அஷ்டமி விரதம் இருப்பதால் கிடைக்கும் பலன்கள் !! இவ்விரதம் இருப்பதின் மகிமை என்னவென்று தெரியுமா !!

ஆன்மீகம்

அஷ்டமி விரதம் இருப்பதால் …..

விரதம் என்பது ஒவ்வொருவருடைய வாழ்விலும் முக்கியமானதாக காணப்படுகிறது. விரதம் என்பது இந்துக்கள் ஆன்ம ஈடேற்றங்கருதிச் செய்யுஞ் சாதனைகளில் ஒன்று விரதம். விரதம் என்னும் சொல் உண்ணும் உணவை சுருக்குதல் அல்லது விடுத்தல் என பொருள்படும். உபவாசம், நோன்பு என்பன விரதத்துடன் தொடர்புடைய சொற்களாகும். உபவாசம் என்னும் சொல் இறைவனின் அருகே வசித்தல் என்ற பொருளைத் தரும். மேலும் ஒரு தினம் அல்லது பல தினங்கள் உணவு வகை எதனையும் விடுத்து இறை தியானத்தில் இருக்கும் நிலையே உபவாசம். விரதம் என்பது ஒரு வகை விஷேட வழிபாடு ஆகும்.

விரதத்தைக் கடைப்பிடிப்பவர்கள் ஐம்புலன்களையும் அடக்கி, திரிகரண சுத்தியுடன் இருத்தல் வேண்டும். மன அடக்கத்தை மேம்படுத்த முடியும். பெரியோர் கூறும் புண்ணியம் ஏழினுள் ஒன்று. விரதம் அனுஷ்டிப்பதனால் மனம் புத்தி முதலிய உட்கருவிகள் தூய்மை அடையும். இதனால் ஞானம், நல்லறிவு கைகூடும்.

பொதுவாக அஷ்டமியில் பைரவரை விரதமிருந்து வழிபடுவது சிறப்பானது என்றாலும், அந்த அஷ்டமி தினம் செவ்வாய்க்கிழமையில் வருவது கூடுதல் சிறப்பானதாகும். அன்றைய தினம் பைரவரை வழிபாடு செய்தால் கடன் தொல்லை தீரும். மன அமைதியோடு, குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிலவும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தடைபட்ட சுப காரியங்கள் இனிதே நடந்தேறும்.

மேலும் செவ்வாடை சாத்தி, சிவப்பு அரளிப்பூ மாலை சூட்டி, வெல்லம் கலந்த பாயசம், உளுந்து வடை, பால், தேன், பழம் நிவேதனம் செய்து, வெள்ளை பூசணிக்காயில் நெய் விட்டு தீபம் ஏற்றி விபூதி அபிஷேகம் செய்து வழிபட்டால் சகல யோகங்களும் வந்து சேரும். இதே போல் வெள்ளிக்கிழமையில் வரும் தேய்பிறை அஷ்டமியும் பைரவருக்கு மிகவும் உகந்த நாள். அன்றைய தினம் பைரவரை வணங்குவதால் லட்சுமி கடாட்சம் பெருகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *