தோஷங்களில் இருந்து விடுபட வேண்டுமா … இனிமேல் இந்த வகையான தானங்கள் செய்தால் போதும் !!

ஆன்மீகம்

இந்த வகையான தானங்கள் …..

கோவில்களுக்கு உங்களால் முடிந்த அளவிற்கு தீபம் ஏற்ற எண்ணெய் தானம் செய்து வாருங்கள் கிரக தோஷங்கள் நீங்கும். கோவில்களில், மலை ஸ்தலங்களில் இருக்கும் குரங்குகளுக்கு வாழைப்பழம் கொடுத்து உதவுங்கள். அனுமாரின் ஆசி கிடைக்கும். வீரமும், ஞானமும் பிறக்கும். உங்கள் வீட்டு மொட்டை மாடியில் தினமும் ஏதாவது ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வையுங்கள். தெருக்களில், போஸ்ட் கம்பங்களில் சிறிய வாளியில், தண்ணீரை க ட் டி வையுங்கள்.

வாயில்லா ஜீவன்கள் அதில் தண்ணீர் குடித்த வந்தால் உங்களுக்கு எல்லா விதமான கிரக தோஷங்களும் நீங்கும். தினமும் கோலமிடும் பொழுது கோலமாவு பயன்படுத்தாமல் பச்சரிசியை அரைத்து வைத்துக் கொண்டு அதில் கோலம் போ ட் டு பழகுங்கள். அதை உண்ண வரும் எறும்பு மற்றும் ஏனைய சிறு உயிர்களும் பசியாறுவதால் உங்களுடைய வறுமை நீங்கும் என்பது ஐதீகம்.

பித்ரு தோஷம் நீங்க அகத்திக்கீரை மற்றும் வெல்லம் கலந்த பச்சரிசியை பசுமாட்டிற்கு அ டி க் க டி கொடுத்து வரவேண்டும். மீன்களுக்கு பொரி போ டு வது சிறு தோஷங்களை நீக்கும். ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த போது முடிந்த அளவிற்கு உடுக்க உடையும், உண்ண உணவும் தானமாகக் கொடுப்பது தோஷத்தைப் போக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *