நீங்க தான் பாஸ் ரொம்ப அதிர்ஷ்டசாலி !! உங்கள் கையில் இந்த ரேகை இருக்கா ? யாரெல்லாம் இந்த அதிஷ்டத்தை கைகளில் வைத்துள்ளீர்கள் !!

ஆன்மீகம்

நீங்க தான் பாஸ் ரொம்ப அதிர்ஷ்டசாலி …..

நம்மில் பெரும்பான்மையானோருக்கு அன்றைய நாளை ராசிபலன் பார்த்து தொடங்கினால் தான் நிம்மதியாக இருக்கும். சிலரோ அன்றைய ராசிக்கான அதிர்ஷ்ட நிற ஆடையை அணிந்து தான் வெளியில் செல்வார்கள். அன்றைக்கு நடக்கும் எல்லா செயல்களுக்கும் தன்னுடைய ராசியும் தான் அணிந்திருக்கும் உடையும் தான் காரணம் என எளிதாக நிம்மதியுடன் அன்றைய நாளை கடந்து சென்று விடுவார்கள். சிலரோ இன்றைய நாள் சிறப்பாக இல்லாததற்கு, நாம் காலையில் ராசிபலனைப் பார்த்து அதன்படி நடந்து கொள்ளாததுதான் காணமோ என்று கூட நினைக்கலாம். அப்படி மக்களின் மனதில் ஆழப்பதிந்த ஒரு விஷயம்தான் ஜோதிடம். அந்த வகையில் உங்கள் கைரேகையில் உண்டாகும் என்னென்ன பலன்கள் எனப் பார்ப்போம்.

ரேகையில் 1வது வகை – இதய ரேகை நடுவிரலின் மேலே ஏறுவது போன்று இருந்தால், நீங்கள் மிகவும் புத்திசாலி, லட்சியக்காரர் மற்றும் யாரையும் சார்ந்த வாழ விரும்பாதவர்களாக இருப்பர். ஆனால் நீங்கள் எடுக்கும் எந்த ஒரு முடிவும் சிறப்பானதாக இருக்கும் மற்றும் சுயநலவாதியாக இருப்பர்.

ரேகையில் 2வது வகை – ஒருவேளை உங்கள் இதய ரேகை படத்தில் காட்டப்பட்டவாறு நடுவிரல் மற்றும் ஆள்காட்டி விரல்களுக்கு இடையே சென்றால், கருணை உள்ளம் மற்றும் நம்பிக்கையுள்ளவர்களாக இருப்பர். அதே சமயம் அதிக உணர்ச்சிவசப்படுவீர்கள்.

ரேகையில் 3வது வகை – இதய ரேகை ஆள்காட்டி விரலின் மேலே ஏறினால், நீங்கள் உங்கள் காதல் வாழ்க்கையில் நம்பிக்கையுள்ளவர்களாக இருப்பர். முக்கியமாக இந்த வகையினர் எந்த ஒரு கஷ்டமான சூழ்நிலையிலும், மனம் தளராமல் எதிர்கொள்வர் மற்றும் எப்போதும் சந்தோஷமாக இருப்பர்.

ரேகையில் 4வது வகை – இந்த வகையான இதய ரேகையைக் கொண்டவர்கள், பொறுமைசாலி, அக்கறையுள்ளவர்கள், அமைதியானவர்கள் மற்றும் அநியாயத்திற்கு நல்லவர்களாக இருப்பர். மொத்தத்தில் தன்னலமின்றி, பிறர் நலத்தில் மிகுந்த அக்கறை கொண்டவர்களாக இருப்பர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *