மறந்தும் கூட இனி இந்த தவறுகளை செய்து விடாதீர்கள் !! கோவிலில் செய்யக் கூடாத காரியங்கள் என்னென்ன தெரியுமா !!

ஆன்மீகம்

மறந்தும் கூட இனி ….

கோவில் என்பது புனிதமான ஒரு இடம் ஆகும். இது கடவுள் குடியிருக்கும் புனித ஸ்தலம் ஆகும். கோவில், கோயில் – என்ற இரண்டு தமிழ்ச் சொற்களும் தமிழர்களிடையே பன்னெடுங் காலமாகவே புழக்கத்தில் இருந்து வருகிறது. இருந்தாலும், இந்த இரண்டு சொற்களில் இலக்கணப்படி எது சரி? என்ற கேள்வியும் பல ஆண்டுகளாகவே இருந்து வருகிறது. கோவில் என்பதே சரி என்று ஒரு சாராரும் கோயில் என்பதே சரியென்று இன்னொரு சாராரும் விடைகூறி வருகின்றனர். கோ என்னும் தமிழ்ச் சொல்லுக்கு இறைவன், தலைவன், அரசன் என்றெல்லாம் பொருளுண்டு. இல் என்னும் தமிழ்ச் சொல்லானது இருக்கும் வீட்டைக் குறிக்கும். இறைவனின் இல்லத்தைக் குறிப்பிடுவதற்கு இந்த இரண்டு சொற்களையும் புணர்த்திக் கூறவேண்டும். அதாவது,கோ + இல் = இறைவனின் இல்லம்.

இதில் கோ என்னும் சொல்லின் இறுதியில் ஓ எனும் உயிர் தொக்கி நிற்கிறது. இல் என்னும் சொல்லின் முதலில் இ என்னும் உயிர் குறித்து நிற்கிறது. ஓ, இ என்ற இரண்டு உயிர்களும் புணரும்போது / சேரும்போது என்ன மாற்றங்கள் விளையும் என்று தமிழ் இலக்கண நூல்கள் கூறியுள்ளன. இவ்வாறு பல சிறப்பம்சங்களை கொண்டது தான் கோவில். இத்தனை சிறப்பம்சங்களை கொண்ட இக்கோவிலில் செய்யக் கூடிய காரியங்கள் மற்றும் செய்யக் கூடாத காரியங்கள் என்று பல உள்ளன. அந்த வகையில் கோயிலில் மறந்தும் கூட செய்யக் கூடாத தவறுகள் என்னவென்று பார்ப்போம்.

சிவன் கோவிலுக்கு செல்லும் போது முதலில் சிவனை வணங்கிய பின் தான் உமாதேவியை கும்பிட வேண்டும் பெருமாள் கோவிலுக்கு சென்றால் முதலில் தாயாரை கும்பிட்டுவிட்ட பின் தான் பெருமாளை கும்பிட வேண்டும் நவகிரகத்தை வழிபாடு செய்யும் போது கோவிலில் பிரதான தெய்வங்களை எல்லாம் வணங்கி விட்டு, கோவிலின் பிரகாரத்தை சுற்றி விட்டு தான் வணங்க வேண்டும்.ஆஞ்சநேயர் வழிபாடு செய்யும் போது ஆஞ்சநேயரை கும்பிட்டுவிட்டு ஒரு நிமிடமாவது கோவிலில் அமர்ந்துவிட்டு தான் வீட்டிற்கு செல்ல வேண்டும்.

விநாயகர் கோவிலுக்கு போனால் ஆலயத்தை ஒரு முறை சுற்ற வேண்டும். சிவன் கோவிலுக்கு போனால் மூன்று முறை ஆலய பிரகாரம் சுற்ற வேண்டும். பெருமாள் கோவிலுக்கு போனால் நான்கு முறை ஆலய பிரகாரம் சுற்ற வேண்டும். நவகிரகங்களை ஒன்பது முறை சுற்றி வர வேண்டும். அம்மன் கோவிலுக்கு வெள்ளிகிழமை செல்வது நல்லது. துர்க்கை அம்மனை ஞாயிறு அல்லது செவ்வாய் கிழமையில் ராகு காலத்தில் போய் வணங்கவேண்டும்… காளியம்மனை அஷ்டம திதியில் வணங்குதல் நல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *