அரச மரத்திற்கும், வேப்ப மரத்திற்கும் திருமணம் செய்த மக்கள் !! என்ன காரணம் தெரியுமா !!

ஆன்மீகம்

அரச மரத்திற்கும், வேப்ப மரத்திற்கும் …

திருவண்ணாமலையின் ஆரணி அருகே உள்ள நரியம்பேட்டை கிராமத்தில் மிக பழமைவாய்ந்த ஸ்ரீ தஞ்சியம்மன் ஆலயம் உள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் கோவில் கட்டுவதற்காக மரங்களை அகற்ற முயன்றுள்ளனர், அப்போது பெண் ஒருவர் மீது சாமி வந்து, வேப்ப மரம் மற்றும் அரச மரம் ஒன்றாக வளர்ந்து வருவதால் அதனை பாதுகாக்கும்படி அருள்வாக்கு கூறியுள்ளார்.

மேலும் அரச மரம் உலகம் காக்கும் சிவன் என்றும் வேப்பம் மரம் சக்தி என்றும் கூறியுள்ளார், இதனால் அம்மரங்களை பொதுமக்கள் பாதுகாத்து வந்தனர். இந்நிலையில் சமீபத்தில் பெண் ஒருவருக்கு அருள் வந்து, இரு மரத்திற்கும் திருமணம் செய்து வைக்க கூறியதாக தெரிகிறது, இதனையடுத்து கிராம மக்கள் ஒன்றாக இணைந்து பத்திரிக்கை அடித்து திருமணத்தை நடத்தியுள்ளனர்.

இதற்காக ஆலய வளாகத்திலேயே பந்தக்கால் நட்டும், மேளதாளத்துடன் சீர்வரிசைகள் நிரம்ப திருமணம் நடந்து முடிந்துள்ளது. இதற்கு முன்னதாக ஏற்கனவே அமைத்திருந்த யாகசாலையில் வைத்து பூஜித்த புனித நீரை இரண்டு மரங்கள் மீது ஊற்றி திருகல்யாணம் வைபோகம் திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.

மேலும் உலக ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க மரங்களை வளர்த்து மனிதனர்கள் பாதுகாக்க வேண்டும் எனவும் வழிபாடு செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *