ரொமான்ஸ் நிறைந்த நாள் யார் யாருக்கு தெரியுமா !! திருமண வாழ்க்கையில் யாருக்கெல்லாம் ஆ ப த்து உண்டு !!

ஆன்மீகம்

திருமண வாழ்க்கையில் …..

ஒவ்வொரு நாளும் கிரகங்களின் நிலை மாறும். இப்படி தினமும் மாறும் கிரகங்களின் சஞ்சாரங்களால் ஒவ்வொரு ராசிக்காரரின் பலனும் அன்றாடம் மாறுபடும். தினசரி ராசிப்பலன்கள் மூலம் நீங்கள் எந்த மாதிரியான சவால்களை எதிர்கொள்வீர்கள் என்பதை தெரிந்து கொள்ள முடியும். உங்கள் வாழ்க்கை ஏற்பட போகும் அனைத்து வகையான கேள்விகளுக்குமான விடை இங்கு கிடைக்கும். அந்த வகையில், இன்று நீங்கள் சந்திக்கவிருக்கும் வாய்ப்புகள் மற்றும் சவால்கள் என்னவென்று உங்களுக்குத் தெரியாவிட்டால் உடனே ராசிப்பலனைப் பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.

மேஷம்
ராசிக்குள் சந்திரன் இருக்கிறார். குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களுடன் அனுசரித்து செல்வார்கள். குடும்பத்தினருடன் திருமணம் பண்டிகையில் கலந்து கொள்ள நேரிடும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கி ரொமான்ஸ் பிறக்கும். உங்கள் துணை இன்று உங்களுக்காக எதாவது ஒரு செயலை ஸ்பெஷலாக செய்வார். காதல் விவகாரங்கள் களைகட்டும். உங்கள் சந்ததிக்காக திட்டமிட ஏற்ற நாள் இது. பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை.

ரிஷபம்
ராசிக்கு 12வது வீடான விரைய ஸ்தானத்தில் சந்திரன் சஞ்சாரம் உள்ளது. ரொமான்ஸ் உணர்வுகள் மனதிற்கு மகிழ்ச்சியை அதிகரிக்கும். உங்கள் காதல் துணை இன்று நீங்கள் எதிர்பாராத பரிசினை அளித்து இன்ப அதிர்ச்சி கொடுப்பார். இன்று பெண்கள் திறமையாக செயல்பட்டு காரிய வெற்றிகாண்பீர்கள். மதிப்பும், மரியாதையும் கூடுவதோடு மனோதைரியம் கூடும். எதிர்ப்புகள் விலகும்.

மிதுனம்
ராசிக்கு 11வது வீடான லாப ஸ்தானத்தில் சந்திரன் அமர்ந்துள்ளதால் பணம் வரும் வாய்ப்பு அதிகரிக்கும். காதல் வாழ்க்கையில் நல்ல வகையில் திருப்பம் ஏற்படும். இன்று எந்த சூழ்நிலையையும் அனுசரித்து செல்வீர்கள். வீண்குழப்பம், காரிய தடை ஏற்பட்டு நீங்கும். வாகனங்களில் செல்லும் போது கூடுதல் கவனம் தேவை. உடல் நலம் ஆரோக்கியமாக இருக்கும். காதல் வாழ்க்கை, திருமண வாழ்க்கையில் ரொமான்ஸ் அதிகரிக்கும். கவனதடுமாற்றம் உண்டாகலாம்.

கடகம்
தொழில் ஸ்தானமான 10வது இடத்தில் சந்திரன் அமர்ந்துள்ளதால் தொழில் வியாபாரத்தில் சீரான நிலை காணப்படும். எதிர்பார்த்தபடி ஆர்டர்கள் கிடைப்பது தாமதமாகலாம். அரசாங்கம் தொடர்பான காரியங்களில் மெத்தன போக்கு காணப்படும். பலருக்கு விருப்பமற்ற இடமாற்றம் உண்டாகலாம். இன்று நாள் முழுவதும் உங்கள் வாழ்க்கைத் துணையுடன் செலவிடுவீர்கள்.

சிம்மம்
ராசிக்கு 9வது வீட்டில் சந்திரன் அமர்ந்திருப்பதால் அப்பாவின் உடல் நலனில் சுணக்கம் காணப்படும். இன்று குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்களால் டென்ஷன் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படும். பிள்ளைகள் விஷயத்தில் கவனம் தேவை. தாய், தந்தையின் உடல் நலனில் எச்சரிக்கை தேவை. கடந்த கால மகிழ்ச்சியான நினைவுகள் உங்களை ஆக்கிரமித்திருக்கும். உங்களது சில வேலைகள் உங்கள் துணையின் உடல் நல கோளாறால் தடை படக்கூடும்.

கன்னி
ராசிக்கு 8வது வீட்டில் சந்திரன் அமர்ந்திருப்பதால் சந்திராஷ்டமம் இரவு வரை நீடிக்கிறது. பெண்கள் எதையும் செய்யும் முன்பு திட்டமிட்டு செயல்படுவது நல்லது. காதலருடன் அன்பாக பேசுங்கள். வாழ்க்கைத் துணையுடன் பயணங்கள் செல்லும் போது கூடுதல் கவனம் தேவை. எதிலும் மெத்தனமாக செயல்படுவதை தவிர்ப்பதும் முன்னேற்றத்திற்கு உதவும்.

துலாம்
ராசிக்கு 7வது வீடான களத்திர ஸ்தானத்தில் அமர்ந்து உள்ளதால் உண்மையான காதலை நீங்கள் இன்று உணருவீர்கள். அதற்கான நேரத்தை ஒதுக்குங்கள். பருவமழை போல உங்கள் வாழ்கை துணையின் அன்பு மழையில் இன்று நீங்கள் நனைந்து மகிழ்வீர்கள். இன்று காரிய வெற்றி உண்டாகும். குடும்பத்தில் அமைதி ஏற்படும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். பூமி, வீடு தொடர்பான பிரச்சனைகள் நல்ல முடிவுக்கு வரும். சகோதரர்களுடன் இருந்த மனவருத்தங்கள் நீங்கும்.

விருச்சிகம்
ராசிக்கு 6வது வீட்டில் சந்திரன் மறைந்துள்ளார். இன்று எதிர்பாராத செலவு உண்டாகலாம். அவ்வப்போது மனதில் குழப்பம் ஏற்படும். தாயின் உடல்நிலையில் கவனம் தேவை. இன்பச் சுற்றுலா திருப்திகரமாக அமையும். உங்கள் துணை உங்கள் மேல் அக்கரை காட்டுவதில்லை என்று உங்களுக்கு குறைபாடு இருக்கும். தொழில் வியாபாரத்தில் திடீர் சிக்கல் ஏற்படும். பணம் தடைபட்டாலும் கைக்கு வந்து சேரும். வியாபார பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைக்கும் போது கவனம் தேவை.

தனுசு
ராசிக்கு 5வது வீட்டில் சந்திரன் அமர்ந்திருப்பதால் பிள்ளைகள் உடல் நலனில் அக்கறை தேவை. உங்கள் அன்பிற்குரியவரின் மனநிலை ஊசலாட்டத்தில் இருப்பதால் வாழ்க்கைத் துணையுடனான ரொமான்ஸ் பாதிக்கும்.இன்று அலுவலகத்தில் பொறுப்புகளை கவனமாக செய்வது நல்லது. இயந்திரங்களில் பணி புரிபவர்கள் ஆயுதங்களை கையாள்பவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது செயல்படுவது அவசியம். குடும்பத்தில் இருப்பவர்களது பேச்சுக்கு எதிர்த்து பேசுவதை தவிர்ப்பது நன்மை தரும்.

மகரம்
ராசிக்கு 4வது வீட்டில் சந்திரன் உள்ளதால் அம்மாவிடம் சண்டை போட வேண்டாம். தாயாரின் உடல் நலனில் அக்கறை தேவை. கணவன், மனைவிக்கிடையே வீண்வாக்குவாதங்கள் ஏற்படலாம். குழந்தைகளிடம் அன்பாக பழகுவது நல்லது. பெண்களுக்கு கோபம், படபடப்பு குறையும். மற்றவர்களுடன் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். திடீர் செலவு ஏற்படும். இன்று உங்கள் திருமண வாழ்வில் சிக்கலான நாள்.

கும்பம்
ராசிக்கு 3வது வீடான முயற்சி ஸ்தானத்தில் சந்திரன் அமர்ந்திருப்பதால் உங்கள் கனவுகள் நனவாகி காதல் பேரின்பம் அள்ளி வழங்கும். முக்கியமானவர்களுடன் பேசும்போது வார்த்தைகளை தேர்ந்தெடுத்து பேசுங்கள். வாகனங்கள் மூலம் செலவு உண்டாகும். வீண் அலைச்சல் குறையும். கோபமான பேச்சு, டென்ஷன் குறையும். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தாமதம் உண்டாகும். சகோதரர் வழியில் நன்மை உண்டாகும்.

மீனம்
ராசிக்கு 2வது வீடான லாப ஸ்தானத்தில் சந்திரன் அமர்ந்திருப்பதால் பணம் வரும் வாய்ப்பு அதிகரிக்கும். இன்று மனதில் துணிச்சல் அதிகரிக்கும். உங்கள் காதல் வாழ்க்கை இன்று மிக சிறந்த விஷயத்தை உங்களுக்கு அளிக்க போகிறது. தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பணியாளர்கள் மூலம் நன்மைகள் கிடைக்கப் பெறுவார்கள். லாபம் கூடும். எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பரபரப்பு நீங்கி அமைதியாக பணிகளை கவனிப்பார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *