உங்களில் யார் அந்த லக்கி தெரியுமா !! புதுவருடத்தில் இந்த 6 ராசிகளுக்கு மட்டும் கனவுகள் நிறைவேறும் !!

ஆன்மீகம்

இந்த 6 ராசிகளுக்கு கனவுகள் ….

ஒவ்வொரு சராசரி மனிதனின் கனவாக, ஆசையாக இருப்பது சொந்த வீடு கட்டி அதில் குடியிருக்க வேண்டும் என்பது தான். அந்த கனவை எப்போது நிறைவேற்றுவது என அதை நிறைவேற்றும் பொருட்டு தினமும் கடினமாக உழைக்க ஓடுவது மனிதனின் செயலாக இருக்கிறது. அப்படிப்பட்ட பெரிய கனவை நிறைவேற்ற ஒருவருக்கு கடின உழைப்பு மட்டும் இருந்தால் போதாது அவருக்கு சில அதிர்ஷ்டங்களும் இருப்பது அவசியம். இந்த 2021ம் ஆண்டில் கிரகங்களின் நிலை எந்தெந்த ராசிகளுக்கு வீடு கட்டும் ஆசையை நிறைவேற்றும் என்பதை அதிக லாபம் பெறும் ராசி அடிப்படையில் வரிசையாக பார்ப்போம்.

​ரிஷபம்
வீடு கட்டும் கனவை நினைவாக்குவதில் ரிஷப ராசிக்கு மிக அதிக வாய்ப்புள்ளது. இந்த ஆண்டு உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். உங்கள் ராசிக்கு சொத்து வாங்குதல் மற்றும் பணம் வரவு அதிகரித்தல் போன்ற நன்மை கிடைக்கும். ஒரு சிறிய வீட்டையாவது கட்டி விட வேண்டும் என நினைக்கும் உங்களின் கனவை நிறைவேற்ற முடியும். ஜனவரி 28ல் சுக்கிரன் தனுசு ராசியிலிருந்து மகரத்திற்குச் செல்லும் போது வீடு வாங்குவதற்கான உங்கள் விருப்பத்தை நிறைவேற்ற முடியும். அல்லது அதற்கான வேலையை ஏதேனும் ஒரு வகையில் ஆரம்பிக்கும் வாய்ப்பு உண்டாகும்.

​சிம்மம்
இந்த ஆண்டு சிம்ம ராசி மக்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உங்கள் வசதிகள் அதிகரிக்கும். இந்த ஆண்டு நீங்கள் நிறைய பணம் சம்பாதிக்க அல்லது லாபத்தை ஈட்ட முடியும். இந்த ஆண்டு, செவ்வாய் கிரகம் மற்றும் சுக்கிரன் ஆகியவற்றின் முழுமையான நற்பலன் சிம்ம ராசிக்கு கிடைப்பதால் வீடு கட்டி குடிபோவதற்கான மகிழ்ச்சியை அடைவதற்கு கனவை நிறைவேற்ற முடியும்.

​துலாம்
துலாம் ராசிக்கு மிக இனிமையானதாக இந்த ஆண்டு இருக்கும். குரு மற்றும் சனியின் ராசி சஞ்சாரம் மகரத்தில் அமைந்திருப்பதால், வாழ்க்கையில் நடக்கும் தொல்லைகள் நீக்கப்பட்டு, செல்வம் கிடைப்பதில் பல்வேறு வாய்ப்புகள் அதிகரிக்கும். பல ஆண்டுகளாக ஒரு வீட்டை கட்ட வேண்டும் என்ற ஆசையும், கனவுடன் இருந்து வந்த துலாம் ராசியினரின் விருப்பம் நிறைவேறும்.
இந்த விஷயத்தில் குடும்ப உறுப்பினர்களும் உங்களுக்கு ஆதரவளிப்பார்கள்.

​விருச்சிகம்
இந்த புதிய ஆண்டு விருச்சிக ராசி மக்களுக்கு மிகவும் இனிமையானதாக இருக்கும். சொத்து வாங்குதல் மற்றும் புதிய வீடு வாங்குதல், வீடு கட்டுதல் போன்ற கனவு காணக்கூடியவர்களுக்கு, உங்களின் விருப்பம் நிறைவேறுவதாக இருக்கும். இப்போது குரு மற்றும் சுக்கிர கிரகம் சேர்ந்து சஞ்சரிக்கும் நிலை செவ்வாய் கிரகத்தை அதிபதியாக கொண்ட விருச்சிக ராசியினருக்கு வீடு கட்டுவதற்கு இருந்த அனைத்து தாமதங்களையும் நீக்கி, நல்ல யோகத்தை உருவாக்குகிறது. இந்த ஆண்டு, சிலருக்கு நிலம் வாங்குவதற்கான முழுமையான வாய்ப்புகளும் ஏற்படும்.​

மீனம்
உங்கள் ராசிக்கு நிதி நிலை இந்த ஆண்டு உயரும் விதமாக சிறப்பாக இருக்கும், மேலும் ஏதேனும் ஒரு முதலீடு செய்ய வேண்டும் அது வீடு கட்டுவதில் செய்ய ஆசைப்படுபவர்களின் ஆசை உங்களின் திட்டமிடுதலின் மூலம் நிறைவேறும். வீடு கட்டுவதற்கான அதிர்ஷ்டமும் உங்களுக்கு உண்டாகும்.
ஒரு சிறிய வீடாவது கட்டிவிட வேண்டும் என்ற முயற்சியை மேற்கொண்டாலே உங்களின் கனவு நிறைவேறுவதற்கான சூழல் அமைந்துவிடும்.​

கடகம்
இந்த ஆண்டு கடக ராசிக்கு மிகவும் இனிமையானதாக இருக்கும். வீடு கட்டும் திட்டத்தை இந்த ஆண்டு முடிக்க முடியும். உங்களின் கனவை நிறைவேற்ற ஏதேனும் ஒரு வகையில் பண வரவு வந்து சேரும். சில பழைய முதலீடுகள் உங்களுக்கு சிறந்த வருமானத்தையும் தரும். இது உங்களின் ஆசையை நிறைவேற்றுவதற்கான ஆதரவைத் தரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *