பொய் சொல்வதில் இந்த 5 ராசியையும் அ டி ச்சிக்க யாருமே இல்லையாம்! இதுல உங்க ராசி இருக்கா !!

ஆன்மீகம்

பொய் சொல்வதில் ….

ஒவ்வொரு நபருக்கும் பல்வேறு விதமான பழக்க வழக்கங்கள் இருக்கும். ஒருசிலரின் குண நலன்கள் அனைவருக்கும் பிடித்ததாகவும், சிலரின் குணங்கள் இப்படியும் சிலர் இருப்பார்களா என்று நினைக்கத் தோன்றும். சிலரின் அடையாளமாக அவர்களின் குணங்கள் காட்டுவதாக இருக்கிறது. அப்படி சிலர் பொய்களைக் கூறுவதில் வல்லவர்களாக இருப்பார்கள். ஜோதிடத்தில் பொய்யர்களாகப் பார்க்கப்படும்.

விருச்சிகம்
விருச்சிக ராசியினர் இந்த விஷயத்தில் நம்ப முடியாதவர்கள். இவர்கள் பொய் சொல்வதில் கில்லாடிகள். இவர்கள் தங்களுக்காக, தங்களின் வேலைக்காக பொய் சொல்ல வேண்டியிருந்தால் அதை அவர்கள் எளிதில் செய்து விடுவார்கள். இவர்களின் நெருக்கடியான நேரத்தின் போதும், தொழில், வியாபார மேம்படுத்துவதற்கும், புதிய ஆர்டர்களைப் பெறுவதற்கும் பொய்களை எளிதில் அவிழ்த்துவிடுவார்கள்.

​கடக ராசி
கடக ராசியினர் எதிலும் வேகமானவர்களாகக் கருதப்படுகிறார்கள். இவர்களுக்கு நெருக்கடியான நிலை வரப்போகிறது என உணரும் போது எந்த ஒரு பொய் சொல்லவும் தயங்க மாட்டார்கள். பொய் சொல்வது இவர்களுக்கு கை வந்த கலை. ஜோதிடத்தில் சந்திரனுக்கு சொந்தமான ராசி என்பதால் இவர்களுக்கு பொய் சொல்வது பழக்கமாக இருக்கும். இருப்பினும் இவர்கள் தங்களை நம்பியோரை ஏமாற்றமாட்டார்கள்.

மிதுனம்
மிதுன ராசியினர் மிகவும் கனிவானவர்கள் என்றும் எதையும் தீவிரமாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள் என்றும் நம்பப்படுகிறது. இந்த ராசியினர் பெரும்பாலும் இரட்டை தன்மையோடு வாழ்கிறார்கள். இவர்கள் தேவைப்படும் நேரத்தில் தங்கள் பொய்யை சில உண்மைகளுடன் கலந்து உறுதியாக முன் வைக்கக் கூடியவர்களாக இருப்பார்கள்.

​மீனம் ராசி
மீன ராசியினர் சற்று சுயநலவாதிகள் என்று நம்பப்படுகிறார்கள். இவர்கள் தங்களை எப்போதும் நல்லவர்களாகக் காட்டிக் கொள்ள முயற்சி செய்வார்கள். அதற்காக சில பொய்களைக் கூட சொல்வார்கள். தங்களை நல்லவர்களாக காட்டிக்கொள்ள சில பாசாங்குகளைச் செய்பவர்களாக இருப்பார்கள்.

சிம்ம ராசி
சிம்ம ராசியினர் பொய் சொல்வதில் அரசனாக பார்க்கப்படுகிறது. இவர்கள் மற்றவர்களுக்காகவும், தங்களுக்காகவும் நாசூக்காக முன் வைக்க முயல்வார்கள். இவர்கள் சூழ்நிலைக்கு ஏற்பட பொய் சொல்லலாமா அல்லது உண்மையைச் சொல்லலாமா என்று முடிவு செய்கிறார்கள். அவர்கள் பொய்யை மிக தெளிவாகப் பேசுகிறார்கள், அதை யாரும் கண்டுபிடிக்கும் முன் நிலைமை கடந்து போய்விடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *