமக்கு கிடைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *