ஸ்வஸ்திக் சின்னம் எந்த கையில் வரைய வேண்டும் !! வரைவதால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன தெரியுமா !!

ஆன்மீகம்

ஸ்வஸ்திக் சின்னம் ….

ஸ்வஸ்திக்” சின்னம் என்றால் தடையற்ற நல்வாழ்வு என்பது பொருள். வெற்றியைத் தேடி தருவது ஸ்வஸ்திக் சின்னமாகும். இதிலுள்ள எட்டு கோடுகளும் எட்டு திசைகளை குறிக்கும். ஸ்வஸ்திக் சின்னத்தில் நடுவில் வைக்கப்படும் புள்ளி நம் ஆ த் மா.  ஆதிகாலம் தொட்டு மனிதன் கடவுளுக்கு உருவம் கொடுத்தே வழிபட்டு வந்திருக்கிறான். இன்று உருவ வழிபாடுகளை குறை கூறும் மதத்தினர் கூட ஏதாவது ஒரு சின்னத்தை வைத்தே தங்களின் இறைவனை வழிபட்டுக்கொண்டிருக்கின்றனர்.

அப்படி பண்டைய கால மனிதர்கள் இறைவனைக் குறித்த தேடலிலிருந்த போது எல்லாவற்றிற்கும் பல நன்மைகளை அளிக்கக்கூடிய சின்னங்களை உண்டாக்கி, அதை தங்கள் இறைவழிபாட்டில் பயன்படுத்தினர். அந்த வகையில் நம் நாட்டின் பெரும்பாலான மக்கள் இன்றும் பயன்படுத்தும் மிகப் பழமையான “ஸ்வஸ்திக்” சின்னத்தை பற்றிய சில விடயங்களை இங்கு தெரிந்து கொள்வோம்.

வெற்றியைத் தேடி தருவது ஸ்வஸ்திக் சின்னமாகும். விநாயகர் கைகளில் மங்கள சின்னமான ஸ்வஸ்திக் திகழ்கிறது. செங்கோண வடிவில் மேலிருந்து கீழாகவும்,இடமிருந்து வலமாகவும் ஒன்றுக்கொன்று குறுக்கில் செல்லும் கோடுகளே ஸ்வஸ்திக்.இதனை பூஜையறை வாசலில் கோலமாக இடுவர். வீட்டு நிலையில் மஞ்சள் குங்குமம் கொண்டு இதை வரைவதுண்டு.

வெற்றியை தேடித்தரும் சின்னம் ஸ்வஸ்திக் சின்னம்…
இந்த “ஸ்வஸ்திக்” “6000” ஆண்டுகளுக்கு முன்பு முதலில் “சிந்து சமவெளி” நாகரீகத்தில் உருவானதாகவும், பிறகு இச்சின்னம் உலகின் மற்ற கலாச்சாரங்களுக்கு பரவியதாகவும் ஆய்வாளர்களால் கருதப்படுகிறது. பண்டைய காலத்தில் இருந்தே “இந்து, புத்தம், ஜைன” மதங்களில் ஒரு தெய்வீக சின்னமாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது. மேலும் “ஐரோப்பிய” கண்டத்தில் “கிறிஸ்தவ” மதம் பரவுவதற்கு பலநூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே இச்சின்னத்தை அங்கிருந்த “கிரேக்க, ரோமானிய” நாகரீகத்தினர் பயன்படுத்தி வந்துள்ளனர்.

19 ஆம் நூற்றாண்டுகளில் இச்சின்னத்தைப் பற்றி அதிகம் ஆராய்ந்த ஜெர்மானிய அறிஞர்கள், இச்சின்னம் “இந்தோ-ஐரோப்பிய” “ஆரிய” இன மக்களின் சின்னம் என்று கூறினர். ஆரிய இனவாத கொள்கையில் நம்பிக்கை கொண்ட “ஜெர்மானிய” சர்வாதிகாரி” அடால்ப் ஹிட்லர்” 1920 ஆம் ஆண்டு தனது “நாஜி” கட்சியின் சின்னமாக இந்த ஸ்வஸ்திக் சின்னத்தை வடிவமைத்தார். அதன் காரணமாக பல ஆண்டுகள் இந்த ஸ்வஸ்திகா இனவெறுப்பிற்குரிய ஒரு சின்னமாக மக்களால் பார்க்கப்பட்டது. இப்போது இச்சின்னத்தின் உண்மையையான நோக்கத்தை உலகின் பெரும்பாலான மக்கள் அறிந்துள்ளனர்.

ஸ்வஸ்திக் உணர்த்துவது:
நான்கு வேதமங்கள் – ரிக், யஜுர், சாம, அதர்வண நான்கு திசைகள் – கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு நான்கு யுகங்கள் – சத்ய, த்ரேதா, துலாபார, கலியுகம் நான்கு ஜாதிகள் – பிராமண, ஷத்ரிய, வைஷ்ய, சூத்திர நான்கு யோகங்கள் – ஞான, பக்தி, கர்ம, ராஜ நான்கு மூலங்கள் – ஆகாயம், வாயு, நீர், நிலம் வாழ்க்கையின் நான்கு பருவங்கள் – குழந்தை, பிரம்மச்சரியம், கிரஹஸ்தர்,

சந்நியாசி ஸ்வஸ்திக், ஓம், திரிசூலம் போன்றவற்றை வாசல் கதவின் உள்பக்கமோ, வெளிப்பக்கமோ ஒட்டி வைத்தால் அது வீட்டினுள் துஷ்டசக்தியை நுழையவிடாமல் காக்கும். இந்த சின்னங்களை காலில் மிதிப்படாத இடங்களில் போடுவது நன்மை உண்டாகும். நன்மை தரக்கூடிய கோலங்களை பூஜையறையில் போ ட் டு பலன்பெறவேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *