மேமாத ராசிப்பலனில் இந்த மூன்று ராசிக்கு நடக்கபோகும் அதிர்ஷ்டம் ஆ ப த்துகள் என்ன தெரியுமா !!

ஆன்மீகம்

இந்த மூன்று ராசிக்கு ….

மே மாதத்தில் சுக்கிரன், சூரியன் ஆகிய கிரக பெயர்ச்சியும், சனி, புதன் ஆகிய கிரகங்கள் வக்கிர நிலை அடைய உள்ளன. ஒவ்வொரு ராசியில் அமைந்துள்ள கிரக அமைப்பைப் பொறுத்தும் எப்படிப்பட்ட பலன்களை மேஷம், ரிஷபம், மிதுனம் ஆகிய ராசிகளுக்கு கிடைக்கும், கவனமாக இருக்க வேண்டிய நாட்கள் என்ன என்பதை பற்றி பார்ப்போம். மே மாத கிரக நிலை – மேஷத்தில் சூரியன் சுக்கிரன் – ரிஷப ராசியில் புதன், ராகு – மிதுனத்தில் செவ்வாய் – விருச்சிகத்தில் கேது – மகரத்தில் சனி – கும்பத்தில் அதிசார குரு

மேஷம்
உங்கள் ராசிக்கு பாதகாதிபதி சனி. அசுவினி கேது, பரணி சுக்கிரன், கார்த்திகை சூரியனுக்குரிய நட்சத்திரம். ராசி நாதன் செவ்வாய்க்கு பகை வீடான சுக்கிரன் அதிபதியாகக் கொண்ட தைரிய வீரிய ஸ்தானமான மிதுன ராசியில் அமர்ந்துள்ளார். மிதுன ராசிக்கு குருவின் 5ம் அதிசார பார்வை பலன் கிடைப்பதால் நன்மையே ஏற்படும். சிலருக்கு இடமாற்றம், பயண ஏற்படலாம். உங்களின் தொழில், வேலையில் எந்த ஒரு அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம்.

உங்கள் ராசிக்கு 2,7க்கு உடைய சுக்கிரன் உங்கள் ராசியில் மே 5 வரையிலும், அதன் பின்னர் ரிஷப ராசியில் சஞ்சாரம் செய்வதால் உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மேலும், தம்பதியிடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். ஆடை ஆபரண சேர்க்கை, சுகங்கள் அதிகரிக்கும். அரசியலில் உள்ளவர்களுக்கு கெளரவமான பலன்கள் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவர். தாயின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.கணவன் மனைவி உறவில் மற்றவர்களின் தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்ளவும். பரிகாரம் – செவ்வாய் மிதுன ராசியில் இருக்கும் போது மாதம் பிறப்பதால், முருகன் வழிபாடு செய்வது நல்லது.

ரிஷபம்
ரிஷப ராசியினரே மிகப்பெரிய மாற்றங்கள் உங்களுக்கு காத்திருக்கிறது. கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்குப் பிறகு ராசிக்கு ராசிநாதன் சுக்கிர பகவான் சஞ்சாரம் நிகழ உள்ளது. அதோடு சூரியனும் மாதத்தின் மத்தியில் சஞ்சாரம் செய்ய உள்ளார். இதனால் எல்ல கிரக அமைப்பும் நல்ல வலுவானதாகிறது. எப்போது ராசியில் ராசி நாதனும் வலுவானதாக மாறுகிறதோ அப்போது உங்களின் பலம் அதிகரிக்கும்.

தனவாக்கு, குடும்ப அதிபதி புதன் இந்த மாத தொடக்கத்தில் ராசியில் இருப்பது மேலும் விசேஷமாகும். நீண்ட காலத்திற்குப் பிறகு உங்களுக்கு முன்னேற்றம் தரக்கூடிய காலமாக இருக்கும். அரசு வழியில் உங்களுக்கு நடக்க வேண்டிய செயல் நடக்கும். வீடு மனை சார்ந்த வேலைகள் சிறப்பாக நடக்கும். தொழில், உத்தியோகத்தில் உங்களுக்கு இருந்த பிரச்சினைகள் நீங்கி யோகம் தருவதாக இருக்கும். உங்களுக்கு புதிய வாய்ப்புகள் ஏற்படும்.

கலைத் துறையில் உள்ளவர்களுக்கு சிறப்பான முன்னேற்றம், யோகத்தை எதிர்பார்க்கலாம். அரசு துறையில் உள்ளவர்களுக்கு பாராட்டு கிடைக்கலாம். மாணவர்கள் சற்று கவனமாக படிக்க வேண்டியது அவசியம். மாற்றங்கள் உண்டாகும். தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். பொருளாதார முன்னேற்றம் நீங்கள் நினைத்தபடி இருக்கும். பரிகாரம் – அருகில் இருக்கும் நரசிம்மர் ஆலயங்களுக்குச் சென்று வரலாம்.

​மிதுனம்
மிதுன ராசியில் செவ்வாய் அமர்ந்திருக்கிறார். அதே போல குருவின் அதிசார பெயர்வில் 5ம் பார்வை பலன் உங்கள் ராசி மீது விழுவது விசேஷம். உங்கள் ராசி மீது குருவின் பார்வை விழுவதால் அஷ்டம சனி பிரச்னை குறையும். அதே போல ராசியில் இருக்கும் செவ்வாயின் பலம் அதிகரிக்கவும் உதவும்.
ராசிக்கு ஒரு சுப கிரகத்தின் பார்வை கிடைப்பது மிக சிறப்பானது. இந்த மாதம் முழுவதும் குருவின் சுப பார்வை இருக்கும் என்பதால் உங்களுக்குத் தீய கிரக அமைப்பால் ஏற்படக்கூடிய பிரச்னை குறைவதற்கான நல்ல அமைப்பு உள்ளது.

உங்கள் ராசிக்கு 12ல் இருப்பதால் ஏற்படக்கூடிய உடல் நல பிரச்சினைகள், உடல் வலி போன்றவை தீரும். உங்களின் தொழில், வியாபாரம் மிக சிறப்பாக நடக்க வாய்ப்புள்ளது. உங்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் புதிய வாய்ப்புகள், ஆர்டர்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய இடத்தில் வேலை, அல்லது இடமாற்றம் கிடைக்க வாய்ப்புள்ளது. இதுவரை வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு புதிய வேலை கிடைக்க வாய்ப்புள்ளது.

உங்களுக்கு இருந்த கஷ்டங்களும், இக்கட்டான நிலை நீங்கும். உங்களுக்கு பொருளாதார ரீதியாக முன்னேற்றம் கிடைக்கும். 6-ல் கேது அமர்ந்திருந்தாலும் கூட உடல் ஆரோக்கியம் சிறப்பாக தான் இருக்கும். சிறிய அளவிலான உடல் பிரச்சினை தரலாம். திருமணம் உள்ளிட்ட சுப காரிய வாய்ப்பை நீங்கள் செய்ய ஏற்றதாகும். திருமண முயற்சி கை கூடும். குழந்தை பாக்கியம் உண்டாக நல் வாய்ப்புள்ளது. தொழில், வேலை என எது செய்தாலும் நல்ல லாபம் கிடைக்கும் சூழல் இருக்கும். புதிய தொழில் தொடங்க, புதிய முயற்சி எடுக்க இந்த மாதம் உங்களுக்கு நன்மை தரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *