வக்ர சனிப்பெயர்ச்சி 2021- எந்த ராசியில் இருந்து செல்கிறார்? 12 ராசியில் யாருக்கு அதிர்ஷ்டம்!

ஆன்மீகம்

வக்ர சனிப்பெயர்ச்சி அதிர்ஷ்டம் ….

இந்த சனி வக்ரபெயர்ச்சி 2021 மே 12-ம் தேதி முதல் செப்டம்பர் 29-ம் தேதி வரை நிகழ உள்ளது. சனி வக்கிரத்தால் எப்படிப்பட்ட பலன் ஏற்படும் என்றால் 12 ராசி அல்லது லக்கினங்களுக்கு எந்த வீட்டில் அமர்கிறார். உங்கள் ஜாதகத்தில் சனி எங்கு அமர்ந்திருக்கிறார், எந்த வீட்டின் அதிபதி என்பதைப் பொருத்து தான் இந்த சனி வக்ர பெயர்ச்சி பலன் கிடைக்கும். இந்த வக்ர பெயர்ச்சியின் போது சனி தனுசு ராசிவரை பின்னோக்கி வந்து மீண்டும் தனுசு ராசிக்கு திரும்புவார்.

ஆனால், திருக்கணித பஞ்சாங்கத்தின்படி இந்த சனி வக்ர பெயர்ச்சியின் போது சனி பகவான் தற்போது சஞ்சரித்து வரும் மகர ராசியிலேயே பின்நோக்கி வருகிறார். நவகிரகங்களில் சனி பகவான் தான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆக அதிக காலம் அதாவது சராசரியாக இரண்டரை ஆண்டுகள் எடுத்துக் கொள்வார்.

இதன் காரணமாக தற்போது வக்ர சனி பெயர்ச்சியின் போது தனுசு ராசி வரை வந்து மீண்டும் வக்ர நிவர்த்தி ஆகி மகரத்திற்கு திரும்புவார் என கூறப்படுகிறது. ஒரு ராசியில் சனி பலம் குறைவாக இருந்தால் சனி வக்ர நிலையிலால் குறைவான பலன்களும், சனி பலம் பெற்று இருந்தால் நல்ல பலன்கள் அதிகமாகவும் கிடைக்கும். மேலும்,

பொதுவாக சுப கிரகங்கள் வக்ர பெயர்ச்சி அடையும் போது சுப பலன்களைத் தருவார்கள். ஆனால் அசுப கிரகங்கள் வக்ர பெயர்ச்சி அடையும் போது சில மோசமான பலன்களை கலந்து தான் தருவார்கள். சனி தசை, சனி புத்தி நடப்பவர்களுக்குச் சற்று தீய பலன்கள் பெறுவார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *