அனைவரையும் ஆச்சரியப்பட வைத்த ஒரு அசத்தல் கல்யாணம்!! தமிழனை கரம் பிடிக்க வெளிநாட்டு பெண் செய்த செயல் என்ன தெரியுமா !!

காணொளி

கல்யாணம் ஆயிரம் காலத்து பயிர் என்று கூறுவார்கள். காதல் என்றாலும் சரி கல்யாணம் என்றாலும் சரி இரண்டுக்குமே அடிப்படையாக இருப்பது என்னவோ அன்புதான். ஆயினும் காதலிக்கும்போது ஒருவர் மீது இருக்கும் அன்பிற்கும், கல்யாணத்திற்கு பின் ஒருவர் மீது இருக்கும் அன்பிற்கும் உளவியல் ரீதியாக பல வித்தியாசங்கள் உள்ளன. கல்யாணம் என்பது அனைவரது வாழ்க்கையிலும் நடக்கும் முக்கியமான நிகழ்வுகளில் ஒன்று. அது சிலருக்கு சிறப்பானதாக அமைந்து விடுகிறது.

ஆனால் சிலருக்கு மிகவும் மோசமானதாக நடந்துவிடும். அதேசமயம் வித்தியாசமான பல திருமணங்களை நாம் இன்றும் பார்த்து வருகிறோம். அந்தவகையில் ஸ்வீடனை சேர்ந்த பெண்ணுக்கும், தமிழக இளைஞருக்கு நடைபெற்ற திருமணத்தின் புகைப்படங்கள் வைரலாகியுள்ளது.

தமிழகத்தின் திருச்செங்கோடு சாணார் பாளையம் பகுதியைச் சேர்ந்த தம்பதி சண்முகவேல் – தமிழரசி. இவர்களின் மகனான தரணி, பட்டப்படிப்பை முடித்துவிட்டு சுவீடனில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். அங்கு காதல், மொழி, மதம், நாடு ஆகியவை இல்லை என்பது போல அவருக்கும் சுவீடன் நாட்டின் மரினா சூசேன் என்பருக்கும் காதல் மலர்ந்துள்ளது.

இதையடுத்து தனது பெற்றோர்களிடம் கூற முடிவெடுத்த இருவருக்கும் பச்சை கொடி காட்டப்பட்டுள்ளது.எனவே, இரு வீட்டார் சம்மதத்துடன் சாணார்பாளையத்தில் மணமக்களுக்கு திருமணம் நடைபெற்றது. நாடு கடந்து இணைந்த இந்த தம்பதிக்கு இந்து, கிறிஸ்தவம் மற்றும் சுயமரியாதை முறைப்படி திருமண சடங்குகள் நடைபெற்றன.

எப்படியெனில் தாலி கட்டி திருமணம் செய்யாமல் இருவரும் மாலை மற்றும் செயின் மட்டும் மாற்றி கொண்டனர்.இதில் பாரம்பரிய உடை அணிந்தவாறு இரு வீட்டாரின் உறவினர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *