ஒருவருடைய பிறந்த நேரம் கூறும் பலன்கள் என்னென்ன தெரியுமா !! இந்த நேரத்தில் பிறந்தவர்கள் இப்படித் தான் இருப்பார்களாம் !!

ஆன்மீகம்

பிறந்த நேரம் கூறும் பலன்கள் ….

ஜோதிடத்தில் பல வகை உண்டு. அதில் முக்கியமானது ஒருவர் பிறந்த நேரத்தை வைத்து அவர்குணாதிசயங்களை கணிப்பது. 12 ராசிகளும் ஐம்பூதங்களின் தன்மைக்கு ஏற்ப ஆகாயத்தைத் தவிர, நிலம், நீர், காற்று, நெ ரு ப்பு ஆகிய நான்கு வகைக்கும் மூன்று மூன்றாகப் பிரிக்கப்படுகிறது. அந்த இயற்கைப் பொருள்களின் தன்மைக்கேற்பவும் கோள்களின் இயக்கங்களுக்கு ஏற்பவும் பலன்கள் கணிக்கப்படுகின்றன.

அந்த கோள்களின் இயக்கங்களுக்கு ஏற்ப இயற்கையின் செயல்பாடுகள் மாறும். அதை அடிப்படையாக வைத்து கணிக்கப்படுவது தான் ஜோதிடம். இது நம்முடைய முன்னோர்களின் வானியல் அறிவுக்கு ஓர் சிறந்த எடுத்துக்காட்டு. நடுஇரவு 12 – 2 மணிஇந்த நேரத்தில் பிறந்தவர்கள் தங்கள் குடும்பத்துக்கு எப்போதும் முன்னுரிமை அளிப்பார்கள். சமூக சூழல் விடயத்தை இவர்கள் நம்பிக்கையோடு கையாளுவார்கள்.

காலை 2 – 4 மணிஎல்லா விடயத்திலும் ஆர்வமாக இருக்கும் இவர்கள் புதிய கண்டுப்பிடிப்புக்காக மெனக்கெடுவார்கள். எழுதுவது, படிப்பது பிடித்த விடயமாக இருக்கும் இவர்கள் நட்புக்கு உண்மையாக இருப்பார்கள். காலை 4 – 6 மணிஇந்த நேரத்தில் பிறந்தவர்கள் வருங்கால வாழ்க்கை பற்றி அதிக அக்கறை கொண்டிருப்பார்கள். வளங்களை பாதுகாக்க விரும்பும் இவர்கள் மற்றவர்களை ஊக்கப்படுத்துவார்கள்.

காலை 6 – 8 மணிஇயற்க்கையிலேயே தலைவருக்கான பண்பு இந்த நேரத்தில் பிறந்தவர்களுக்கு இருக்கும். அவர்களிடமே அவர்கள் பலவிதமான கோரிக்கைகளை வைத்து கொள்வார்கள்.காலை 8 – 10 மணிஇந்த நேரத்தில் பிறந்தவர்கள் தனிமை விரும்பியாக இருப்பார்கள். எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடிய சுபாவம் கொண்ட இவர்கள் அதை தியானம் செய்வதன் மூலம் மாற்ற முடியும்.

காலை 10 – 12 மணிபுதிய நட்புகள், ஜாலியான விடயங்களுக்காக இவர்கள் மெனக்கெடுவார்கள். தங்களுக்கு பிடித்த விடயத்தை விரும்புகிறவர்களிடமே இவர்கள் நட்பு பாராட்டுவார்கள்.மதியம் 12 – 2 மணிஇந்த நேரத்தில் பிறந்தவர்கள் லட்சியமும், பொறுப்பும் அதிகம் கொண்டிருப்பார்கள். இவர்கள் பணியில் சாதனை செய்தாலும் அது அவர்கள் குடும்ப வாழ்க்கையை பாதிக்கலாம்.

மாலை 4 – 6 மணிநேர்மறை எண்ணங்கள் கொண்ட இவர்கள் தங்கள் மனதில் இருக்கும் முக்கிய விடயங்களை வெளிகாட்டி கொள்ள தயங்குவார்கள்.மாலை 6 – 8 மணிஇந்த நேரத்தில் பிறந்தவர்கள் அடுத்தவர்களின் தேவையை புரிந்து கொள்வார்கள். வாழ்க்கை எப்படியோ அதை அதன்படியே வாழ்வார்கள். இரவு 10 – 12 மணிஇந்த நேரத்தில் பிறந்தவர்கள் தங்கள் தேவைகளை சரியாக புரிந்து வைத்திருப்பார்கள். நினைத்த லட்சியத்தை அடையும் திறமையும் இவர்களுக்கு இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *