சிலம்பம் சுற்றுவதில் செம மாஸ் காண்பிக்கும் தமிழச்சி !! ஆண்களுக்கு கூட இப்படியொரு திறமை இல்லையென கருத்து கூறும் செட்டிசன்கள் !!

வைரல்

மாஸ் காண்பிக்கும் தமிழச்சி ….

சிலம்பம் என்பது ஒரு தடியடி தமிழர் தற்காப்புக் கலை மற்றும் தமிழர்களின் வீர விளையாட்டு ஆகும். வழக்கில் இவ்விளையாட்டைக் கம்பு சுற்றுதல் என்றும் கூறுவர். இது தடியைக் கையாளும் முறை, கால் அசைவுகள், உடல் அசைவுகள் மூலம் தம்மைப் பாதுகாத்துகொ ள்தல் எனப் பல கூறுகளைக் கொண்ட விரிவான தற்காப்புக் கலை ஆகும். சிலம்பாட்டத்தில் எதிராளி வீசும் கம்பினைத் தடுத்தல், எதிராளியின் உடலில் சிலம்புக்கம்பினால் தொடுதல் போன்றன அடிப்படையாகக் கொள்ளப்படுகிறது.

சிலம்பாட்டத்தைக் கற்றுக்கொள்ளக் குறைந்தது ஆறு மாதக் காலம் தேவை. இதற்கென சிலம்பாட்டக் கழகங்கள் பல தமிழகத்தில் உள்ளன. சிலம்பாட்டம் ஆடுவதற்குக் குறைந்தது இருவர் வேண்டும். நன்கு பயிற்சி பெற்ற ஆட்டக்காரர்களே சிலம்பாட்டப் போட்டிகளில் விளையாடுவர், தற்காலத்தில் ஆண்கள், பெண்கள் என்று இருபாலரும் சிலம்பாட்டத்தைக் கற்று விளையாடி வருகின்றனர். இன்று எல்லா துறைகளிலும் பெண்கள் முன்னேறி வருகிறார்கள், பெண்கள் இல்லாத துறைகளே இல்லை என்று சொல்லும் அளவிற்கு பெண்கள் சமூதாயம் மாற்றம் கண்டு வருகிறது,

ஆண்களுக்கு நிகர் பெண்களும் ஓன்று என்ற சமத்துவம் மற்றும் சமநிலை ஏற்படுத்தபட்ட பின் நவீன உலகில் ஆண்களையும் மிஞ்சும் அளவிற்கு ஒரு வளர்ச்சியை பெண்களிடையே காண முடிகிறது. அதே நேரம் திறமை என்பது ஒரு சிலருக்கு பிறப்பில் இருந்தே ஏற்பட்டு விடுகிறது இன்னும் சிலருக்கோ அதை பயிற்சி செய்வதில் இருந்து வெளிப்படுகிறது. அந்த வகையில் தான் குறித்த பெண்ணின் செயலும் காட்சியும் பலரையும் ரசிக்கவும் ஆ ச் சர்யப்படவும் செய்துள்ளது.

தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *