அடிக்கடி சுடுதண்ணீர் குடிக்கிறீர்களா? அப்போ இந்த பி ரச்சனை வருமாம்!

மருத்துவம்

பொதுவாகவே சுடுதண்ணீர் குடிப்பது என்று கூறுவார்கள். அதிகமானவர்கள் தினமும் காலையில் வெந்நீர் குடிக்கும் பழக்கம் உடையர்களாகத்தான் இருப்பார்கள். ஒரு கிளாஸ் தண்ணீரை அரை கிளஸ்ஸாகும் படி காய்ச்சி அதில் எலுமிச்சை சேர்த்து குடித்தால் உடல்பருமன் குறையும், சளித்தொல்லை நீங்கும் . வெந்நீருக்கு உடலில் உள்ள கொழுப்புகளைக் கரைக்கும் சக்தி உண்டு. இதை பலர் சொல்ல நாம் கேட்டிருப்போம். அது உண்மைதான் அதை நாமும் பின்பற்றியிருப்போம். இது அனைத்தும் உண்மையாக இருந்த போதும் ஓரளவுக்கு மேல் வெந்நீர் குடிப்பதால் சில பக்க விளைவுகளும் உண்டாகத்தான் செய்கின்றன. இவ்வாறு நாம் அளவுக்கு அதிகமாக அடிக்கடி சுடுதண்ணீர் குடித்தால் என்ன என்ன பிரச்னைகள் எல்லாம் எற்படுகின்றது என்பதை இங்கு பார்க்கலாம்.

நமது உடலில் ர த் த ம் உடலின் எல்லா பகுதிகளுக்கும் சீராக கொண்டு செல்லப்படுகிறது. இதற்கு முக்கிய காரணியானது நமது உடலின் பெரும்பகுதி நீரால் ஆனது. இந்த நிலையில், நாம் அதிகமாக சுடுதண்ணீர் குடிப்பதால் எங்களது உடலில் காணப்படும் நீரோட்டத்தின் அளவு குறைவடைந்து செல்கிறது.

சூடான நீரை குடிப்பதால் எமது உடலின் உள்ளே இருக்கும் மென்மையான உறுப்புகள் பாதிக்கப்படும். அதே வேளையில் அதிக சூட்டுடன் நீரைக் குடிப்பதால் வாய் மற்றும் தொண்டைப் பகுதியில் உள்ள மெல்லிய நரம்புகள் பாதிக்கப்படுகின்றன. லிட்டர் கணக்கில் சூடு நீர் குடித்தாலும் தாகம் தீரவே தீராது.

அதிக அளவில் சுடுதண்ணீர் குடித்தால்,அதுவும் குறிப்பாக இரவில் குடித்தால் சரியாக தூக்கம் வராது. அதிக அளவில் வெந்நீர் குடித்தாலும், அளவுக்கு மீறிய சூடோடு அடிக்கடி குடித்து வந்தாலும் சிறுநீரகக் கோளாறு உண்டாகும்.மேலும் ர த் தத்தின் கன அளவு குறையும் வாய்ப்பு உண்டாகும்.

அது மட்டுமின்றி,எப்போதும் வெந்நீர் குடித்துவருவதால் அது, உடலில் உள்ள எலக்ட்ரோலைட்டுகளை அதிக அளவு நீர்மப்படுத்திவிடும். அதனால், தண்ணீரைப் பொருத்தவரையில் எப்போதும் அதிக குளிர்ச்சியாகவோ அல்லது அதிக சூடுடனோ குடிக்கக்கூடாது. வெந்நீர் குடிப்பது உடலுக்கு நல்லது தான். ஆனால் அது அளவோடும் மிதமான சூடோடும் இருக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *