தொழில் மற்றும் வியாபாரத்தில் அதிக லாபங்களை பெறப்போகும் ராசியினர் !! யாரெல்லாம் கவனத்துடன் இருப்பது நல்லது தெரியுமா !!

ஆன்மீகம்

இன்றைய ராசிபலனில் ….

ஒவ்வொரு நாளும் கிரகங்களின் நிலை மாறும். இப்படி தினமும் மாறும் கிரகங்களின் சஞ்சாரங்களால் ஒவ்வொரு ராசிக்காரரின் பலனும் அன்றாடம் மாறுபடும். தினசரி ராசிப்பலன்கள் மூலம் நீங்கள் எந்த மாதிரியான சவால்களை எதிர்கொள்வீர்கள் என்பதை தெரிந்து கொள்ள முடியும். உங்கள் வாழ்க்கை ஏற்பட போகும் அனைத்து வகையான கேள்விகளுக்குமான விடை இங்கு கிடைக்கும். அந்த வகையில், இன்று நீங்கள் சந்திக்கவிருக்கும் வாய்ப்புகள் மற்றும் சவால்கள் என்னவென்று உங்களுக்குத் தெரியாவிட்டால் உடனே ராசிப்பலனைப் பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.

மேஷம் – மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் ஈடுபட்ட உள்ளவர்களுக்கு காலதாமதமான பலன்கள் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய உத்திகளை கையாள்வதன் மூலம் முன்னேற்றம் காணலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு ஊதிய உயர்வு சாதகப் பலன்கள் உண்டாகும். மன உளைச்சல் நீங்கி அமைதி உண்டாகும்.

ரிஷபம் – ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் வெற்றி அடையும். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன்களைக் கொடுக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் தொந்தரவு வலுவாக வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும்.

மிதுனம் – மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பொருளாதார ரீதியான ஏற்ற இறக்கங்களை திறம்பட சமாளித்து விடுவீர்கள். பண வரவு உண்டாகும் சிறப்பான பலன்கள் ஏற்படுகிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் மன அமைதி பெற பேச்சை குறைத்துக் கொள்வது நல்லது.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் பொறுமையை கையாளுவது நல்லது.

கடகம் – கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் தங்களுக்கு கீழ் பணிபுரியும் பணியாளர்களின் ஆதரவை பெறுவீர்கள். நீண்ட நாள் நண்பர்களுடன் பேசும் வாய்ப்பு உருவாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கவிடாமல் இடைஞ்சல்கள் ஏற்படும்.

சிம்மம் – சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர் களுக்கு மந்த நிலை மாற புதிய உத்திகளை கையாள்வது நல்லது. எதிலும் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய நண்பர்களின் அறிமுகம் முன்னேற்றத்திற்கான பாதையை வடிவமைத்துத் தரும்.

கன்னி – கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடி வரும். நீண்ட நாள் கனவு நிறைவேறுவதற்கான வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக செயல்பட்ட மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். புதிய தொழில் துவங்குபவர்களுக்கு சாதகமான பலன்கள் உண்டாகும்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் கைகூடி வரும். தொட்டதெல்லாம் துலங்கும் அற்புதமான நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொலைதூரத்திலிருந்து சுபச் செய்திகள் கிடைக்கப் பெறும்.

விருச்சிகம் – விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு வாகன ரீதியான பயணங்களில் எச்சரிக்கை தேவை. வெளியிடங்களுக்குப் பயணம் செய்யும் போது உடைமைகளை வைத்து கவனத்துடன் இருப்பது நல்லது. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு மனதில் அமைதி உண்டாகும். எதிலும் கவனம் தேவை.

தனுசு – தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை நீடிக்க வாய்ப்புகள் இருப்பதால் கூடுதல் முயற்சி தேவை. சகோதர சகோதரிகளின் ஒற்றுமை மேலோங்கி காணப்படும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த பிரச்சனைகள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சலுகைகள் கிடைக்கப்பெறும். கவலைகள் நீங்கும்.

மகரம் – மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மன அமைதி கிட்டும். உங்களுடன் இருந்து வந்த சில நபர்கள் உங்களுக்கு எதிராக செயல்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. கவலைகள் நீங்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் பகைவர்களின் தொல்லை அதிகரிக்கும் வாய்ப்புகள் இருப்பதால் எச்சரிக்கை தேவை.

கும்பம் – கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு புதிய முதலீடுகள் செய்து அதிக லாபங்களை காரணம் யோகம் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறும். இன்றைய நாள் யோகம் தரும் அமைப்பாக இருப்பதால் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் சிறப்பான பலன்களை கொடுக்கும்.

மீனம் – மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த குழப்ப நிலை மாறும். தி டீ ர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் வீட்டின் கதவை தட்டும். கணவன் மனைவிக்கு இடையே புரிதல் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நன்மைகள் நடைபெறக் கூடிய அற்புதமான நாளாக அமையும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *